கூடங்குளம் அணு உலைப் போராட்டத்தின் வரவு செலவுக் கணக்கு இதோ !
அணுஉலை எதிர்ப்பு போராட்டத்தின் 200 வது நாள் எட்டியதை முன்னிட்டு,
அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கம் தங்கள் பணபரிவர்த்தனைகள்(a statement of
accounts) முழுவதுமாக வெளியிட்டது..... வெளியிட்டடதின் காரணம் தங்கள்
போராட்டத்திற்கு எந்த வெளிநாட்டு தொண்டுநிறுவனங்கள் உதவி செய்யவில்லை
என்பதை நிரூபிக்கவே
அணுஉலைக்கு எதிரான மக்கள் இயக்கம் முப்பது பேர் கொண்ட நிதி குழு ஒன்றை வைத்து தங்களுக்கு வரும் உதவிகளை உரிய முறையில் ஆவண படுத்தியுள்ளது.... அந்த குழு உறுப்பினர் திரு.ஜி.ஸ்டான்லி வெளியிட்ட அறிக்கை இதோ
அகத்து(August) 14, 2011 இல் ஆரம்பித்து Feb 26,2012 வரை இந்த
இயக்கத்திற்கு வந்த பணம் அதற்க்கான கணக்குகளை சரிபார்க்கும் போது அந்த
இயக்கத்திற்கு மொத்த பணஉதவி 2,517,991 (இந்திய ரூபாயில்).... இந்த பணத்தை
வைத்து கொண்டு இயக்கப்போரட்டங்களை நடத்த அதிலிருந்து பயன்படுத்தப்பட்ட
ருபாய் 1,764,233 நன்கொடையாக வசூளிக்ப்பட்ட பணத்திற்கு உரிய ரசீதுகள்
வழங்கப்பட்டுள்ளன .....
அதே போல் ஆரம்பகட்டத்தில் இந்த இயக்கம்
ஆரம்பிப்பதற்க்கும், மக்கள் போராட்டத்தை அரசின் கவனத்திற்கும் எடுத்துசெல்ல
இடிந்தகரை ஊரில் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ருபாய் 200
வசூலிக்கப்பட்டது பின்னர் இந்த விவகாரம் பெரிய அளவில் இட்டுசெல்லும், அதே
போல் மிக நீண்ட நாட்கள் நடக்க வாய்ப்புள்ளது என்பதை அறிந்த குழுவினர் அந்த
ஊர் மக்களிடம் வைத்த கோரிக்கை இது தான் "நீங்கள் தினசரி செய்யும் மீன்பிடி
தொழிலில் வரும் வருமானத்தில் ஒரு வாரத்திற்கு பத்து சதவிகிதம் நன்கொடையாக
தந்தால் போராட்டம் வெற்றிகரமாக இட்டுசெல்ல முடியும் என்பதே அந்த கோரிக்கை"
மக்களும் அந்த கோரிக்கைக்கு செவி சாய்த்து தங்கள் ஒரு வார வருமானத்தில்
பத்து சதவிகிதத்தை நன்கொடையாக அளித்தனர்...
இந்த நன்கொடைக்கு
மேலும் வலுசேர்த்தவர்கள் அந்த ஊரில் உள்ள பீடி தொழிலாளர்கள்...அவர்களும்
தங்கள் பங்கிற்கு முடிந்த உதவிகளை செய்தனர் ....
உடனே சில
மேதாவிகள் வந்து எல்லாருமே போராட்த்தில் கலந்து கொண்டார்கள் என்றால் யார்
மீன்பிடி தொழில் செய்வார்கள் எப்படி அவர்களுக்கு வருமானம் வரும் ??
... ஐயா கனவான்களே .... காலையில் நடக்கும் போராட்டத்தில் பெண்கள் கலந்து
கொள்வார்கள் இரவில் ஆண்கள் வந்து கலந்து கொள்வார்கள்.... மேலும் விளக்கம்
வேண்டும் என்றால் தினசரி நடுநிலை பத்திரிகைகளை வாசித்து தெரிந்து கொள்ளவும்
....
போரட்டக்காரகள் இந்த போராட்டத்திற்கு வசூலிக்கப்பட்ட
நன்கொடையிளிருந்து துளியுன்ட்டும் சுரண்டவில்லை... சுரண்டுவதற்கு அவர்கள்
அரசியல் வாதிகள் இல்லையே...
தங்களின் போக்குவரத்து செலவுகள், பயணம் செய்யும் போது வரும் செலவுகள் அனைத்தும் தங்கள் கைகாசை போட்டே சமாளித்து கொண்டனர்...
யார் வேண்டுமானாலும் ரசீதுகள் அடித்து கொள்ளலாம்... இதை ஏற்கமுடியாது
என்று கூறுபவர்கள், ஆதாரம் கேட்போர் இடிந்த கரைக்கு சென்று ஒரு ஆடிட்டரை
வைத்து சரி பார்த்து கொள்ளவும்.... தப்பாக இருந்தால் முச்சந்தியில் வைத்து
என்னை செருப்ப கழட்டி அடிக்கலாம்.... வணங்கி ஏற்றுக்கொள்வேன்....
மாறாக உண்மையாக இருந்தால் உங்கள் பதில்..... ??? அப்போது யாருமே வாயை திறக்கவே மாட்டீர்கள் இது நன்றாகவே தெரியும்...
மதியழகன்
14 கருத்துகள்:
AYYA NARAYANA SAAMI KU ORU MAIL ANUPPIDUNGA..PORATTAM VELLUM.
அருமை அண்ணா. வெட்கம் கெட்ட அரசாங்கம் இப்போ என்ன செய்யும்?
பரவாயில்லையே....இரவும் பகலும் உட்கார்ந்து ஏதோ ஒரு ஆடிட்டரை வச்சு கணக்கு ரெடி பண்ணிட்டார்...உங்க மக்கள் தலைவர்(!)...வாழ்த்துக்கள்.
வேற எதாவது நம்புற மாதிரி சொல்லுங்க...
எல்லா கணக்கும் கொடுத்தாலும் அறிவில்லாத மூடர்கள் கபிலன் மாதிரி தான் பேசுவார்கள்...
இவர் போன்ற மெத்த படித்த(?) மேதாவிகள் தானும் நாட்டுக்கு ஏதும் செய்ய மாட்டார்கள்..பிறர் செய்தாலும் நொர்நாட்டியம் செய்து கொண்டே இருப்பார்கள்..
இவர்கள் அறியாமையை கண்டு வெட்கப்படுகிறேன்...
கபிலன் போன்ற முட்டாள்தன கருத்துகளை இதை போன்ற மேன்மையான(?) கருத்து வழங்கும் மன்மோகன்...நாராயண சாமி..சிதம்பரம் போன்ற சர்வதேச அடிவருடிகளிடம் மட்டும் பரஸ்பரம் வைத்துக் கொள்ளட்டும்...
முடிவு எப்போது வரும் யார் கையில் உள்ளது
இந்த ரேவேரிக்கொசுத்தொல்லை தாங்க முடியலடா....ஏதாச்சும் மருந்தடிச்சுக் கொல்லுங்கடா...
"எல்லா கணக்கும் கொடுத்தாலும் அறிவில்லாத மூடர்கள் கபிலன் மாதிரி தான் பேசுவார்கள்..."
உள்ளூர் மக்களை ஏமாற்றி, வெளிநாட்டில் இருந்து வரும் பணத்தைக் கொள்ளையடிப்பவனை விட, அறிவில்லாத மூடனாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே !
"இவர் போன்ற மெத்த படித்த(?) மேதாவிகள் தானும் நாட்டுக்கு ஏதும் செய்ய மாட்டார்கள்..பிறர் செய்தாலும் நொர்நாட்டியம் செய்து கொண்டே இருப்பார்கள்.."
மீனவ நண்பர்கள், பீடி சுற்றுபவர்கள் எல்லாம் காசு கொடுத்தாங்களாம். அதை வைத்துத் தான் இந்தப் போராட்டம் நடக்குதாம். இந்த விஷயத்தை என் போன்ற முட்டாள்களுக்கு கூட ஒப்புக்கொள்ள முடியாத விஷயமா இருக்குங்க : )
"இவர்கள் அறியாமையை கண்டு வெட்கப்படுகிறேன்... "
ஏழைகளைக் பகடைக் காய்களாக வைத்து பணம் சம்பாதிப்பதை நினைத்து வெட்கப்பட்டால் இன்னும் நல்லா இருக்கும்.
கபிலன் போன்ற முட்டாள்தன கருத்துகளை இதை போன்ற மேன்மையான(?) கருத்து வழங்கும் மன்மோகன்...நாராயண சாமி..சிதம்பரம் போன்ற சர்வதேச அடிவருடிகளிடம் மட்டும் பரஸ்பரம் வைத்துக் கொள்ளட்டும்...
முட்டாள் தனம் தவறல்ல. தவறான புத்தியும் அல்ல. ஆனால் கொள்ளை அடிப்பது, மக்களை ஏமாற்றுவது இது தான் சார் தவறு. நான் முட்டாளாகவே இருந்துட்டு போறேங்க. நன்றி !
திரு . உதயகுமார் எங்க ஊரு காமராசர் அப்படின்னு ஒரு பதிவர் எழுதி உள்ளார் . அழுவதா அல்லது சிரிப்பதா என்று தான் தெரியவில்லை . மக்களை ஏமாற்றும் வஞ்சக தலைவர்களை உத்தம தலைவர் காமராஜரோடு ஒப்பிடுவது மடத்தனம் . என்ன செய்ய ...?
Please watch the UNEP's (United Nations Environment Programme) film:
'In the past 200,000 years, humans have upset the balance of planet Earth, a balance established by nearly four billion years of evolution. We must act now. It is too late to be a pessimist. The price is too high. Humanity has little time to reverse the trend and change its patterns of consumption.'
http://www.youtube.com/watch?v=jqxENMKaeCU
Please See & show the UNEP's (United Nations Environment Programme) Movie:
"In the past 200,000 years, humans have upset the balance of planet Earth, a balance established by nearly four billion years of evolution. We must act now. It is too late to be a pessimist. The price is too high. Humanity has little time to reverse the trend and change its patterns of consumption."
http://www.youtube.com/watch?v=jqxENMKaeCU
http://www.youtube.com/watch?v=jqxENMKaeCU
யாரையும் நம்ப இயலாது பாலா!
இடைத் தேர்தலுக்குப் பின் வேடம்
கலையும்
புலவர் சா இராமாநுசம்
சுரண்டுவதற்கு அவர்கள் அரசியல் வாதிகள் இல்லையே...
ஹிந்தியாவே முடிவு செய்.
தமிழ்நாடு வேண்டுமா? சிங்கள நாடு வேண்டுமா?
-------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள் - மார் '2012)
கருத்துரையிடுக