தமிழகம் இது வரை கண்டிராத மிக நீண்ட அற வழிப் போராட்டமாக ஆறு மாதங்களாக
தொடர்ந்து நடை பெற்றுக் கொண்டிருக்கிறது கூடங்குளம் அணு உலைக்கெதிரான
போராட்டம்.இதே அற வழிப் போராட்டத்தைக் காந்தி அண்ணல் கைக்
கொண்டிருந்ததால்தான் ஆங்கிலேயர்கள் நமக்கு சுதந்திரம் அளித்தார்கள் .
ஆனால் நாடு
சுதந்திரமடைவதற்கு மிகவும் பாடுபட்ட இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சி
இன்று அற வழிப் போராட்டங்களை கண்டாலே அலறுகிறது .
கூடங்குளம் அணு
உலைக்கெதிரான போராட்டம் 25 ஆண்டுகளாக நடை பெற்று வரும் போராட்டம் .ஆனால்
அணு உலை குறித்த தெளிவான சிந்தனைகள் இல்லாததால் அந்நாட்களில் அணு உலைப்
போராட்டங்களுக்கு மக்கள் ஆதரவு அவ்வளவாக இல்லை .
இந்நிலையில் கடந்த ஆண்டு
ஜப்பானின் ஃபுகுஷிமா அணு உலை விபத்தை ஊடகங்கள் வாயிலாக அறிந்த
கூடங்குளம் பகுதி மக்கள் அணு உலையின் ஆபத்தை உணர்ந்தார்கள் .அதனைத்
தொடர்ந்து அணு உலை குறித்த விபரங்களை தெளிவாக அறிந்த அறிஞர்கள் பலரை
இணைத்துக்கொண்டு வருமுன் காப்போம் என்ற வகையில் கட்டி முடிக்கப் படாத
கூடங்குளம் அணு உலையை மூட அறவழிப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்
.
இப்போராட்டத்தை சிறிதும் சகித்துக் கொள்ளாத ஆளும் வர்க்கம் போராட்டத்தின்
மீது வீசிய முதல் அஸ்திரம் செயற்கையான மின் வெட்டு .
அடுத்த அஸ்திரமாக
கிறிஸ்தவ பாதிரியார்கள்தான் போராட்டத்திற்கு காரணம் என்ற ஒரு குற்றச்
சாட்டை வைத்தார்கள் .
அடுத்ததாகத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள்தான்
போராட்டங்களுக்கு காரணம் என்றார்கள் .
அடுத்து போராட்டத்திற்கு வெளி
நாட்டிலிருந்து பணம் வருகிறது என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்கள்
.
ஆனால் எந்த குற்றச் சாட்டுமே நிரூபிக்கப் படவில்லை .
கூடங்குளம் பகுதி
மக்களும் இந்த ஆயிரமாயிரம் இன்னல்களைத் தாண்டி இன்னமும் அற வழிப்
போராட்டத்தைத் தொடர்கிறார்கள் .
ஆனால் ஆளும் வர்க்கமும் அவர்களுக்கு
ஆதரவானவர்களும் கூடங்குளம் மக்களின் போராட்டம் தேச நலனுக்கெதிரானது என்றும்
போராடும் மக்களை தேசத் துரோகிகள் என்றும் வர்ணிக்கிறார்கள் .
நான் ஒன்றே
ஒன்றை கேட்கிறேன் அணு உலை வேண்டாம் என்பவர்களை தேசத் துரோகிகள் என்று
அழைக்கும் நீங்கள் நீங்கள் வாழும் ஊர்களில் இதே போல் பத்தாயிரம் பேரைத்
திரட்டி எங்கள் ஊருக்கு இரண்டு அணு உலைகள் வேண்டும் என்று போராடி உங்கள்
தேச பக்தியை நிரூபியுங்கள் .
இந்தியாவில் எந்த ஒரு இடத்திலும் கிராம மக்கள்
அல்லது நகர மக்கள் இணைந்து எங்கள் பகுதியில் அணு உலை அமைக்கவேண்டும் என்று
போராடினால் எங்களை தேசத் துரோகிகள் என்று வசை பாடலாம் .
அவ்வாறு நடக்காத்
பட்சத்தில் கூடங்குளம் பகுதி மக்கள்தான் உண்மையிலேயே தேச நலனில்
அக்கறையுள்ள தேச பக்தர்கள்.
இதையும் படியுங்கள் நாடு பூரா நக்சலைட்டு .
27 கருத்துகள்:
நேற்று கூடங்குளம் பற்றிய ஆவணப்படத்தை பார்த்தேன், கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வக்கற்ற அரசுகள் மக்களை தேச துரோகிகள் என்கிறது, நமது போராட்டம் உண்மையானது, உண்மை வெற்றி பெறும். இது உறுதி.
பாலா சார்,,,,
முயற்சி என்றும் தோற்பது இல்லை...
கூடங்குளம் அணு உலையில் விபத்து நடந்தால் நாகர்கோவில் வரையுள்ள 15 லட்சம் மக்கள் இரண்டு மணி நேரத்தில் அப்புறப்படுத்தப்பட வேண்டும்...
அரசால் இது முடியுமா ?
நான் ஒன்றே ஒன்றை கேட்கிறேன் அணு உலை வேண்டாம் என்பவர்களை தேசத் துரோகிகள் என்று அழைக்கும் நீங்கள் நீங்கள் வாழும் ஊர்களில் இதே போல் பத்தாயிரம் பேரைத் திரட்டி எங்கள் ஊருக்கு இரண்டு அணு உலைகள் வேண்டும் என்று போராடி உங்கள் தேச பக்தியை நிரூபியுங்கள்...
Well said...
அரசாங்கம் என்பது மக்களின் நலனுக்காகத்தானே தவிர, அந்த மக்களுக்கு மரண பயத்தை கொடுப்பதற்கல்ல..என்று புரியுமோ இந்த மக்களின் குரல்?
நட்புடன்
கவிதை காதலன்
உண்மையில் சிந்திக்க வேண்டிய விஷயம். அவரவர் சொந்த ஊர்களில் போராடினால் பாராட்டலாம். நம் தலையிலல்லவா கல்லைப் போடுகிறார்கள். நிலைமையை நினைத்தால் பயங்கரமாய் இருக்கிறதே...! விழிப்புணர்வுப் பதிவு. பாராட்டுக்கள் சார்! தொடர்ந்து அழுத்தமாய் பதிவிடுங்கள்.
//அடுத்த அஸ்திரமாக கிறிஸ்தவ பாதிரியார்கள்தான் போராட்டத்திற்கு காரணம் என்ற ஒரு குற்றச் சாட்டை வைத்தார்கள் //
இன்னிக்கி பேச்சு வார்த்தையில கலந்துக்கிற ரெண்டு பாதிரி யாரு கண்ணூ!
//அணு உலை வேண்டாம் என்பவர்களை தேசத் துரோகிகள் என்று அழைக்கும் நீங்கள் நீங்கள் வாழும் ஊர்களில் இதே போல் பத்தாயிரம் பேரைத் திரட்டி எங்கள் ஊருக்கு இரண்டு அணு உலைகள் வேண்டும் என்று போராடி உங்கள் தேச பக்தியை நிரூபியுங்கள்//
நல்ல கேள்வி கண்ணு எவன் வருவான். ஏழை பாழைகளுக்கு அவங்கவங்க பொழைப்பே போராட்டம் தானே.
இன்னொரு போராட்டம் வேணும்னா எவனாவது தொழில் அதிபர் தொழில் செய்வதற்கு இடைஞ்சலா அணு உலை திட்டம் இருந்தா பத்தாயிரம் என்ன இருதாயிரம் பேரை குவிக்க முடியும் தானே..
பணம் பத்தும் செய்யும் :)
ரெவெரி கூறியது...
கூடங்குளம் அணு உலையில் விபத்து நடந்தால் நாகர்கோவில் வரையுள்ள 15 லட்சம் மக்கள் இரண்டு மணி நேரத்தில் அப்புறப்படுத்தப்பட வேண்டும்...
அரசால் இது முடியுமா ?
//
அதெல்லாம் எங்களுக்கு தெரியாது
ஆனா அணு உலை பாதுகாப்பானது.
நல்லது சொல்பவர்களை எல்லாம்
கல்லால் அடிப்பதுதான் நம்மை ஆள்பவர்களின் வழக்கம்..
அணு உலை ஆபத்துன்னு சொல்றாங்க...நிலக்கரி எரிச்சா ஓசோன் ஓட்டை ஆகுதுன்னு சொல்றாங்க...நாம எதை நம்பறது
நான் ஒன்றே ஒன்றை கேட்கிறேன் அணு உலை வேண்டாம் என்பவர்களை தேசத் துரோகிகள் என்று அழைக்கும் நீங்கள் நீங்கள் வாழும் ஊர்களில் இதே போல் பத்தாயிரம் பேரைத் திரட்டி எங்கள் ஊருக்கு இரண்டு அணு உலைகள் வேண்டும் என்று போராடி உங்கள் தேச பக்தியை நிரூபியுங்கள்//
கொய்யால ஒரு பெமானியும் வரமாட்டான், ஆளும் வர்க்கத்துக்கு சங்கு ஊதிருவோம் மக்கா வெயிட்....
எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப் படவில்லை என்று சும்மா சொல்லாதீங்க.....எங்கிருந்து இவருக்கு பணம் வருகிறது, எதற்காக வருகிறது என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்த விஷயம். அது ரெக்கார்டுல இருக்கு.
அணு உலை வேணுமா வேணாமா...என்ற விவாதம் வேறு விஷயம்....
ஆனா இங்க உதயகுமார் தலைமையில் நடக்கும் போராட்டம் (அவங்க சொல்லிக்குறது) என்பது வேற விஷயம்.
இது போராட்டமே அல்ல...ஒரு கார்ப்பரேட் கம்பெனி....வெளிநாட்டுக்காரங்க காசு கொடுக்குறாங்க....உதயகுமார் சுருட்டுகிறார்...போராட்டம் என்கிற பெயரில் மக்களுக்கு காசு கொடுத்து கொட்டகையில் உட்கார வைத்திருக்கிறார். இன்னும் 4 கோடி வரட்டும்...கிட்ட தட்ட 1 வருஷம் கம்பெனி (போராட்டம்) நடத்த முடியும்.
@கபிலன்பெயரில்லா சொன்ன முண்டத்துக்கு !
பத்தாயிரம் அல்லது ஐயாயிரம் அல்லது வெறும் ஆயிரம் பேரை கொண்டு எங்கள் ஊரில் ஒரு அணு உலை வைக்க ஒரு சிறிய அளவில் ஒரு சின்ன போராட்டம் பண்ணுங்களே ?..........உங்களுக்கு தைரியம் இருந்தால் !.
@கபிலன்கபிலன் என்ற நாதாரி பயலுக்கு !
எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப் படவில்லை என்று சும்மா சொல்லாதீங்க.....எங்கிருந்து இவருக்கு பணம் வருகிறது, எதற்காக வருகிறது என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்த விஷயம். அது ரெக்கார்டுல இருக்கு.
அந்த ரிக்கார்டை உடனே eனைக்கயும்...
இந்த பகுதிக்கு நேரிடையாக வந்தால் தெரிந்து கொள்ளலாம் உண்மை நிலவரத்தை !
@கபிலன்
கபிலன் அவர்களே, தயவு செய்து அந்த ரெகார்டை உடனே இணையத்தில் இணையுங்கள். (உங்களால் முடிந்தால்!!!) "தினமலம்" போன்று தவறான செய்துகளை தராதீர்கள்.
"@கபிலன்பெயரில்லா சொன்ன முண்டத்துக்கு !"
@கபிலன்கபிலன் என்ற நாதாரி பயலுக்கு !
தங்கள் மரியாதையான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி ! அநாகரீக விவாதத்திற்கு எப்போதும் நான் தயாரில்லை என்ற போதிலும். தங்களை போல கீழ் இறங்கி வர என்னைப் போன்ற நாதாரிப் பயல்களுக்கு மிகவும் சுலபம் என்பதை அறிந்து கொள்ளுங்கள் சார்.
சரி. மேட்டருக்கு வர்றேன்.
உங்கள் தலைவர் திரு.உதயகுமார் அவர்களுக்கு கிடைத்தது போல 6 கோடி ரூபாய் கொடுங்கள் ! நிச்சயம் முயற்சித்து பார்க்கிறேன் !
@Arun,@koodal kannan
http://vimarisanam.wordpress.com/2012/03/02/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/
இதற்கு தங்களுடைய அன்பான விளக்கங்களை எதிர்பார்க்கிறேன் !
//koodal kannaகூறியது...
@கபிலன்கபிலன் என்ற நாதாரி பயலுக்கு !//
http://vimarisanam.wordpress.com/2012/03/02/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/
இதுக்கு பதில் சொல்லேண்டா
மொள்ளமாறி கூடல் கண்ணா
@கபிலன் ஒரு பிளாக் போஸ்ட்டை ரெக்கார்டு என்று சொல்வது ஏற்றுக்கொள்ளமுடியாதது ...அப்படியே உதயகுமாருக்கு வெளி நாட்டிலிருந்து பணம் வந்திருந்தாலும் கூடங்குளம் போராட்டத்திற்கு அதை எந்தெந்த வழிகளில் பயன்படுத்தினார் என்ற ரெக்கார்டும் தங்களிடம் இருந்தால் வெளியிடலாமே ...
" பெயரில்லா கூறியது...
@கபிலன் ஒரு பிளாக் போஸ்ட்டை ரெக்கார்டு என்று சொல்வது ஏற்றுக்கொள்ளமுடியாதது "
சரிங்க....வெறும் ஒரு ப்ளாக் போஸ்ட்டை வைத்து குற்றம் சுமத்த முடியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன். உள்துறை அமைச்சகத்தின் டாகுமெண்ட் லிங்க் இங்க கொடுத்திருக்கேன். இந்த ஆதாரம் போதுமானதா என்று பார்த்து சொல்லுங்கள்.
http://mha.nic.in/fcraweb/fc3_verify.aspx?RCN=075940063R&by=2010-2011
வெளிநாடுகளில் இருந்து காசு வந்திருக்கா இல்லையா ? என்பதை தெளிவுபடுத்துங்கள். திரு.உதயகுமார், காசே வரலைன்னு சொல்லிட்டு இருக்காரே ? பொய் தானே சொல்றார். இதற்கு பதில் கொடுங்கள். பிறகு தங்களின் அடுத்த கேள்வி குறித்த விவாதம் செய்யலாம்.
கபிலன் கூறியது...
http://mha.nic.in/fcraweb/fc3_verify.aspx?RCN=075940063R&by=2010-2011
What kabilan showed records is enough or some more evidence required.
It is very clear that UDAYA KUMAR Got the money from foreign funds to stop the Nuclear reactors.
All developed countries (NATO POWER ) is unhappy with india development. Because INDIA developing in the right path. In india the biggest problem is CORRUPTION otherwise we would have been super power some 20 years back.
PLEASE UNDERSTAND ONETHING, Non of our politions is developed our countries, Our people developed the country with the knowledge and work force and intelligence.
So do not encourage like these people like udhayakumar.
WHETHER NUCLEAR PLANT IS SAFE OR NOT DIFFERENT QUESTIONS And DISCUSSION.
BUT THESE PEOPLE WILL MAKE INDIA DIE.
என்ன பெயரில்லா,அருண் பதிலே காணாம்.யாரோ ரெக்கார்ட் கேட்டங்க???????
@கபிலன் தகவலுக்கு நன்றி கபிலன் .பணம் வரவில்லை என்று உதயகுமார் கூறியிருந்தால் அது தவறுதான்.நான் கூடங்குளம் போராட்டத்தில் பங்கெடுத்து வருபவன் என்ற முறையில் சொல்கிறேன் போராட்டத்திற்கு முற்றிலும் இப்பகுதியைச் சார்ந்த மக்களே போராட்டத்திற்கான செலவுகளை மேற்கொள்கிறார்கள் .மேலும் காய் கறிகள் ,உணவுப் பொருட்கள் ,மற்றும் குடிநீர் போன்றவற்றை பலர் உபயமாகக் கொடுக்கிறார்கள் ...அதுபோல வாகன உரிமையாளர்களும் சிலர் வாடகை பெறாமலும் சிலர் குறைந்த வாடகையிலும் வாகன உதவி செய்கிறார்கள் ...எனக்குத் தெரிந்தவரை உதயகுமார் இப்போராட்டத்திர்க்காக துளியளவுகூட பணம் கொடுத்ததில்லை ...அவருக்குத்தான் மக்கள் செலவழிக்கிறார்கள் ....
@SURESH KUMAR
இது ஒரு ரெகார்ட் என்று நீங்கள் நம்பினால் எனக்கு என்ன சொல்லவென்று தெரிய வில்லை. யார் வேண்டுமானாலும் எது வேண்டுமானாலும் எழுதுவது ரெகார்ட் ஆகாது. நீங்கள் சொல்வது, தினமலர் போன்ற மக்கள் விரோத பத்திரிகை எழுதுவதை எல்லாம் நம்ப சொல்வது போலிருக்கிறது. அதனை நம்பும் மக்களும் இருக்க தானே செய்கிறார்கள்.
உங்களின் உண்ணா விரதம் பற்றியும் அதன் தாக்கத்தால், அதன் பின்னர் நீங்கள் மேற்கொண்ட அறுவை சிகிச்சை பற்றியும் கேள்வியுற்றேன். உங்களின் தியாகம் வீண் போகாது. நம்பிக்கை இழக்காதீர்கள். எனது வணக்கங்கள்
அணுஉலைகளுக்கெதிரான அறப்போராட்டம் வெல்லட்டும். இயற்கையை அழிக்க மனிதனுக்கு எந்த வகையிலும் உரிமை இல்லை. அணுஉலை இயற்கைக்கு முற்றிலும் எதிரானது. கூடங்குளத்தில் போராடும் மக்களை வணங்கி மகிழ்கிறேன். பகிர்விற்கு நன்றி.
கூடன்குளம் வாழ் மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்றார்கள் அதில் உள்ள ஆபத்தை போக்க யாராலும் முடியுமா? மனித காரியம் தானே சின்ன கவன சிதைவும் பெரிய இடரை ஏற்படுத்தா தா என்ன? வெங்காயம் உடைக்கும் போதே கண்ணை கசக்கும் மனிதன் அணுவை பிளக்கும் பொது ஆபத்து இல்லை என்றால் புத்திசாலி யாரும் ஒத்து கொள்ள மாட்டார்கள் .ஒரு முனையில் இருக்கும் உங்களுக்கு ஒன்றும் இல்லை அணு உலையில் இருக்கும் எங்களுக்கு தான் இறுக்கம்.அணு உலையை ஆதரிக்கும் ஓநாய்களே ஓரமாய் நின்று ஊளை விட வேண்டாம் தைரியம் இருந்தால் வீரனாய் அதன் அருகே வீடு கட்டி வசித்து பார்.இயற்கை சக்தியை இதமாக பயன் படுத்த தெரியாத இந்தியன் அணு சக்தியால் வல்லரசாக போகிறானாம்.இயற்கை இலவசமாய் தரும் நீரை ,இயற்கை தரும் காற்றை சூரியன் தரும் வெப்பத்தை விரயம் செய் வார்கள்.உயிர் குடிக்கும் உலைகளுக்கு மட்டும் விலை கொடுப்பார்கள்.
போராட்டகாரர் களுக்கு பணம் எப்படி வந்தது என்று ஆராய்வார்கள்..... இந்தியாவில் உள்ள ஓராயிரம் கட்சிகள் நடத்த பணம் எங்கிருந்து வருகிறது என்று கேட்டால் இந்த அரசாங்கமோ அல்லது தேர்தல் ஆணையமோ அல்லது நீதி மன்றங்களோ என்ன சொல்ல போகிறது?
கருத்துரையிடுக