28 மார்ச் 2012

புதிய மின் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு சாதனை !

     இத்தலைப்பைப்   பார்த்தவுடன் தமிழக அரசை கிண்டல் செய்வதற்காக எழுதப்பட்டதாக தோன்றும் .ஆனால் உண்மையிலேயே தமிழக அரசு செய்த  சாதனயைத்தான் சொல்லப்போகிறேன் .
       
       ஆனால் இந்த சாதனை சமீபத்தில் நிகழ்ந்தது அல்ல 1954 ம் வருடத்திற்கும் 1963 ம் வருடத்துக்கும் இடையே நிகழ்த்தப்பட்ட சாதனை .இப்போது அநேகருக்கு புரிந்திருக்கும் .ஆம் தன்னலமில்லா தலைவர் பெருந்தலைவர் காமராஜ் ஆட்சியில்தான் இந்த சாதனை நிகழ்ந்தது .
        
     
       அந்த கால கட்டத்தில் தமிழக அரசின் ஆண்டு வருமானமே 50 கோடிக்கும் குறைவுதான் .ஊழலில்லாமல் ஆட்சி புரிந்தால் என்னென்ன சாதனை நிகழ்த்தலாம் என்பதற்கு இன்றும் உதாரணமாக திகழ்வது காமராஜ் நிறைவேற்றிய  திட்டங்கள்தான் .

இப்போது காமராஜ் ஆட்சியில் தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட மின் திட்டங்களின் பட்டியல்

1 . குந்தா நீர் மின் திட்டம் (26 கோடி )
 

2 .பெரியாறு மின் திட்டம் (10  கோடி )
 

3 .கும்பார் -அமராவதி மின் திட்டம் (8  கோடி)
 

4 .மேட்டூர் கீழ்நிலை மின் திட்டம் (12 கோடி )
 

5 .மோயாறு நீர்மின் திட்டம்
 

6 .கூடலூர் நீர் மின் திட்டம்
 

7 .நெய்வேலி அனல் மின் திட்டம்
 

8 .சமயநல்லூர் அனல் மின் நிலையம்
 

9 .சென்னை அனல் மின் நிலையம்
 

10 .கல்பாக்கம் அணு மின் நிலையம் .



       இந்த பத்து மின் திட்டங்களும் காமராஜ் ஆட்சி காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டு அவரது ஆட்சியிலேயே முடிக்கப்பட்டது மேலும் சாண்டியனல்லூர் நீர் மின் திட்டம் ,குந்தா திட்டத்தின் மூன்றாவது பிரிவு,பெரியார் திட்டத்தின் இரண்டாவது பிரிவு ,பரம்பிக்குளம் .ஒக்கேனக்கல், பாண்டியாறு ,புன்னம்புழா ,சுருழியாறு ,பரளியாறு ஆகிய நீர் மின் திட்டங்கள் காமராஜ் ஆட்சி காலத்தில் தீட்டப்பட்டு பின்னர் நிறைவேற்றப்பட்டது .
           

      காமராஜ் ஆட்சிக்கு வருவதற்கு முன் 160  மெகா வாட்டாக இருந்த மின் உற்பத்தி அவரது ஆட்சி முடிகையில் 600  மெகா வாட்டாக உயர்ந்திருந்தது .மிக குறைந்த வருவாயை கொண்டே காமராஜ் இத்தனை திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். ஆனால் இன்றைய ஆட்சியாளர்களோ மின் வெட்டுப் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்காமல் முந்தையவர்களை குறை கூறுவதிலேயே நாட்களைக் கழிக்கின்றனர் .

                                        

                                   ம்ம்ம்ம் ....அந்த நாள் மீண்டும் வருமா..?

டிஸ்கி:இது ஒரு மீள் பதிவு  

16 கருத்துகள்:

Prabu Krishna சொன்னது…

அந்த நாள் மீண்டும் வருமா? //

காமராஜர் திரும்ப வந்தாலும் இந்த நயவஞ்சகர்கள் அணு உலை வேண்டும் என்றே பேசுவார்கள்

முத்தரசு சொன்னது…

ம்.....அது ஒரு காலம்.

நிரூபன் சொன்னது…

நல்லதோர் பதிவு அண்ணர், இப்போதெல்லாம் மின் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் பணம் எல்லாம் ஆட்சியாளர்களின் தனிநபர் திட்டத்திற்கு அல்லவா மறைமுகமாக பதுக்கப்படுகின்றது.

காமராஜர் பொதுநலவாதியாக இருந்தார். ஆனால் இன்று ஆட்சியினைக் கைப்பற்றுவோர் சுயநலவாதிகளாக அல்லவா இருக்கிறார்கள்.

மாலதி சொன்னது…

காமராஜர் திரும்ப வந்தாலும் இந்த நயவஞ்சகர்கள் அணு உலை வேண்டும் என்றே பேசுவார்கள்

பெயரில்லா சொன்னது…

Jaya does not have any realistic plan either on her budget or in the Energy Dept web page...

Her focus is mainly on fendingoff all the corruption cases...

பெயரில்லா சொன்னது…

லூசு மாலதியும் வந்தாச்சு

கூடல் பாலா சொன்னது…

@பெயரில்லா பெயரில்லாதவரே எனது தளத்திற்கு வரும் பதிவர்களைத் திட்டவேண்டாம் ....

இருதயம் சொன்னது…

நண்பருக்கு வணக்கம் ....

கர்ம வீரர் காமராஜர் தமிழகத்தில் அந்த காலத்திலே அணுமின் நிலையத்தை கொண்டு வந்து முன் மாதிரியாக திகழ்ந்து உள்ளாரே .... அதை ஏன் நீங்கள் இப்பொழுது மறுக்கிறீர்கள் ....?

மகேந்திரன் சொன்னது…

அது ஒரு பொற்காலம் நண்பரே...

பெயரில்லா சொன்னது…

காமாரஜருக்கு ஓட்டுப் போட்ட உங்கப்பனும் எங்கப்பனும் ஒழுக்கமா இருந்தாங்க....நாயமாப் பேசினாங்க..நடந்தாங்க...
இப்ப இவங்களுக்கு ஓட்டு போடற நம்ம ஒழுக்கம் சந்தி சிரிக்குது ....அப்புறம் வேறே என்ன நடக்கும் ?....

....சரி வுடுப்பா....

படுதாவைச் சுருட்டிட்டு வேற கடையப் போடுப்பா சீக்கிரம்

பெயரில்லா சொன்னது…

இப்படி நாட்டுக்கு நல்லது செய்தால், தமிழர்கள் தேர்தலில் ஓட்டு போட மாட்டார்கள் என்பதை நிரூபித்து விட்டோம், அதனால்தான் பின் வந்த ஆட்சியாளர்கள் நாட்டு நலனை முன் வைக்கவில்லை. தற்போதைய தலைவர்களை மறைமுகமாக குற்றம் சொல்லும் போது, மக்கள் செய்யும் தவறையும் நினைவு கொள்ள வேண்டும்

சென்னை பித்தன் சொன்னது…

அது ஒரு பொற்காலம் பாலா!அப்போது துறை அமைச்சராக இருந்தவர் திரு ராமையா என நினைக்கிறேன்தினம் காலை அவர் மேசை மீது அன்றையமின் உற்பத்தி நிலவரத்துக்கான,விவரம் தயாராக இருக்கவேண்டுமாம்.,

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான பதிவு.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.

Unknown சொன்னது…

என்ன செய்வது நமது ஆட்சியாளர்கள் அப்படி

Unknown சொன்னது…

அவரு பாவம்யா பொழைக்க தெரியாத மன்சன்..அவரையே சுவிஸ்ல பணம் போட்டு வச்சிருக்காருன்னு சொன்ன மானங்கெட்டவங்கல்லாம் இன்னும் சுத்திட்டு திரியிறானுங்க!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

.ஊழலில்லாமல் ஆட்சி புரிந்தால் என்னென்ன சாதனை நிகழ்த்தலாம் என்பதற்கு இன்றும் உதாரணமாக திகழ்வது காமராஜ் நிறைவேற்றிய திட்டங்கள்தான் .

பல நாடுகளிலும் உதாரணம் உண்டு..

ஏக்கம் கொள்ள வைக்கும் ஊழலற்ற ஆட்சி..