பல இணைய தளங்களை நாம் பார்வயிடும்பொழுது சில தேவைகளுக்காக அதை சேமித்து வைத்தால் பிற்காலத்தில் உபயோகமாக இருக்கும் என்று நாம் கருதுவதுண்டு .ஆனால் இணைய பக்கங்களை சேமிப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதுண்டு .இணைய பக்கங்கள் மட்டுமல்லாமல் எந்த வகையான கோப்பாக இருந்தாலும் அதை PDF வடிவில் சேமிக்க ஓர் அருமையான இலவச மென்பொருள் உள்ளது .Primo pdf எனப்படும் இந்த மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ள வேண்டும் .எந்த இணைய பக்கத்தை pdf ஆக சேமிக்க வேண்டுமோ அந்தபக்கத்தை திறந்து கொண்டு .File மெனுவில் Print ஐ அழுத்த வேண்டும் .பின்பு வரும் பெட்டியில் படத்தில் காண்பித்துள்ளவாறு Primo pdf என்பதை தேர்வு செய்யவேண்டும் .அதன் பிறகு Create PDF ஐ அழுத்தவேண்டும் .இப்போது நமது கோப்பு pdf ஆக சேமிக்கப்பட்டிருக்கும் .PDF உருவாவதில் பிரச்சினை ஏற்பட்டால் Save As ல் specific folder என்பதை தேர்ந்தெடுக்கவும் .செயல்படுத்தி பயனடையுங்கள் .அத்தோடு கொஞ்சம் இதை like பண்ணுநீங்கன்னா உங்களை மாதிரி நிறையபேர் பயனடைவார்கள் .மென்பொருளை தரவிறக்க சுட்டி
1 கருத்து:
இந்தத்தகவலை தந்துதவினீர்
முக்கியமான தகவல்
கருத்துரையிடுக