இதை பார்த்தவுடன் தமிழக அரசை கிண்டல் செய்வதற்காக எழுதப்பட்டதாக தோன்றும் .ஆனால் உண்மையிலேயே தமிழக அரசு செய்த அந்த சாதனயைத்தான் சொல்லப்போகிறேன் .
ஆனால் இந்த சாதனை சமீபத்தில் நிகழ்ந்தது அல்ல 1954 ம் வருடத்திற்கும் 1963 ம் வருடத்துக்கும் இடையே நிகழ்த்தப்பட்ட சாதனை .இப்போது அநேகருக்கு புரிந்திருக்கும் .ஆம் தன்னலமில்லா தலைவர் பெருந்தலைவர் காமராஜ் ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனை .
அந்த கால கட்டத்தில் தமிழக அரசின் ஆண்டு வருமானமே 50 கோடிக்கும் குறைவுதான் .ஊழலில்லாமல் ஆட்சி புரிந்தால் என்னென்ன சாதனை நிகழ்த்தலாம் என்பதற்கு இன்றும் உதாரணமாக திகழ்வது காமராஜ் நிறைவேற்றிய திட்டங்கள்தான் .
இப்போது காமராஜ் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மின் திட்டங்கள் பற்றிய ஒரு பார்வை .
1 . குந்தா நீர் மின் திட்டம் (26 கோடி )
2 .பெரியாறு மின் திட்டம் (10 கோடி )
3 .கும்பார் -அமராவதி மின் திட்டம் (8 கோடி)
4 .மேட்டூர் கீழ்நிலை மின் திட்டம் (12 கோடி )
5 .மோயாறு நீர்மின் திட்டம்
6 .கூடலூர் நீர் மின் திட்டம்
7 .நெய்வேலி அனல் மின் திட்டம்
8 .சமயநல்லூர் அனல் மின் நிலையம்
9 .சென்னை அனல் மின் நிலையம்
10 .கல்பாக்கம் அணு மின் நிலையம் .
இந்த பத்து மின் திட்டங்களும் காமராஜ் ஆட்சி காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டு அவரது ஆட்சியிலேயே முடிக்கப்பட்டது மேலும் சாண்டியனல்லூர் நீர் மின் திட்டம் ,குந்தா திட்டத்தின் மூன்றாவது பிரிவு,பெரியார் திட்டத்தின் இரண்டாவது பிரிவு ,பரம்பிக்குளம் .ஒக்கேனக்கல் ,பாண்டியாறு ,புன்னம்புழா ,சுருழியாறு ,பரளியாறு ஆகிய நீர் மின் திட்டங்கள் காமராஜ் ஆட்சி காலத்தில் தீட்டப்பட்டு பின்னர் நிறைவேற்றப்பட்டது .
இதில் இனொன்று கவனிக்க தக்க விஷயம் அவர் செயல் படுத்திய பெரும்பாலான மின் திட்டங்கள் சுற்று சூழலுக்கு பாதிப்பில்லாதவை .
காமராஜ் ஆட்சிக்கு வருவதற்கு முன் 160 மெகா வாட்டாக இருந்த மின் உற்பத்தி அவரது ஆட்சி முடிகையில் 600 மெகா வாட்டாக உயர்ந்திருந்தது .மிக குறைந்த வருவாயை கொண்டே காமராஜ் இத்தனை திட்டங்களை நிறைவேற்றியுள்ளார் என்றால் இப்போதுள்ள அரசியல் வாதிகளுக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசம் தெரியும் .
ம்ம்ம்ம் ....அந்த நாள் மீண்டும் வருமா..?