ஜப்பான் நாட்டில் நிகழ்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக ஏற்பட்ட அணுஉலை விபத்து பற்றிய தகவல்கள் பலவற்றை நாம் இன்று ஊடகங்களிலே கண்டு வருகிறோம் .இதற்கு சரியாக 25 வருடங்களுக்கு முன்பாக சோவியத் யூனியனில் (தற்போது உக்ரைன் )அமைந்திருந்த செர்நோபில் அணு உலை வெடித்து சிதறியது அதன் காரணமாக வெளியேறிய கதிரியக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் மேலும் தீராத நோய்கள் மற்றும் பிறவிக்குறைபாடுகள் இன்றளவும் ஏற்பட்டு வருகின்றன .அணு உலை வெடிப்பு மற்றும் கதிரியக்கத்தை கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றிய ஓர் அருமையான காணொளி .
27 ஏப்ரல் 2011
26 ஏப்ரல் 2011
இணைய பக்கங்களை PDF வடிவில் சேமித்திட இலவச மென்பொருள் !
பல இணைய தளங்களை நாம் பார்வயிடும்பொழுது சில தேவைகளுக்காக அதை சேமித்து வைத்தால் பிற்காலத்தில் உபயோகமாக இருக்கும் என்று நாம் கருதுவதுண்டு .ஆனால் இணைய பக்கங்களை சேமிப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதுண்டு .இணைய பக்கங்கள் மட்டுமல்லாமல் எந்த வகையான கோப்பாக இருந்தாலும் அதை PDF வடிவில் சேமிக்க ஓர் அருமையான இலவச மென்பொருள் உள்ளது .Primo pdf எனப்படும் இந்த மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ள வேண்டும் .எந்த இணைய பக்கத்தை pdf ஆக சேமிக்க வேண்டுமோ அந்தபக்கத்தை திறந்து கொண்டு .File மெனுவில் Print ஐ அழுத்த வேண்டும் .பின்பு வரும் பெட்டியில் படத்தில் காண்பித்துள்ளவாறு Primo pdf என்பதை தேர்வு செய்யவேண்டும் .
அதன் பிறகு Create PDF ஐ அழுத்தவேண்டும் .இப்போது நமது கோப்பு pdf ஆக சேமிக்கப்பட்டிருக்கும் .PDF உருவாவதில் பிரச்சினை ஏற்பட்டால் Save As ல் specific folder என்பதை தேர்ந்தெடுக்கவும் .
செயல்படுத்தி பயனடையுங்கள் .அத்தோடு கொஞ்சம் இதை like பண்ணுநீங்கன்னா உங்களை மாதிரி நிறையபேர் பயனடைவார்கள் .மென்பொருளை தரவிறக்க சுட்டி

அதன் பிறகு Create PDF ஐ அழுத்தவேண்டும் .இப்போது நமது கோப்பு pdf ஆக சேமிக்கப்பட்டிருக்கும் .PDF உருவாவதில் பிரச்சினை ஏற்பட்டால் Save As ல் specific folder என்பதை தேர்ந்தெடுக்கவும் .
செயல்படுத்தி பயனடையுங்கள் .அத்தோடு கொஞ்சம் இதை like பண்ணுநீங்கன்னா உங்களை மாதிரி நிறையபேர் பயனடைவார்கள் .மென்பொருளை தரவிறக்க சுட்டி10 ம் வகுப்பு சமச்சீர் பாடபுத்தகங்கள் இலவச டவுன்லோடு
10 ம் வகுப்பிற்கான சமச்சீர் பாடபுத்தகங்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே pallikalvi.in இணைய தளத்தில் அரசு வெளியிட்டுள்ளது .இங்கே click செய்து பள்ளிகல்வி இணையதளத்திற்குள் செல்லவும் .அதில் தேவையான பாடப்புத்தகத்தின் மீது click செய்தால் rapidshare என்ற தளத்திற்குள் கொண்டு செல்லும் rapidshare தளம் திறந்ததும் இணையபக்கத்தில் slow download என்பதை தேர்ந்தெடுக்கவும் .60 நொடிகள் காத்திருப்புக்கு பிறகு download செய்வதற்கான link கிடைக்கும் .பின்பு அதை கிளிக் செய்தவுடன் புத்தகம் டவுன்லோட் ஆக தொடங்கிவிடும் .file ன் அளவு மிகவும் அதிகமாக உள்ளது. டவுன்லோடு பண்ணுரதோடு போயிடாம ஓட்டு போட்டுட்டு போனீங்கன்னா நிறையபேருக்கு பயன்படும் .
25 ஏப்ரல் 2011
புகுஷிமா அணு உலை: சமீபத்தில் மிக அருகிலிருந்து எடுக்கப்பட்ட வீடியோ .
ஜப்பானில் நிகழ்ந்த சுனாமி தாக்குதலால் புகுஷிமாவிலுள்ள அணு உலைகள் சின்னாபின்னமாக வெடித்து சிதறின .மிக அதிக அளவில் அவை கதிரியக்கத்தை வெளியிட்டு வருகின்றன .ஜப்பான் விமானப்படையில் உள்ள ஆளில்லாத சிறியரக விமானம் மூலம் சேதமடைந்த அணு உலைகளுக்கு மிக அருகிலிருந்து சமீபத்தில் எடுக்கப்பட்ட காணொளி .
விண்டோஸ் XP: சிஸ்டம் ரீஸ்டோர் மூலம் கணினிகளின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு !
நல்ல முறையில் இயங்கிக்கொண்டிருக்கும் கணினி திடீரென்று வைரஸ் மூலமாகவோ அல்லது வேறு காரணங்களாலோ பழுதடைந்துவிட்டால் உடனடியாக நாம் பின்பற்ற வேண்டியது விண்டோஸ் நமக்கு கொடுத்திருக்கும் ஓர் எளிய வழி SYSTEM RESTORE.
இதை நாம் செயல் படுத்துவதற்கு முன்பாக system restore என்றால் என்ன என்பதை அறியவேண்டும் .
உதாரணமாக இன்று பத்தாம் தேதி என்று வைத்து கொள்ளுவோம் நேற்று முதல் கணினி சரியாக இயங்கவில்லை அப்படியானால் எட்டாம் தேதி அல்லது அதற்கு முன்பிருந்த நிலைக்கு நமது கணினியை கொண்டு செல்ல வேண்டும் .
இதை நாம் செயல் படுத்துவதற்கு முன்பாக system restore என்றால் என்ன என்பதை அறியவேண்டும் .
system restore என்பது நமது கணினி பழுதடைவதற்க்கு முன்பு என்ன நிலையில் இருந்ததோ அந்த நிலைக்கு நமது கணிணியினுடைய settings களை மாற்றி அமைப்பது ஆகும் .
உதாரணமாக இன்று பத்தாம் தேதி என்று வைத்து கொள்ளுவோம் நேற்று முதல் கணினி சரியாக இயங்கவில்லை அப்படியானால் எட்டாம் தேதி அல்லது அதற்கு முன்பிருந்த நிலைக்கு நமது கணினியை கொண்டு செல்ல வேண்டும் .
system restore செய்ய கணினியை safe mode ல் on செய்ய வேண்டும் .safe mode ல் on செய்ய கணினியை on செய்தவுடன் F8 கீயை அழுத்தவேண்டும் .உடனே இப்படி ஒரு தோற்றம் வரும்
இதில் safe mode என்பதை தேர்ந்தெடுத்து enter பட்டனை அழுத்த வேண்டும்.இப்போது கணினி safe mode ல் இயங்க தொடங்கியிருக்கும் .இப்போது கீழ்க்கண்ட படத்தில் தொன்றுகிறவாறு system restore தேர்வு செய்ய வேண்டும் .
அதன் பிறகு கீழ்க்கண்டவாறுதேர்வுசெய்து next அழுத்தவேண்டும்
எந்ததேதிகளுக்கு உங்கள் கணினியை restore செய்யமுடியுமோ அந்த தேதிகள் தடிமனாகதெரியும் .
அதில் சமீபத்தில் உள்ள நாளை தேர்வு செய்து next அழுத்தவேண்டும் .உங்கள் கணினி அதுவாகவே restart ஆகும் .
அதன் பின்னர் உங்கள் கணினியின் பிரச்சினை அநேகமாக சரி செய்யபட்டிருக்கும் .
இதில் கவனத்தில் கொள்ளவேண்டியது என்னவென்றால் நீங்கள் restore செய்யும் தேதிக்கு பின்பு கணினியில் copy செய்த தேவையான கோப்புகளை backup எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும் .
பயன்படுத்தி பாருங்கள் ,கருத்துக்களை கூறுங்கள். இத்தளத்தை நண்பர்களிடம் பகிருங்கள். ஓட்டளித்தால் பலபேருக்கு இது உபயோகமாக இருக்கும் . .
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


