உலகில் பரவும் பெரும்பாலான நோய்கள் தண்ணீர் மூலமாகத்தான்
பரவுகின்றன.கண்ணுக்குத் தெரியாத பல நோய்க் கிருமிகள் நிறைந்த நீரை
அருந்துவதால் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி பலர் இன்னல்
படுகின்றனர்.
தற்காலத்தில் பிரயாணங்களின் போது பலர் பிளாஸ்டிக்
பாக்கெட்டுகளில் அடைக்கப் பட்டு விற்கப் படும் குடிநீரை வாங்கி
அருந்துகின்றனர். பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பல்வேறு அரசு தரச் சான்று
முத்திரைகளெல்லாம் பொறிக்கப் பட்டிருக்கும்.ஆனால் அவை சுகாதாரமானதாகவோ
தரமானதாகவோ இருக்கும் என்று நீங்கள் நம்பி அடிக்கடி அதை வாங்கி அருந்தினால்
உங்களுக்கு பேராபத்து காத்திருக்கிறது.குடி நீர் பிளாஸ்டிக் கவரில்
அடைக்கப் பட்டாலே ஆபத்துதான்...அதிலும் சுகாதாரமற்ற நீர் அடைக்கப் பட்டால்
???
இரண்டு நாட்களுக்கு முன்பாக எனது நண்பர் திருநெல்வேலி மாவட்டம்
இராதாபுரம் சென்றிருக்கிறார்.அங்கு தாகத்தை தணிக்கும் நிமித்தம் ஒரு
பெட்டிக் கடையில் பாக்கெட் குடிநீர் வாங்கியிருக்கிறார் .
அதை குடிக்க
முனைகையில் அந்த நீரினுள் ஒரு கொசு இறந்து கிடப்பதைப்
பார்த்திருக்கிறார்.அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அந்த பாக்கெட்டை
தன்னுடன் பத்திரமாக எடுத்துச் சென்று சுகாதார அலுவலர்களுக்கு தகவல்
கொடுத்திருக்கிறார்.
தண்ணீர் பாக்கெட்டினுள் கொசு
சம்மந்தப் பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா
என்பது இனிமேல்தான் தெரிய வரும்.