30 ஜனவரி 2012

கூடங்குளம் அணு உலை மாதிரி எரிப்பு !

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக சில மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது .இந்நிலையில் இன்று ஒரு மிகப் பெரிய போராட்டம் கூடங்குளத்தில் நடைபெற்றது .

கூடங்குளம் அணு உலையைப்போல் ஒரு மாதிரி அட்டைகளால் உருவாக்கப்பட்டு கூடங்குளம் கொண்டுவரப்பட்டது .

அதன் பிறகு  அது வாகனத்தில்  கூடங்குளம் வைராவிகிணறு விலக்கிலிருந்து கூடங்குளம் அணுமின் நிலையம் அருகிலுள்ள பைபாஸ் ரோடு சந்திப்பிற்கு  ஊர்வலமாக எடுத்துவரப் பட்டது .

அங்குவைத்து பொதுமக்கள் அதற்கு ஒப்பாரி வைத்தனர் 

பின்னர் அங்கு அதற்கு எரியூட்டப்பட்டது .

சம்பிரதாயப் படி அணு உலை மாதிரியை எரிப்பதையொட்டி கூடங்குளம் ஊராட்சி மன்ற உறுப்பினர் பெருமாள் சாமி உட்பட மூன்று உறுப்பினர்கள் மொட்டையடித்து இறுதிக்கடன் செலுத்தினர் .

இன்று நடை பெற்ற போராட்டத்தில் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் டாக்டர் உதயகுமார் உட்பட சுமார் 8000  பேர் கலந்துகொண்டனர்.



அணு  உலை மாதிரி ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது 


அணு உலை மாதிரிக்கு ஒப்பாரி வைத்த பொதுமக்கள்
 

அணு உலை மாதிரி எரியூட்டப்பட்டது 


மொட்டையடித்த ஊராட்சி உறுப்பினர் பெருமாள் சாமி

29 ஜனவரி 2012

தண்ணீர் பிரச்சினைகளைத் தீர்க்க ஓர் எளிய வழி!

தற்போது நாட்டில் நிலவும் பிரச்சினைகளில் முக்கியப் பிரச்சினையாக தண்ணீர் பிரச்சினை உள்ளது .

முல்லைப் பெரியாறு ,காவிரி நீர் பிரச்சினை இன்னும் வெளியுலகுக்கு தெரியாமல் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன .

மனித வாழ்க்கைக்கு  மிகவும் இன்றியமையாதது தண்ணீர் என்பதை திருவள்ளுவரே கூறியுள்ளார் .மனித நாகரீகம் தோன்றியதே நதிக்கரைகளில்தான் என்பதை நாம் வரலாற்றுக் குறிப்புகள் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது .

இந்நிலையில் நம் மக்கள் தண்ணீர் பிரச்சினைகள் மீது காட்டும் அலட்சியம் எதிர் காலத்தில் உள் நாட்டு  போர்களுக்கும்  உலகப்  போருக்கும்  வழி வகுக்கக் கூடிய வகையில் அமைந்துள்ளது .

2025  ம் ஆண்டில் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் கடும் குடி நீர் பஞ்சம் ஏற்பட்டு அதன் காரணமாக போர் நிகழ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது .

இத்தருணத்தில் ஒரு வரலாற்று நிகழ்வை நினைவு கூற கடமைப் பட்டுள்ளோம் .

நமது தேசப் பிதாவான காந்தியடிகள் தண்ணீர் சிக்கனத்தை கடை பிடிப்பதில் மிகுந்த பற்று கொண்டிருந்தார் .அவர் தினமும் அதிகாலையில் பல் தேய்த்து  முகம் கழுவ ஒரு ஜக் நீரை மட்டுமே பயன்படுத்துவார் .ஒரு முறை காந்தியடிகள் பண்டித நேருவுடன் அலகாபாத்தில் தங்கியிருந்தார் .

ஒரு நாள் காந்தியடிகள் முகம் கழுவும் நேரத்தில் ஒரு முக்கியமான பிரச்சினை பற்றி நேருவுடன் பேசிக்கொண்டிருந்ததால் நீரின் மீது கவனம் செலுத்தாமல் முகத்தை கழுவாமலே நீரை சிந்திவிட்டார் .

அப்போது அதைக் கவனித்த நேரு காந்தியடிகளிடம் ஜக்கை வாங்கி இன்னொரு ஜக் நீரை எடுத்து வர முற்பட்டார்.ஆனால் காந்தியோ நேருவைத் தடுத்தார் .எனக்குப் பாத்தியப் பட்டது இந்த ஒரு ஜக் நீர்தான் ,அதை வீணாக்கியது என் தவறு .அதனால் இன்று முகம் கழுவ வேண்டாம் என்று கூறிவிட்டார் .

நம் சந்ததியினர் மீதும் நாட்டு மக்களின் மீது எத்தனை அக்கறை இருந்திருந்தால் காந்தி அவ்வாறு செய்திருப்பார் .

எனவே இன்றைய கால கட்டத்தில் ஒரு பகுதியில் தண்ணீர் தேவைக்கு அதிகமாகக்கிடைத்தாலும் தேவைக்குமட்டுமே பயன்படுத்தவேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் அது தண்ணீர் பஞ்சமுள்ளவர்களுக்கோ அல்லது வருங்கால சந்ததியினருக்கோ பயன்படும் .

அதன் மூலம் இன்று நடப்பது போன்ற தண்ணீர் போர்கள் படிப் படியாகக் குறைந்து நாடு வளமும் நலமும் அடையும் .காந்தி வழியை நாமும் பின்பற்றுவோமா ....

27 ஜனவரி 2012

கூடங்குளம் போராட்டம் ஏன் ? விறுவிறுப்பான வீடியோ!

கூடங்குளம் அணு உலை போராட்டம் வெல்லவேண்டும் என வாழ்த்தி சமீபத்தில் கூடங்குளத்தை சேர்ந்த சகோதரர் பெப்சி கணேசன் தானே பாட்டெழுதி அதைப் பாடி வெளியிட்டார் .அப்பாடலை நெய்தலின் பாடல் என்ற தலைப்பில் கேரளா நண்பர்கள் காணொளியாக தயாரித்துள்ளார்கள் .அப்பாடலை இங்கே பகிர்கின்றேன் .

24 ஜனவரி 2012

அம்மாவுக்கு நன்றிகள் !


வணக்கம் நண்பர்களே .

கடந்த சில மாதங்களாக உடல் நலமில்லாமையால் பிளாக் பக்கம் வர முடியவில்லை .

பல மருத்துவர்களால் எனக்குண்டான உடல் பிரச்சினையை கண்டறிய முடியாமல் இருந்தது .அந்நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நான் கடவுளை மட்டும் நம்பி வீடு திரும்பினேன் .அதன் பின்னர் எல்லாமே நல்லவையாக அமைந்தன .சரியான மருத்துவம் மற்றும் எனது உடல்நிலையை மேம்படுத்த உதவும் உடற்பயிற்சி ஆலோசனைகள் எனக்கு கிடைத்தன .இப்போது எனக்கு உடல்நிலை சரியாகிவிட்டது .

எனக்கு மறுவாழ்வு அளித்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அன்னைக்கு இப்பதிவை அர்ப்பணிக்கிறேன் .