31 ஆகஸ்ட் 2011

ஒருபோதும் இவ்வாறு முயற்சிக்காதீர்கள் :விழிப்புணர்வு வீடியோ

கடந்த வாரம் இரு இளைஞர்கள் மும்பை வாசிகளை அதிர்ச்சியில் உறைய வைத்தார்கள் .

மும்பை உள்ளூர் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒவ்வொரு வருடமும் விபத்துக்களில் இறக்கிறார்கள்.இந்நிலையில் சாகசம் (?)செய்வதாக நினைத்துக்கொண்டு இரு இளைஞர்கள் ஆபத்தான ரயில் பயணம் மேற்கொண்டார்கள் .

எவரேனும் இத்தகைய பயணம் மேற்கொள்ளக் கூடாது .

30 ஆகஸ்ட் 2011

போல்டான உசேன் போல்ட் :காணொளி

ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது பழமொழி .அது யாருக்கு பொருந்தியதோ தெரியவில்லை ஆனால் உலக தடகள சாம்பியன் உசேன் போல்ட்டுக்கு சரியாகப் பொருந்திவிட்டது .

100  மீட்டர் ஓட்டப் பந்தய உலக சாதனைக்கு சொந்த காரரான ஜமைக்காவின் உசேன் போல்ட்  28-8-2011 அன்று கொரியாவில் நடை பெற்ற உலக தடகள போட்டியில் கலந்து கொண்டார் .

26 ஆகஸ்ட் 2011

கூடங்குளம் அணு உலைக்கெதிராக போராட்டம் ஏன் ?நேரடி ரிப்போர்ட் .

சமீப நாட்களாக கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி பல்லாயிரக் கணக்கானோர் தொடர் போராட்டங்களில் ஈடு பட்டு வருகின்றனர்.கூடங்குளம் பகுதி மக்கள் ஏன் அணு உலையை எதிர்க்கிறார்கள் என்று தொலை தூரத்திலிருக்கும் நண்பர்களும் பல பத்திரிகையாளர்களும் என்னை அடிக்கடி வினவுகிறார்கள் .

நான் இந்த அணு உலை அமையும் இடத்திற்கு அருகாமையில் வசிப்பதால் இது பற்றிய உண்மைத் தகவல்களை இப்பதிவின் வாயிலாகத் தருகிறேன் .

தமிழ் நாட்டின் தென் கோடியில் நெல்லை மாவட்டத்தில் கன்னியாகுமரிக்கு அருகில் அமைந்துள்ளது கூடன்குளம் ஊர் .இங்குதான் சர்ச்சைக்குரிய அணு உலைகள் கட்டப் பட்டு வருகின்றன .

14 ஆகஸ்ட் 2011

ஒரு வயசுப்பையனிடம் வில்லங்கமான கேள்விகள் !

இவர் பெயர் த்ரேஜோ.தலைப்பில் குறிப்பிட்டுள்ளது போல் இவருக்கு ஒரு வயதுதான் ஆகிறது .

மிகுந்த அறிவாளியான இவரிடம் 

உங்கள் இரவு நேர பிரச்சினைகள் என்ன 

உங்கள் குடும்ப வாழ்க்கை எப்படி தீவிரவாதியை எப்படி கையாளவேண்டும் 

இது போன்ற கேள்விகளுக்கு சளைக்காமல் பதிலளிக்கிறார் .நீங்களும் பாருங்கள்.

13 ஆகஸ்ட் 2011

உலகை குழப்பத்தில் ஆழ்த்தி வரும் வெளியுறவு அமைச்சர் ?

ஹினா ரப்பானி ,இந்த பெயரை அறியாத உலகத் தலைவர்கள் யாரும் இருக்க முடியாது .பாகிஸ்தானின் இளம் வெளியுறவு அமைச்சரான இவர் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று பல்வேறு (!)விதமாக தலைவர்களைக் கவர்ந்து வருகிறார் .

இன்று விஷயம் இவரைப் பற்றியது அல்ல .இந்த இளம் அமைச்சருக்கு நேர் எதிராக செயல் பட்டுக் கொண்டிருக்கும் இந்தியாவின் மூத்த வெளியுறவு அமைச்சர் கிருஷ்ணாவைப் பற்றியது .

12 ஆகஸ்ட் 2011

திருநெல்வேலி :அணு உலைகளை மூடக்கோரி 3000 குடும்ப அட்டைகள் அரசிடம் ஒப்படைப்பு ?

தமிழ் நாட்டில் நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1000  மெகாவாட் திறன் கொண்ட இரு அணு உலைகள் கடந்த 11  ஆண்டுகளாக கட்டப்பட்டு வருகின்றன .இதில் முதல் அணு உலை கட்டி முடிக்கப் பட்டு டிசம்பரில் செயல் படத் துவங்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது .


அணு உலை செயல் படத் தயாராகிவிட்ட பின்பும் அணு உலையில் இருந்து கதிர் வீச்சு வெளிப் பட்டால் அருகில் வசிக்கும் மக்களை அதிலிருந்து பாதுகாப்பதற்கு எந்த ஒரு முன்னேற்பாடும் இது வரை செய்யப் படவில்லை .

09 ஆகஸ்ட் 2011

மனதை மயக்கும் மாப்பிள்ள பாடல்கள் :வீடியோ

ஒவ்வொரு மொழியினருக்கும் பாடல்கள் ரசிப்பதில் ஒவ்வொரு விதமான ரசனை உள்ளது .

பொதுவாக தமிழ் நாட்டிலுள்ள இசை ரசிகர்களுக்கு நாட்டு புற மணம் கமழும் பாடல்கள் பிடிக்கும் .

பீகார் மற்று ஜார்கண்ட் மாநில மக்களுக்கு ஹிந்தி திரைப் பட பாடல்களை விட போஜ்பூரி மொழியிலுள்ள கிராமிய பாடல்களே அதிகம் பிடிக்கும் .

08 ஆகஸ்ட் 2011

அமெரிக்காவை ஃப்ரீயா சுத்திப் பார்க்க வாரீங்களா ?

அழைப்பை ஏற்று வருகை புரிந்தவர்களை வரவேற்கிறேன் .

சமீப காலமாக கூகுளின் 360 Degree Street Viewing மூலமாக உலகின் பல்வேறு நகரங்களையும் நேரில் பார்க்கும் உணர்வுடன் பார்க்க முடிகிறது .அந்த வகையில் இப்போது அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரத்திலுள்ள ஐந்து தெருக்களுக்கு தற்போது அழைத்துச் செல்லப் போகிறேன் .

ஆர்வமுள்ளவர்கள் என்னுடன் வாருங்கள் .சுற்றிப் பார்க்க ஒவ்வொரு தலைப்பையும் கிளிக்குங்கள் .

07 ஆகஸ்ட் 2011

மாரடைப்பை ஏற்படுத்தும் டீசல் புகை -அதிர்ச்சி தகவல்

ஸ்காட்லாந்து நாட்டின் தலை நகரான எடின்பர்கில் அமைந்துள்ள எடின்பர்க் பல்கலை கழக ஆராய்ச்சியாளர்கள் உலக அளவில் அதிக மாசடைந்த நகரங்களில் சில ஆராய்சிகளை மேற்கொண்டனர் .

அதிக  அளவு நகரங்களில் காற்றின் மாசு பாடுக்கு காரணமாக இருப்பது டீசல் மூலம் உருவாகும் புகை எனக் கண்டறிந்துள்ளார்கள் அவர்கள் .

06 ஆகஸ்ட் 2011

ஹிரோஷிமா மக்களுக்கு அஞ்சலி .

மனிதன் வாழ்கையில் மரணம் நிச்சயிக்கப்பட்டதுதான் .ஆனால் அணு அணுவாக சாவது என்பது நரகத்திற்கு ஒப்பானது .

அணு அணுவாக சாதல் என்ற வாக்கியமே அநேகமாக ஹிரோஷிமா சம்பவத்திற்கு பின்பாக தோன்றியதாக இருக்கலாம் .

இப்போது ஹிரோஷிமாவை ஏன் நினைவு படுத்துகிறேன் .இன்றுதான் ஹிரோஷிமா சோகம் நிகழ்ந்த தினம் .

05 ஆகஸ்ட் 2011

கட்டப் பட இருக்கும் உலகின் மிக உயர்ந்த கட்டிடம் : ருசிகர தகவல்கள் .

உலகின் மிக உயர்ந்த கட்டிடம் என்ற பெருமையை இது வரை துபாயில் அமைந்துள்ள புர்ஜ் கலிஃபா என்ற கட்டிடம் இது வரை தக்க வைத்துக் கொண்டுள்ளது .

ஆனால் அதன் பெருமை தற்போது முறியடிக்கப் பட உள்ளது .சவூதி அரேபியாவிலுள்ள ஜெட்டா நகரத்தில் 1000  மீட்டர் (1  கிலோ மீட்டர் ) உயரத்தில் கிங்டம் டவர் என்ற கட்டிடம் கட்ட வேலைகள் தொடங்கிவிட்டன .

04 ஆகஸ்ட் 2011

சட்ட விரோத பார்க்கிங் : உலகைக் கவர்ந்த மேயரின் அதிரடி -வீடியோ

லித்துவேனியா  நாட்டின் வில்னியஸ் நகரத்திற்கு இரண்டாவது முறையாக தொடர்ந்து மேயராக தேர்ந்தெடுக்கப்  பட்டவர் அர்ச்சூராஸ் சுவாக்கஸ் .

நகர் சாலைகளில் இரு சக்கர வாகனங்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ள பகுதிகளில் கார்கள் பார்கிங் செய்யப் படுவதாக அவருக்கு அடிக்கடி புகார்கள் வந்தன .

பார்கிங் செய்பவர்களை தகுந்த அதிகாரிகள் மூலமாக எச்சரித்தார் மேயர்.ஆனால் பார்கிங் செய்பவர்கள் பெரும் பணக்காரர்களாக      இருந்தார்கள். அவர்கள் அதிகாரிகளின் எச்சரிக்கையை கண்டுகொள்ளவில்லை .

இதனால் ஆத்திரமடைந்த மேயர் தானே களத்தில் இறங்கினார் .ராணுவ டேன்க் ஒன்றை எடுத்து ஓட்டி வந்து சட்டத்திற்கு புறம்பாக நிறுத்தப் பட்ட கார்கள் அனைத்தையும் சிதைத்தார் .மேலும் அதனால் ரோட்டில் சிதறிய கண்ணாடித் துண்டுகளையும் தானே சுத்தம் செய்தார் .

மேயரின் அதிரடி கீழே .

02 ஆகஸ்ட் 2011

உங்கள் உடலைப் பற்றி நீங்கள் இது வரை அறியாத 10 உண்மைகள் !

THANKS: MEN'S FITNESS

மனித உடலைப் பற்றி உலகம் முழுவதும் பல்வேறு நிபுணர்கள் ஆராய்ந்த  ஆராய்ச்சிகளின் சமீபத்திய முடிவுகள் இவை .

01 ஆகஸ்ட் 2011

மனித மூளையின் முழுத்திறன் இவ்வளவுதான் : அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி முடிவு

மனிதனின் சமீபத்திய அறிவியல் கண்டுபிடிப்புகள் பலவும் வியப்பின் விளிம்பிற்கு நம்மை அழைத்துச் செல்கின்றன .இதற்கு  காரணம் மனித மூளையின் சக்திதான் .

இதற்கு முன் மனித மூளை பற்றி ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள் பலர் திறமையற்ற  மனிதர்கள் தனது மூளையின் சக்தியில் குறைந்த அளவு மட்டுமே பயன்படுத்துவதாகவும் திறமையானவர்கள் (விஞ்ஞானிகள் போன்றோர்)  தங்கள் மூளையின் ஆற்றலை அதிக அளவு பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறியிருந்தார்கள் .


ஆனால் சமீபத்திய ஆராய்சிகள் மனித மூளை பற்றி ஓர் அதிச்சி கலந்த உண்மையை கூறுகிறது .

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக பேராசிரியர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் ஒவ்வொரு மனிதனும் தனது மூளையை 100 % பயன்படுத்துகிறான் எனவும் மனித மூளையின் சக்தி இவ்வளவுதான் எனவும் கூறியுள்ளார்கள் .

நரம்பு உயிரியல் பேராசிரியர்" சைமன் லாலின்"  மூளை சிறப்பான வடிவத்தை பெறுவதற்கும் திறமையாக செயல் படுத்துவதற்கும் தகுந்த ஆற்றல் தேவை என்றும்  மனிதனால் தனது மூளையை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் செயல் படுத்த முடியாது என்றும் கூறுகிறார் .

மூளையின் வெவ்வேறு பகுதிகள் இழைகளால் இணைக்கப் பட்டுள்ளதாகவும் மிகுந்த அறிவாளிகள்  மூளையில்  இந்த இணைப்புகள் சிறப்பாக உள்ளதாகவும் குறைவான அறிவுடையவர்களுக்கு இந்த இணைப்பு சிறப்பாக இல்லாமல் இருப்பதாகவும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் .


கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் உளவியல் துறை  பேராசிரியர் "எட் புல்மோர்" கூறுகையில் மிகுந்த அறிவாளிகளுக்கு மூளையில் இழைகள் சிறப்பான இணைப்பை கொண்டிருப்பதால்  கட்டளைகள் உடனடியாக மூளையின் பிற பகுதிகளுக்கு அனுப்பப் படுவதாகவும் இந்த இணைப்பு சிறப்பாக அமையப் பெறாதவர்கள் மூளையில் கட்டளைகள் மிக மெதுவாக  பரிமாற்றம் செய்யப் படுவதாகவும் கூறுகிறார் .


சிறந்த மூளைத் தொகுப்பிற்கும் சிறந்த நுண்ணறிவு திறனுக்கும்  (IQ ) நெருங்கிய தொடர்பு உண்டு என்கிறார் இவர் .

இவர்கள் ஆராய்ச்சியில் ஆறுதல் தரும் விஷயம் உடலின் சக்தியை அதிகரிப்பதன் மூலம் மூளையின் ஆற்றலும் அதிகரிக்கும் என்பதுதான் .

இதைத்தான்  நம்மவர்கள் "சுவரில்லாமல் சித்திரம் இல்லை" என்று சொல்லியிருப்பார்களோ .

நன்றி : Dailymail ,UK.

புலிக் குட்டிக்கு புட்டிப்பால் கொடுக்கும் குரங்கு : அதிசய காணொளி

நன்றி : த டெலிகிராப் ,யு .கே .
தாய்லாந்து  நாட்டின் தலைநகர் பாங்காக்கிலிருந்து 30  கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த மிருக காட்சி சாலை .