18 டிசம்பர் 2012

உங்கள் PENDRIVE ல் கோப்புகளை காண முடியவில்லையா ?

சில சமயங்களில் நாம் உபயோகிக்கும் PENDRIVE  மற்றும் மெமரி கார்டுகளில் இது போன்ற பிரச்சினை ஏற்படுவதுண்டு. கோப்புகள் எதுவும் அழிக்கப் பட்டிருக்காது ஆனால் DRIVE  ஐ திறந்தால்  எதுவுமே தெரியாது. அல்லது குறிப்பிட்ட சில கோப்புகள் தெரியாது. HIDDEN FILE ஆகவும் அவை இருக்காது . ஆனால் DRIVE  ஐ மவுசால் வலதுபுறம் கிளிக் செய்து PROPERTIES  கிளிக் செய்தால் இத்தனை GB இதில் உள்ளது என காண்பிக்கும். இது போன்ற பிரச்சினைகளிலிருந்து  கோப்புகளை மீட்டெடுக்க பல்வேறு மென்பொருட்கள் உள்ளன . எனினும் அவற்றால்கூட சில சமயங்களில் மீட்டெடுக்க முடியாமல் போகலாம். இப்பிரச்சினையை சரி செய்ய ஒரு எளிய வழி உள்ளது . 


முதலில் பிரசினைக்குள்ளான  DRIVE  ஐ மவுசால் RIGHT கிளிக் செய்து படத்தில் காண்பிக்கப் பட்டுள்ளவாறு Add to archive என்பதை தேர்ந்துடுக்கவும் .

இப்போது கீழ் கண்டவாறு ஒரு window  தோன்றும் . அதில் Browse என்பதை கிளிக் செய்தால் மீட்கப் படும் கோப்புகளை சேமிக்கும் இடத்தை தேர்வு செய்யலாம். இனி OK  பட்டனை அழுத்தவேண்டியதுதான் . 


இப்போது காணாமல் போன கோப்புகள் அனைத்தும் ஒரு ZIP  FILE  ஆக கணினியில் சேமிக்கப்படும் . அதிலிருந்து உங்கள் கோப்புகளை மீட்டெடுக்கலாம்.

07 டிசம்பர் 2012

BSNL நீங்கள் விரும்பும் மொபைல் எண்ணை பெற ...

அனேக சமயங்களில் நாம் புதிதாக சிம்கார்டு வாங்கும்போது நாம் நினைப்பதுபோல் எண்கள் கிடைப்பதில்லை .மேலும் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட சிம்கார்டுகளைப் பயன்படுத்துவதுண்டு. புதிய சிம்கார்டின் எண்ணானது  ஏற்கெனவே இருக்கும் சிம்கார்டின் எண்ணை சற்று ஒத்திருந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கலாம் . 


இதற்கு வசதியாக நமது மொபைல் நம்பரை நாமே ஆன்லைன் மூலமாக தேர்வு செய்யும் வசதியை BSNL வழங்குகிறது. இந்த லிங்க்கில் சென்று உங்கள் மாநிலத்தை தேர்வு செய்யுங்கள் . உங்கள் மாநிலதிற்குரிய தளம் திறந்ததும் படத்தில் குறிப்பிட்டுள்ள இடத்தில டிராக் செய்து தளத்தை அன்லாக் செய்துகொள்ளுங்கள் . 


இப்போது உங்களுக்கு சில மொபைல் எண்கள்  காட்டப்படலாம் .அவற்றில் ஏதாவது பிடித்திருப்பின் அதை டிக் செய்து RESERVE NUMBER என்பதை கிளிக் செய்யுங்கள் .அடுத்து வரும் கட்டளைகளை பின்பற்றுவதன் மூலம் உங்களுக்கு ஒரு பின் நம்பர் கிடைக்கும் .

அந்த எண்ணை பத்திரமாக குறித்து வைத்துக்கொண்டு 48 மணி நேரத்திற்குள்ளாக உங்களுக்கு அருகாமையில் உள்ள BSNL  அலுவலகத்திற்கு சென்று சிம் கார்டை பெற்றுக்கொள்ளலாம். 

நீங்கள் விரும்பும் எண்ணை தேர்வு செய்ய தளத்தில் இருக்கும் SEARCH வழிமுறையை பின்பற்றலாம் . 

FANCY எண்கள் தேவைப்பட்டால் அதற்குரிய கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.