24 பிப்ரவரி 2012

உலகின் மிகச் சிறந்த இலவச வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் Avast 7 டவுன்லோட்

சமீப காலமாக வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்களில் ஒரு சிறந்த இடத்தை பெற்று வருகிறது Avast  Antivirus  மென்பொருள் .

பணம் கொடுத்து வாங்கும் சில மென்பொருட்களை விட இம்மென்பொருளின் இலவச பதிப்பு சிறப்பாக செயல் படுகிறது .

இதன் அண்மைய பதிப்பான Version  7  தற்போது வெளியிடப்பட்டுள்ளது .தேவைப் படுவோர் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள் . 

தரவிறக்க இங்கே கிளிக் செய்யவும் .

23 பிப்ரவரி 2012

கூடங்குளம் பிரச்சனை : இன்று 12000 பேர் உண்ணாவிரதம் .

கூடங்குளம் பிரச்சனையில் மாநில அரசு அமைத்த நால்வர் நிபுணர் குழு மக்களை சந்திக்காமல் ஒருதலைப் பட்சமாக அறிக்கை வெளியிட்டதைக் கண்டித்தும் தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் கூடங்குளம் அணு உலையை நிரந்தரமாக மூடக்கோரியும் இடிந்தகரை கிராமத்தில் 107  பேர் 72  மணி நேர தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர் .


இன்று இவ்வுண்ணாவிரதத்த்திற்கு ஆதரவாக சுமார் 12000  பேர் கலந்துகொண்டனர் .

72  மணி நேர உண்ணாவிரதத்தில் ஈடு பட்டுள்ளவர்கள் .


இன்று உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டவர்கள்

21 பிப்ரவரி 2012

அணு உலையை நிரந்தரமாக மூடு -இடிந்தகரையில் இன்று 10000 பேர் உண்ணாவிரதம் !

கூடங்குளம் அணு மின் நிலையம் மக்கள் போராட்டத்தையடுத்து தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது .

இந்நிலையில் மாநில அரசின் வல்லுநர் குழு இரு தினங்களுக்கு முன் கூடங்குளம் வந்தது .ஆனால் மக்களை சந்திக்காமல் அணு உலையை மட்டும் சுற்றி பார்த்துவிட்டு அணு உலைக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டது .

இது கூடங்குளம் பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதன் காரணமாக நேற்று மாலை அவசரமாக அணு உலை போராட்டக்குழுவினர் ஆலோசனை நடத்தினர் .

அதன்படி தமிழக அரசின் வல்லுநர் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் ,கூடங்குளம் அணு உலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் நேற்று (20 -2 -2012 )நள்ளிரவு 12  மணியிலிருந்து 72  மணி நேரம் தொடர் உண்ணாவிரதம் தொடங்கப்பட்டுள்ளது .

கூடங்குளம் பகுதியைச் சார்ந்த 107  பேர் இந்த தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இவர்களுக்கு ஆதரவாக இன்று 10000  க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

உண்ணாவிரதத்தில் மாநில நிபுணர் குழு மக்களை சந்திக்க வேண்டும் எனவும் அவ்வாறு சந்திக்காமல் ஒரு தலைப் பட்சமாக ஆய்வறிக்கையை வெளியிட்டால் அதை  50000  க்கும் மேற்பட்டோர் கூடி  தீயிட்டு கொழுத்துவோம் என்று போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.

20 பிப்ரவரி 2012

இடிந்தகரையில் இன்றிரவு முதல் 72 மணி நேரம் உண்ணாவிரதம் .

கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன .

இந்நிலையில் நேற்று முன் தினம் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு வந்த தமிழக அரசின் நிபுணர் குழுவினர்  மூன்று மணி நேரம் அணு உலையை பார்வையிட்டு அணு உலை பாதுகாப்பாக உள்ளது என்று கூறினர்.

கூடங்குளம் பகுதி பொதுமக்களின் கருத்தை கேட்கவேண்டும் என்று போராட்டக்குழுவினர் விடுத்த கோரிக்கையை அவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். 

இதைக் கண்டிக்கும் விதமாகவும் ,கூடங்குளம் அணு உலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் இன்றிரவு 12  மணி முதல் தொடர்ந்து 72  மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக போராட்டக்குழுவினர் கூறியுள்ளனர்.

முன்னதாக இன்று காலை பொதுமக்கள் அணு உலையை முற்றுகையிடக் கூடும் என்ற நோக்கில் அணு உலைக்கு அருகில் கிட்டத்தட்ட 1000  போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் .பொதுமக்களை கைது செய்து அடைத்து வைக்க திருமண மண்டபங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன .ஆனால் இன்று அணு உலைக்கு அருகில் பொதுமக்கள் யாரும் செல்லவில்லை.

கூடங்குளம் பிரச்சினையில் தற்போது தமிழக அரசுக்கும் போராட்டக் காரர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் கூடங்குளம் போராட்டம் உச்ச கட்ட பரபரப்பை எட்டியுள்ளது .

19 பிப்ரவரி 2012

கூடங்குளம் அணு உலை மீண்டும் முற்றுகை !

கூடங்குளம் அணு உலை கடந்த இரு மாதங்களாக நிறுத்தப்பட்டு வைக்கப் பட்டுள்ளது .இந்நிலையில் தமிழக அரசு அமைத்துள்ள நால்வர் நிபுணர் குழு அணு உலையைப் பார்வையிடுவதற்காக கூடங்குளம் வந்தது .

அதே வேளையில் நிபுணர் குழு அணு மின் நிலையத்திற்குள் செல்வதற்கு முன்னதாக அணு மின் நிலைய அதிகாரிகள் நான்கு வாகனங்களில் அணு மின் நிலையத்திற்குள் சென்றனர் .

இதை அணு மின் நிலையத்திற்கு எதிரில் அமைக்கப் பட்டிருக்கும் அணு உலை எதிப்பு அலுவலகத்திலுள்ள நபர்கள் பார்த்தனர் .அவர்கள் இதை உடனடியாக ஊர் மக்களுக்கு தெரியப் படுத்தினர் .

உடனடியாக ஆலயங்களில் மணியடிக்கப் பட்டு மக்கள் திரண்டு அணு உலை முன்பாக சென்று முற்றுகையிட்டனர் .தமிழக நிபுணர் குழுவை மட்டுமே அணு உலைக்குள் அனுமதிப்போம் என்றும் ,பிரச்சினை முடியும் வரை அணு மின் நிலைய ஊழியர்களை உள்ளே செல்ல அனுமதிக்க முடியாது என்பது மக்களின் கருத்து .

அதன் பின்னர் நிபுணர் குழுவினர் அணு மின் நிலையத்திற்குள் சென்றனர் .அணு மின் நிலைய ஊழியர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று(18 -2 -2012 ) மதியத்திலிருந்து இரவு 9  மணி வரை முற்றுகைப் போராட்டம் நடந்தது.
அணு மின் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள் 

14 பிப்ரவரி 2012

ஓம் சக்தி -கே.வீரமணி பாடல் .பாடல்வரிகளுடன் !

உடல் மற்றும் மன ரீதியாக மனிதன் துன்பப்படும் வேளையில் அவனுக்கு கை கொடுப்பது தெய்வ பக்திதான் .அந்த வகையில் இந்த பக்திப் பாடலை கேட்கும்போது ஒரு மன ஆறுதல்  ஏற்படுகிறது .


பாடலை ஆன்லைனில் கேட்க இங்கே சுட்டுங்கள் .

பாடல் வரிகள் கீழே .

நெறஞ்ச மனசு உனக்குத்தாண்டி மகமாயி உன்னே
நெனச்சிப்புட்டா கெடுதல் எல்லாம் சுகமாகி
மறைகளும் இதை சொல்லுமடி மகமாயி கண்ணில்
தொட்டியங்குளம்  தெரியுதடி மகமாயி

நமையாளும் நாயகியாம் நம் மகமாயி
கண் இமை போல காத்திடுவாள் மகமாயி
உமையவள் அவளே இமவான் மகளே
சமயத்தில் வருபவள் அவளே எங்கள் சமயபுரத்தாள் அவளே

இசைக்கலை யாவும் தந்தருளவேண்டும்
என் குல தெய்வமே மகமாயி 
தஞ்சமென்று உன்னை சரணடைந்தேன் தஞ்சை முத்துமாரி
முந்தை வினைகளை களைந்தெறிவாள்
தாய் மயிலையிலே முண்டகக்கண்ணி கோலவிழி பத்ரகாளி
வேண்டும் வரம் தருவாள் என் தாய் வேற்காட்டு கருமாரி

ஆத்தா கருமாரி கண் பார்த்தா போதும்
பார்த்தா வினை தீரும் பாவமெல்லாம் பறந்தோடும்
ஆத்தா கருமாரி கண் பார்த்தா போதும்
பார்த்தா வினை தீரும் பாவமெல்லாம் பறந்தோடும் 
காத்தாயி மகமாயி கருணை தெய்வம் மாகாளி (2)
நார்த்தாமலை வாழும் ....  நார்த்தாமலை வாழும்
எங்கள் நாயகியாம் திரிசூலி (ஆத்தா)

நெஞ்சினிலே நிறைந்திருப்பா நிம்மதியைத் தந்திடுவா
வஞ்சகரின் வாழ்வறுப்பா வந்த வினை நீக்கிடுவா
மஞ்சளிலே குளிச்சி நிப்பா சிங்காரமாய் சிரிச்சி நிப்பா (2)
தஞ்சமென்று வந்துவிட்டா தயங்காம காத்து நிப்பா (2)

மல்லிகை சரம் தொடுத்து மாலையிட்டோம்-அரிசி
மாவிளக்கு ஏற்றி வைத்து பொங்கலுமிட்டோம்-அம்மா
துள்ளியே எந்தன் முன்னே வாருமம்மா அம்மா
தூயவளே என் தாயே மாரியம்மா

பட்டுப் பீதாம்பரத்தில் தாவணியும் உனக்கு
பாவாடை சேலைகளும்  கொண்டு வந்தோம்
பட்டுப் பீதாம்பரத்தில் தாவணியும் உனக்கு
பாவாடை சேலைகளும் கொண்டு வந்தோம்

உன்னிடத்தில் சொல்லாமல்
வேறு எந்த உறவிடத்தில் முறையிடுவேன் தாயே
எந்தன் அன்னையவள் நீயிருக்க உலகில் மற்ற
அந்நியரை இவன் கெஞ்சிடுதல் முறையோ அம்மா
கண்ணீரை துடைத்து விட ஓடி வா அம்மா
காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா
இந்த சின்னவனின் குரல்  கேட்டு உன் முகம் திருப்பு-அம்மா
சிரித்தபடி என்னை தினம் வழி அனுப்பு அம்மா

கண்ணிரண்டும் உன்னுருவே காணவேண்டும்-அம்மா
காலிரண்டும் உன்னடியே நாடவேண்டும்
பண்ணமைக்கும் நாவுனையே பாடவேண்டும்-அம்மா
எல்லோரும் பக்தியோடு கையெடுத்து
உன்னையே கும்பிடவேண்டும்
எண்ணமெல்லாம் உன் நினைவே ஆகவேண்டும்
இருப்பதெல்லாம் உன்னுடையதாகவேண்டும்

மண்ணளக்கும்   தாயே
பெரிய பாளையத்தம்மா
மண்ணளக்கும்   தாயே
குலதெய்வமே தொட்டியங்குளம் மாரியம்மா
மாமதுரையிலே தெப்பக்குளம் மாரியம்மா
விருதுநகரிலே முத்துமாரியம்மா
சிவகாசியிலே பத்ரகாளியம்மா
வீரபாண்டியிலே கௌமாரியம்மா
தாயமங்கலத்திலே முத்துமாரியம்மா
இருக்கன்குடியிலே மாரியம்மா
செந்தூரிலே சந்தன மாரியம்மா
ஆரல்வாய்மொழியிலே முப்பந்தலிலே இசக்கி மாரியம்மா
பெருங்கரையிலே சதுரங்க நாயகியம்மா
சிவகங்கையிலே வெட்டுடையா காளியம்மா
திண்டுக்கல்லிலே கோட்டை மாரியம்மா
மணப்பாறையிலே முத்துமாரியம்மா
திருச்சியிலே சமயபுரத்தம்மா வெட்காளியம்மா
சிறுவாச்சூர் மதுரகாளியம்மா

மண்ணளக்கும்   தாயே
தஞ்சையிலே புன்னைநல்லூர் மாரியம்மா
குடந்தையிலே படைவெட்டி மாரியம்மா 
வலங்கைமானிலே பாடைகட்டி மாரியம்மா
நாகையிலே நெல்லுக்கடை மாரியம்மா
வேளாங்கண்ணியிலே வேளாங்கண்ணியம்மா
திருத்துறைப்பூண்டியிலே முள்ளாச்சியம்மா
எட்டுக்குடியிலே துரோபதை மாரியம்மா
ஆரூரிலே சீதளாதேவி எல்லம்மா
பட்டுக்கோட்டையிலே நாடியம்மா
அறந்தாங்கியிலே வீரமாகாளியம்மா
திருவப்பூர் மாரியம்மா
கொன்னையூர் மாரியம்மா
காரைக்குடியிலே கொப்புடைய நாயகியம்மா
கண்கொடுக்கும் தெய்வமே நாட்டரசன்கோட்டை வாழும்
என் கண்ணாத்தா

மண்ணளக்கும்   தாயே
படவேட்டிலே ரேணுகா பரமேஸ்வரியம்மா
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியம்மா
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியம்மா
வெட்டுவாணம் எல்லையம்மா
செங்கையிலே மணப்பாக்கம் கன்னியம்மா
செங்கையிலே நாகத்தம்மா

மண்ணளக்கும்   தாயே
சென்னையிலே மயிலையிலே அருள்மிகுதேவி
முண்டகக்கண்ணியம்மா
கோலவிழி பத்ரகாளியம்மா
அல்லிக்கேணியிலே எல்லம்மா
புரசையிலே பாதாள பொன்னியம்மா
மாம்பலத்திலே முப்பாத்தம்மா 
வடசென்னையிலே ரேணுகா பரமேஸ்வரியம்மா

மண்ணளக்கும்   தாயே
சேலத்திலே அன்னதான மாரியம்மா
ஈரோட்டிலே சின்ன மாரி பெரிய மாரியம்மா
கோவையிலே தண்டுமாரியம்மா ..கோனியம்மா
சத்யமங்கலத்திலே பண்ணாரி மாரியம்மா

மண்ணளக்கும்   தாயே
வட நாட்டிலே காசிவிசாலாட்ச்சியம்மா
வங்காளத்திலே காளியம்மா
விஜயவாடாவிலே கனக துர்க்கையம்மா
கர்நாடக மாநிலத்திலே  அன்னை சாமுண்டீஸ்வரி
சாரதாம்பிகே மூகாம்பிகேயம்மா
தங்க வயலிலே கங்கையம்மா

மண்ணளக்கும்   தாயே
கேரளத்திலே சோட்டாணிக்கரை பகவதி அம்மே
கொடுங்கல்லூர் பகவதியம்மே

மண்ணளக்கும்   தாயே
மலேசிய நாட்டிலே மகா மாரியம்மா
சிங்கப்பூரிலே வீரமாகாளியம்மாஇவையனைத்தையும் ஒன்றுசேர்ந்த சக்தி சொரூபமே
அம்மா திருவேற்காட்டில்வாழ்
கனவிலும் நினைவிலும் இவண் தொழும்
என் சத்திய தெய்வமே கருமாரியம்மா .....கருமாரியம்மா
இந்த மகனுடைய குறைகளையும் கவலைகளையும் தீரடியம்மா
அம்மா .... அம்மா அம்மா அம்மா ... அம்மா

அம்மா கற்பூர நாயகியே கனகவல்லி
காளிமகமாயி கருமாரியம்மா
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா
பூவிருந்தவல்லி தெய்வயானையம்மா
விற்கோல வேதவல்லி விசாலாட்சி
விழிக்கோல மாமதுரை மீனாட்சி
சொற்கோவில்  நானமைத்தேன் இங்கு தாயே அம்மா
சுடராக வாழ்விப்பாய் எம்மை நீயே

புவனமுழுதாளுகின்ற புவனேஸ்வரி
புறமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி
நவ நவமாய் வடிவாகும் நாகேஸ்வரி-அம்மா
நம்பினவர் கைவிளக்கே சர்வேஸ்வரி
கவலைகளை தீர்த்து வைக்கும் காளீஸ்வரி
காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி
உவமானப் பரமருளே ஜெகதீஸ்வரி-அம்மா
உன்னடிமைச் சிறியேனை நீயாதரி

நெற்றியில் உன்  குங்குமமே நிறையவேண்டும்
நெஞ்சில் உன்  திருநாமம் வழியவேண்டும்
கற்றதெல்லாம் மென்மேலும் பெருகவேண்டும்
கவிதையிலே உன் நாமம் பாடவேண்டும்
சுற்றமெல்லாம் நீடூழி வாழவேண்டும்
ஜோதியிலே நீயிருந்து ஆளவேண்டும்
மற்றதெல்லாம் நானுனக்கு சொல்லலாமா
மடிமீது பிள்ளை என்னைத்  தள்ளலாமா

அன்னைக்கு உபதாரம் செய்வதுமுண்டோ
அருள் செய்ய இந்நேரம் ஆவதுமுண்டோ
கண்ணுக்கு இமையின்றி காவலுமுண்டோ அம்மா
கன்றுக்கும் பசுவின்றி சொந்தமுண்டோ
முள்ளைக்கும் பிள்ளைக்கும் பார்ப்பதுமுண்டோ
முழுமைக்கும் நீ எந்தன் அன்னையன்றோ
எண்ணைக்கும் விளக்குக்கும் பேதமுண்டோ-அம்மா
என்றைக்கும் நானுந்தன் பிள்ளையன்றோ

அன்புக்கே நானடிமை ஆகவேண்டும்
அறிவுக்கே என் காது கேட்கவேண்டும்
வம்புக்கே போகாமல் இருக்கவேண்டும்-அம்மா  
வஞ்சத்தை என் நெஞ்சம் அறுக்கவேண்டும்
பண்புக்கே உயிர் வாழ ஆசை வேண்டும்
பரிவுக்கே நாங்கள் என்றும்  பணியவேண்டும்
என் பக்கம் இவையெல்லாம் இருக்கவேண்டும்-அம்மா  
என் நாவில்  நீயென்றும் பாடவேண்டும்

கும்பிடவோ கையிரண்டு போதவில்லை
கூப்பிடவோ நாவொன்றால்  முடியவில்லை
நம்பிடவோ மெய்யதனில் சக்தியில்லை
நடந்திடவோ காலிரண்டால் ஆகவில்லை
செம்பவள வாயழகி உன்னெழிலோ-இவன்  
சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை
அம்பளவு விழியாலே உன்னை என்றும் இவன்
அடிபணியும் ஆசைக்கோர் அளவுமில்லை

காற்றாகி கனலாகி கடலாகினாய்
கயிறாகி உயிராகி உடலாகினாய்
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்
நிலமாகி பயிராகி உணவாகினாய்
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்
காணாத நாளில்லை தாயே உன்னை

அம்மா தினம் உன்னை பாடாத நாளில்லை
கருமாரி மகமாயி
பொருளோடு புகழோடு நோய் நொடியில்லாமல்
எல்லோரையும் வைப்பாய் அம்மா ...அம்மா....

வேற்காடு ஆலயத்தில் மூலஸ்தானத்தில்
சரவிளக்கு சுடர்விடவே

சாற்றிய மாலை எல்லாம் உரு மறைக்க
அம்மாவுக்கு அர்ச்சகர்கள்

ஓம் அகா ராஜக்ஷ்ய ராகாராயை நமக
ஓம் அன்னபூர்ணாயை நமக
ஓம் அம்பிகாயை நமக
ஓம் அங்காள பரமேஸ்வரியை நமக
ஓம் ஆச்யந்த ரகிகாயை நமக
ஓம் இச்சாகிருதையே நமக
ஓம் ஈஸ்வரப்ப்ரிய வல்லபாயை நமக
ஓம் ராஜ ராஜேஸ்வரி மூகாயை நமக
ஓம் ராமதாசாய வந்திதாயை நமக
ஓம் கிருஷ்ண மாயை நமக

அம்மாவுக்கு அர்ச்சனை செய்து
கற்பூரம் காட்டி கை தொழுதால்
கணத்திலே எங்கிருந்தாலும் ஓடி வருவாள்
தேவி கருமாரி

கிண்கிணி கிலுகிலுக்க ...கால் சலங்கையும் சலசலக்க
கிண்கிணி கிலுகிலுக்க கால் சலங்கையும் சலசலக்க
உடலெல்லாம் சிலுசிலுக்க உன் சிரிப்பொலி கேட்குதம்மா
எங்கள் சிந்தை குளிருதம்மா ....அம்மா...

உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்துப் பாடாட்டா
இந்த ஜென்மம் எடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா

செல்லாத்தா...செல்ல மாரியாத்தா எங்கள்
சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா
கண்ணாத்தா உன்னை காணாட்டா
இந்த கண்கள் இருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா

உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா
இந்த ஜென்மம் எடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா
செல்லாத்தா செல்ல மாரியாத்தா எங்கள்
சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா
கண்ணாத்தா உன்னை காணாட்டா
இந்த கண்கள் இருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா
இந்த ஜென்மம் எடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா
ஆதிசக்தி மாதா கருமாரி மாதா
எங்கள் ஆதிசக்தி மாதா கருமாரியாத்தா

தீ மிதித்து வந்திடுவார் பக்தர்களும் உனை நாடி
தேவி உன்னை பாடிவரும் அன்பர்களும் பலகோடி
புற்றினிலே பாலூற்றி பணிந்திடுவார் பலகோடி
சக்தி உமை நாயகியே சங்கரியே கருமாரி
ஆதிசக்தி மாதா கருமாரியாத்தா
எங்கள் ஆதிசக்தி மாதா கருமாரியாத்தா

உலகமே ஆடுதம்மா உன் சிரிப்பிலே அம்மா
உமையவளே என் தாயே மாரியம்மா
பூவாடை வீசுதம்மா பூமகளே உனக்கு
பாமாலை கொண்டு வந்தோம் பாருமம்மா உனக்கு
பாமாலை கொண்டு வந்தோம் பாருமம்மா


சமய புரத்தாளே மாரியம்மா அம்மா
சங்கரியே எந்தன் முன்னே வாருமம்மா

தொல்லைகளை அகற்றும் தெய்வமே மாரியம்மா
தொட்டியங்குளம் வாழும் மாரியம்மா
வேற்காடு தனிலிருக்கும் மாரியம்மா எனக்கு
வேண்டும் வரம் தருபவளே மாரியம்மா

மாரியம்மா கருமாரியம்மா
மாரியம்மா கருமாரியம்மா
மாரியம்மா கருமாரியம்மா
மாரியம்மா கருமாரியம்மா
மாரியம்மா கருமாரியம்மா
மாரியம்மா கருமாரியம்மா

ஆத்தா கருமாரி கண்பார்த்தா போதும்
பார்த்தா வினை தீரும் பாவமெல்லாம் பறந்தோடும்
ஆத்தா கருமாரி கண்பார்த்தா போதும்
பார்த்தா வினை தீரும் பாவமெல்லாம் பறந்தோடும்
கற்பூர நாயகியே கனகவல்லி
காளிமகமாயி கருமாரியம்மா
கருமாரியம்மா...கருமாரியம்மா .

13 பிப்ரவரி 2012

கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி தமிழக இயக்கங்கள் கூடங்குளத்தில் பேரணி!

கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.


 நேற்று முன் தினம் (11-02-2011) மக்கள்  கலை  இலக்கிய  கழகம் ,புரட்சிகர  மாணவர் -இளைஞர்  முன்னணி ,விவசாயிகள் விடுதலை முன்னணி,புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ,பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கூடங்குளத்தில் ஒரு மிகப் பெரிய பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடத்தினர் .


* இந்தியாவை அமெரிக்காவின் அடிமையாக்கும் இந்திய  அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை கிழித்தெறிவோம்,

* வளர்ச்சி-வேலை வாய்ப்பு-வல்லரசு என்று ஆசை காட்டி தேசத் துரோக மக்கள் விரோத சதியில் ஈடு பட்டிருக்கும்காங்கிராஸ்,பாரதீய ஜனதா உள்ளிட்ட ஓட்டுப் பொறுக்கிகளைப் புறக்கணிப்போம் ,

* தனியார் மயம்,தாராளமயம் ,உலகமய-மறு காலனியாதிக்கத்தை முறியடிப்போம்
  
போன்ற கோஷங்களை எழுப்பினர்.போராட்டத்தில் 2000  பேருக்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தையொட்டி அணு மின் நிலையத்தின் முன் போலீஸ் குவிக்கப்பட்டுள்ள காட்சி

அணுமின் நிலையமா?பவர் கட்டா ? குழப்பத்தில் அரசியல் கட்சிகள் !

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கூடங்குளம் அணு உலைக்கெதிரான போராட்டங்கள் தீவிரமடையத் தொடங்கின .

மக்கள் கூட்டத்தைக் கண்டதும் அரசியல் கட்சியினர் சும்மா இருப்பார்களா என்ன ..ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

பல தலைவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.ஏன் ...இன்று அணு உலைக்கு ஆதரவாகப்  பிரச்சாரம் செய்துவரும் முக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் கூட கலந்து கொண்டனர் .

போராட்டத்தை கலைக்க அரசு எத்தனை முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக வரலாறு காணாத வகையில் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது .இது தானாக நிகழ்கிறதா ..இல்லை திட்டமிட்டே மின்வெட்டு ஏற்படுத்தப் படுகிறதா என்பது மர்மமாகவே உள்ளது .

தற்போது மின்வெட்டைக் கண்டித்து தமிழகமெங்கும் போராட்டங்கள் தொடங்கியுள்ளது .போராட்டம் நடக்கும் சில இடங்களில் கூடங்குளம் அணு உலையை உடனடியாகத் திறக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப் படுகிறது .

இச்சூழ்நிலை அணு உலையை எதிர்த்து வந்த கட்சிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதுபோல் தோன்றுகிறது.சில கட்சிகள் அணு உலைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன ...சில கட்சிகள் அணு உலை குறித்து வாயே திறப்பதில்லை..சில கட்சிகள் அணு உலைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கின்றன ..மேலும்  சில கட்சிகள் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கக் காத்திருக்கின்றன .

உண்மையிலேயே மக்களுக்கு தொண்டு செய்வதற்காக இக்கட்சிகள் உருவாக்கப் பட்டிருந்தால் இது போன்ற பிரச்சினைகளில்  தங்கள் நிலையை தெளிவு படுத்தி பிரச்சினைகள் உடனடியாகத் தீர முயற்சி செய்யவேண்டும்.

12 பிப்ரவரி 2012

ஒரு SMS ஜோக் !

தந்தை : ஏண்டா ரொம்ப நேரமா அழுதுகிட்டிருக்கிறே?
  
மகன்   :  அம்மா அடிச்சிட்டாங்கப்பா...
 
தந்தை : சீ ..சீ...இதுக்கெல்லாம் இப்படியா அழுவாங்க ...
 
மகன்  : அட போங்கப்பா நீங்க எவ்வளவு அடி பட்டாலும் தாங்கிடுறீங்க ...என்னால முடியல ...
 
தந்தை : சரி ...விட்றா...விட்றா ...பக்கத்துல யார் காதுலயும் விழுந்திடப் போகுது .

11 பிப்ரவரி 2012

மனித குழந்தைகளைப்போல் சண்டையிடும் பாண்டா குழந்தைகள் (கரடிகள்)

குழந்தைகளுக்கே உரித்தான குணம் ஒன்று உண்டு .அது என்னவென்றால் நாம் அவர்களுக்கு  வாங்கிக் கொடுக்கும் உணவுப் பண்டங்களை விட பிற குழந்தைகள் கையிலிருக்கும் பண்டங்களையே மிகவும் விரும்பும் .

சில வம்புக்கார குழந்தைகள் அடுத்த குழந்தையிடம் இருக்கும் பண்டத்தை தன திறமையால் ? பிடுங்கித்தின்பதும் உண்டு .

அது போல இரண்டு பாண்டாக் கரடிகள் சண்டையிடும் கண்கொள்ளாக் காட்சியைக் காணுங்கள் ....05 பிப்ரவரி 2012

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக 10000 பேர் பேரணி !

கூடங்குளம் அணு உலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த சில மாதங்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன .

இதன் ஒரு பகுதியாக நேற்று (04-02-2012) கூடங்குளம் அருகிலுள்ள ஊரான கூட்டப்புளியிளிருந்து விஸ்வநாதபுரம் என்ற ஊர் வரை 3  கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு மிகப்பெரிய பேரணி  நடைபெற்றது .பேரணியில் பெண்கள், குழந்தைகள் உட்பட பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர் .

பேரணியின் நிறைவில் அணு உலைக்கு எதிராக கருப்புக்கொடி ஏந்தி அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அதனைத்  தொடர்ந்து அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் டாக்டர் உதயகுமார் உட்பட 146  பேர் மொட்டையடித்துக்கொண்டனர் .

இந்திய அரசு பாமர மக்களை மொட்டையடிப்பதைக் கண்டிக்கும்விதமாக மொட்டையடித்துக்கொள்வதாக போராட்டக்குழுவினர் கூறினர்.


பேரணியில் கலந்துகொண்டவர்களின் ஒரு பகுதி 


 மொட்டையடித்துக்கொண்ட டாக்டர் உதயகுமார்