1984-ம் ஆண்டுக்குப் பிறகு ஒரு மிகப்பெரிய வெற்றியினை நடந்து முடிந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி பெற்றிருக்கிறது. அதே சமயம் காங்கிரஸ் வரலாற்றிலேயே மிகப்பெரும் தோல்வியை சந்திருக்கிறது.
1984-ல் காங்கிரஸ் பெற்ற வெற்றியை விட இது சிறப்பு வாய்ந்தது எனலாம். காரணம் அப்போது காங்கிரசின் வெற்றி இந்திரா காந்தியின் மரணத்தின் மூலம் கிடைத்த அனுதாப ஓட்டுக்களால் கிடைத்த வெற்றி.
பாரதிய ஜனதா கட்சியின் இந்த மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் காங்கிரஸ் எதிர்ப்பு அலையா? அல்லது மோடி ஆதரவு அலையா? என்ற விவாதம் எழுந்துள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் இந்த மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் காங்கிரஸ் எதிர்ப்பு அலையா? அல்லது மோடி ஆதரவு அலையா? என்ற விவாதம் எழுந்துள்ளது.
காங்கிரஸ் எதிர்ப்பு அலை மட்டுமே காரணம் என்றால் காங்கிரஸ் கூட்டணி மட்டுமே மிகப்பெரிய தோல்வியை சந்தித்திருக்கவேண்டும்.
ஆனால் இந்த தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து போட்டியிடாத சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகளும் பா.ஜ.க வால் பந்தாடப் பட்டுள்ளன.
எனவே காங்கிரஸ் ஆட்சியின் மீது மக்களுக்கு இருந்த
மிகப்பெரும் வெறுப்பு மட்டுமல்லாமல் மோடி மீது மக்களுக்கு உள்ள மிகப்பெரும்
எதிர்பார்ப்பு ஆகிய இரண்டும் சேர்ந்தே இப்பெரு வெற்றிக்கு காரணம் என எண்ணத் தோன்றுகிறது.
ஜெயலலிதா மற்றும் மம்தாவின் ஆதரவு இல்லாமல் ஆட்சியமைப்பதற்கு மோடி புண்ணியம் செய்திருக்கவேண்டும்.
பகவான் வரம் கொடுத்துட்டார். மோடி பயன்படுத்துவாரா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.