வீடியோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வீடியோ லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18 ஜூலை 2012

கடாஃபியின் கடைசி நிமிடங்கள் : புதிய வீடியோ

லிபிய அதிபராக இருந்த கடாஃபி கடந்த ஆண்டு அக்டோபர் 20  ல் கொல்லப்பட்டார் .தற்போது அவர் கொல்லப்பட்டபோது எடுக்கப்பட்டதாக கூறப்படும் புதிய  வீடியோ  வெளியாகியுள்ளது .



17 மார்ச் 2012

இஞ்சி தின்ன குரங்கும் எலுமிச்சை தின்ன குழந்தையும் -காமெடி !

யாராவது சாப்பாட்டை வேண்டாவெறுப்பாக உண்டால் இஞ்சி தின்ன குரங்கு போல இருக்கிறான் என்று சொல்லுவோம்.

இஞ்சி தின்ன குரங்கு எப்படி ஃபீல் பண்ணுகிறது என்பது நமக்குத் தெரியாது (நியாயமாக தெரிந்திருக்கவேண்டும்).

இந்த காணொளியில் எலுமிச்சை சாறை உண்ட குழந்தைகள் எப்படி ஃபீல் பண்ணுகிறார்கள் என்பதை கண்டு மகிழுங்கள்.


11 பிப்ரவரி 2012

மனித குழந்தைகளைப்போல் சண்டையிடும் பாண்டா குழந்தைகள் (கரடிகள்)

குழந்தைகளுக்கே உரித்தான குணம் ஒன்று உண்டு .அது என்னவென்றால் நாம் அவர்களுக்கு  வாங்கிக் கொடுக்கும் உணவுப் பண்டங்களை விட பிற குழந்தைகள் கையிலிருக்கும் பண்டங்களையே மிகவும் விரும்பும் .

சில வம்புக்கார குழந்தைகள் அடுத்த குழந்தையிடம் இருக்கும் பண்டத்தை தன திறமையால் ? பிடுங்கித்தின்பதும் உண்டு .

அது போல இரண்டு பாண்டாக் கரடிகள் சண்டையிடும் கண்கொள்ளாக் காட்சியைக் காணுங்கள் ....



27 ஜனவரி 2012

கூடங்குளம் போராட்டம் ஏன் ? விறுவிறுப்பான வீடியோ!

கூடங்குளம் அணு உலை போராட்டம் வெல்லவேண்டும் என வாழ்த்தி சமீபத்தில் கூடங்குளத்தை சேர்ந்த சகோதரர் பெப்சி கணேசன் தானே பாட்டெழுதி அதைப் பாடி வெளியிட்டார் .அப்பாடலை நெய்தலின் பாடல் என்ற தலைப்பில் கேரளா நண்பர்கள் காணொளியாக தயாரித்துள்ளார்கள் .அப்பாடலை இங்கே பகிர்கின்றேன் .

23 அக்டோபர் 2011

அணு உலை அரக்கனின் கொடூரம் :வீடியோ

ஜப்பானில் கடந்த 11-3-2011 அன்று நிகழ்ந்த சுனாமி தாக்குதலால் புகுஷிமா அணு உலைகள் கடும்   சேதமடைந்து  கதிரியக்கத்தை வெளியிட ஆரம்பித்தது .
அதை தொடர்ந்து அணு உலையை சுற்றி 30 கிலோமீட்டருக்குள் வசித்த மக்கள் உடனடியாக  வெளியேற்றப்பட்டனர் .

கதிர்வீச்சிலிருந்து தங்களை பாதுகாக்கவேண்டும் என்பதற்காக மக்கள் அனைவரும் பணம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை மட்டும்  கையிலெடுத்துக்கொண்டு  மீதமுள்ள உடைமைகள்  அனைத்தையும் அப்படியே விட்டுவிட்டு வெளியேறினார்கள் .ஆனால் இந்த அவசரத்தில் தாங்கள் வளர்த்த செல்லப் பிராணிகள் மற்றும் கால் நடைகளை அவர்களுடன் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது .

கீழே காணப்போகும் வீடியோ புகுஷிமாவிலிருந்து 30 கிலோமீட்டருக்குள் இருந்த ஒரு கால்நடைப் பண்ணை .இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால் நடைகள் வளர்க்கப் பட்டு வந்தன .பசுவின் பாலில் கதிர்வீச்சின் அளவு அதிகமாக இருக்கும் என்பதால்  பண்ணையின் உரிமையாளர்கள் அவற்றை  அடைத்துப்  போட்டுவிட்டு பாதுகாப்பான இடத்திற்கு சென்றுவிட்டார்கள் .பசுக்களுக்கு உணவில்லாததாலும் ,வெளியேற முடியாததாலும் அவை ஒவ்வொன்றாக மடியும் காட்சிதான் இது .





இது போல மேலும் பல இடங்களில் பல்லாயிரக் கணக்கான வீட்டு விலங்குகள் மடிந்துள்ளன .

இது போன்ற சம்பவங்களால்தான் மனம் மாறிய ஜப்பான் அரசு அணு உலைகளை மூட முடிவெடுத்துள்ளது .


டிஸ்கி : இது ஒரு மீள் பதிவு

04 செப்டம்பர் 2011

உலகப் பணக்காரர்களான மாப்பிள்ளை பெஞ்ச் மாணவர்கள் :வீடியோ

பொதுவாக பள்ளிக்கூடங்களில் சரியாக படிப்பு வராத மாணவர்களையும், சேட்டைகள் செய்யும் மாணவர்களையும் ஆசிரியர்கள் கடைசி பெஞ்சில் அமர வைப்பது வழக்கம் .

கடைசி பெஞ்சை மாப்பிள்ளை பெஞ்ச் என்றும் அழைப்பது உண்டு .ஆனால் பிற்காலங்களில் இந்த மாப்பிள்ளை பெஞ்ச் மாணவர்கள் பலர் வாழ்க்கையில் சிகரத்தைத் தொட்டு அவர்கள்  ஆசிரியர்களை வியப்பில் ஆழ்த்தியதுண்டு .

அவ்வாறு வியப்பில் ஆழ்த்திய மாணவர்களில் முக்கியமானவர்கள் காணொளியில் கண்டு மகிழுங்கள்  .

31 ஆகஸ்ட் 2011

ஒருபோதும் இவ்வாறு முயற்சிக்காதீர்கள் :விழிப்புணர்வு வீடியோ

கடந்த வாரம் இரு இளைஞர்கள் மும்பை வாசிகளை அதிர்ச்சியில் உறைய வைத்தார்கள் .

மும்பை உள்ளூர் ரயில்களில் பயணம் செய்யும் பயணிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒவ்வொரு வருடமும் விபத்துக்களில் இறக்கிறார்கள்.இந்நிலையில் சாகசம் (?)செய்வதாக நினைத்துக்கொண்டு இரு இளைஞர்கள் ஆபத்தான ரயில் பயணம் மேற்கொண்டார்கள் .

எவரேனும் இத்தகைய பயணம் மேற்கொள்ளக் கூடாது .

30 ஆகஸ்ட் 2011

போல்டான உசேன் போல்ட் :காணொளி

ஆனைக்கும் அடி சறுக்கும் என்பது பழமொழி .அது யாருக்கு பொருந்தியதோ தெரியவில்லை ஆனால் உலக தடகள சாம்பியன் உசேன் போல்ட்டுக்கு சரியாகப் பொருந்திவிட்டது .

100  மீட்டர் ஓட்டப் பந்தய உலக சாதனைக்கு சொந்த காரரான ஜமைக்காவின் உசேன் போல்ட்  28-8-2011 அன்று கொரியாவில் நடை பெற்ற உலக தடகள போட்டியில் கலந்து கொண்டார் .

14 ஆகஸ்ட் 2011

ஒரு வயசுப்பையனிடம் வில்லங்கமான கேள்விகள் !

இவர் பெயர் த்ரேஜோ.தலைப்பில் குறிப்பிட்டுள்ளது போல் இவருக்கு ஒரு வயதுதான் ஆகிறது .

மிகுந்த அறிவாளியான இவரிடம் 

உங்கள் இரவு நேர பிரச்சினைகள் என்ன 

உங்கள் குடும்ப வாழ்க்கை எப்படி தீவிரவாதியை எப்படி கையாளவேண்டும் 

இது போன்ற கேள்விகளுக்கு சளைக்காமல் பதிலளிக்கிறார் .நீங்களும் பாருங்கள்.

09 ஆகஸ்ட் 2011

மனதை மயக்கும் மாப்பிள்ள பாடல்கள் :வீடியோ

ஒவ்வொரு மொழியினருக்கும் பாடல்கள் ரசிப்பதில் ஒவ்வொரு விதமான ரசனை உள்ளது .

பொதுவாக தமிழ் நாட்டிலுள்ள இசை ரசிகர்களுக்கு நாட்டு புற மணம் கமழும் பாடல்கள் பிடிக்கும் .

பீகார் மற்று ஜார்கண்ட் மாநில மக்களுக்கு ஹிந்தி திரைப் பட பாடல்களை விட போஜ்பூரி மொழியிலுள்ள கிராமிய பாடல்களே அதிகம் பிடிக்கும் .

04 ஆகஸ்ட் 2011

சட்ட விரோத பார்க்கிங் : உலகைக் கவர்ந்த மேயரின் அதிரடி -வீடியோ

லித்துவேனியா  நாட்டின் வில்னியஸ் நகரத்திற்கு இரண்டாவது முறையாக தொடர்ந்து மேயராக தேர்ந்தெடுக்கப்  பட்டவர் அர்ச்சூராஸ் சுவாக்கஸ் .

நகர் சாலைகளில் இரு சக்கர வாகனங்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ள பகுதிகளில் கார்கள் பார்கிங் செய்யப் படுவதாக அவருக்கு அடிக்கடி புகார்கள் வந்தன .

பார்கிங் செய்பவர்களை தகுந்த அதிகாரிகள் மூலமாக எச்சரித்தார் மேயர்.ஆனால் பார்கிங் செய்பவர்கள் பெரும் பணக்காரர்களாக      இருந்தார்கள். அவர்கள் அதிகாரிகளின் எச்சரிக்கையை கண்டுகொள்ளவில்லை .

இதனால் ஆத்திரமடைந்த மேயர் தானே களத்தில் இறங்கினார் .ராணுவ டேன்க் ஒன்றை எடுத்து ஓட்டி வந்து சட்டத்திற்கு புறம்பாக நிறுத்தப் பட்ட கார்கள் அனைத்தையும் சிதைத்தார் .மேலும் அதனால் ரோட்டில் சிதறிய கண்ணாடித் துண்டுகளையும் தானே சுத்தம் செய்தார் .

மேயரின் அதிரடி கீழே .

01 ஆகஸ்ட் 2011

புலிக் குட்டிக்கு புட்டிப்பால் கொடுக்கும் குரங்கு : அதிசய காணொளி

நன்றி : த டெலிகிராப் ,யு .கே .
தாய்லாந்து  நாட்டின் தலைநகர் பாங்காக்கிலிருந்து 30  கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த மிருக காட்சி சாலை .

30 ஜூலை 2011

பேசும் நாய்கள் : காமெடி காணொளி !

1 .இரு நண்பர்கள் ,இவர்களுக்கிடையே ஏதோ தகராறு காணொளியை பார்த்துவிட்டு  உங்களால்  முடிந்தால் அவற்றை சமாதானம் செய்யுங்கள் .

20 ஜூலை 2011

நியூயார்க் போலீஸ் வாணவேடிக்கை : வீடியோ

அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்குள் விழாக்களில் பயன்படுத்தும் வெடிகளை விற்பதோ ,வாங்குவதோ தடை செய்யப்பட்டுள்ளது .

தடையை மீறி விற்கப்பட்ட பத்து லட்சம் ரூபாய் மதிப்பிலான வெடிகளை நியூயார்க் நகர காவல் துறையினர் பறி முதல் செய்து அழித்தனர்.

மூன்றாயிரம் கிலோ எடையுள்ள வெடிகள் ஒரே இடத்தில் கொட்டப்பட்டு அழிக்கப்பட்ட காணொளி .

எச்சரிக்கை : பாதுகாப்பாக நின்றுகொண்டு காணொளியை கண்டு ரசியுங்கள் .

19 ஜூலை 2011

அதி அற்புதமான ஐந்து ரோபோக்கள் :வீடியோ

மனிதனால் இயலாத சில வேலைகளை செய்ய ரோபோக்கள் உருவாக்கப்படுகின்றன.ஜப்பான்நாட்டில் இவை பலரால் பயன்படுத்தப் படுகின்றன.இவற்றில் சிறந்த ஐந்து ரோபோக்களின் காணொளிகள் இங்கே .

1.BIG DOG

இது ஒரு அற்புதமான கண்டு பிடிப்பு .மிகவும் உறுதியான கால்களை கொண்டது. பனிப்பரப்புகள்,மற்றும் மனிதன் ,வாகனங்கள் செல்ல முடியாத இடங்களுக்கு செல்ல வல்லது .




2.ROBAMA

இது ஒரு தானியங்கி வேக்குவம் கிளீனர் .மேடு பள்ளமான இடங்களை அதுவே கண்டுணர்ந்து சுத்தம் செய்யக்கூடியது .



3.AIBO

சோனி நிறுவனத்தின் அற்புதமான கண்டு பிடிப்பு .மனிதன் பேச்சுக்கு செவி சாய்த்து அதற்கேற்றார் போல் செயல் படக்கூடியது .



4.QRIO

இதுவும் சோனியின் தயாரிப்புதான் .பேச்சு மற்றும் உடலசைவு மூலம் கொடுக்கப்படும் கட்டளைகளுக்கு பணிகிறது .பாட்டுக்கு நடனமாடவும் முடியும் ..குழந்தைகளை கவர்ந்தது .



5.ASIMO

ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்பு .இது கிட்டத்தட்ட மனிதனாகவே செயல்படுகிறது .



டிஸ்கி : சரி ...இதனால நமக்கு என்ன பிரயோஜனம்ன்னு கேக்குறீங்களா? அதையேதான் நானும் கேக்கிறேன் உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சா சொல்லுங்க .ஹி ..ஹி ...

14 ஜூலை 2011

பறக்கும் அதிசய மனிதன் ! : காணொளி

பல்வேறு வகையான விமானங்களில் பலரும் பறப்பதை நாம் கண்டிருக்கிறோம் .

ஆனால் அமெரிக்காவை சேர்ந்த ஈவ்ஸ் ரோஸி என்கின்ற இந்த வீரர் ஒரு புதிய முயற்சியில் இறங்கியுள்ளார் .ஒரு இயந்திரம் பொருத்தப்பட்ட இறக்கையை தனது உடலில் பொருத்திக்கொண்டு 3000  அடி உயரத்தில் 200  மைல் வேகத்தில் பறந்து சாதனை படைத்துள்ளார் .

யாரும்  செய்ய தயங்கும் இந்த பயங்கரமான முயற்ச்சியை செய்து சாதித்துள்ளார் .தான் இதன் மூலம் பறக்கும்போது ஒரு பறவையை போல உணர்வதாக அவர் கூறினார் .எதிர் காலத்தில் இது மிகவும் உபயோகமுள்ளதாக இருக்கும் எனவும் கூறினார் .

மயிர் கூச்செறிய வைக்கும் அந்த சாதனையின் காணொளி .

09 ஜூலை 2011

AK -47 சுடும் மனித குரங்கு :புதிய வீடியோ

குரங்கு கையில் பூமாலையை கொடுத்தால் எதற்கு ஆகும் என்று நாம் சொல்வதுண்டு .


ஆனால் இங்கே சிலர் பயங்கர ஆயுதமான AK-47 ஐ மனித குரங்கின் கையில் கொடுத்துவிட்டு உயிர் தப்ப போராடுகிறார்கள் .



டிஸ்கி : எது எது யார்கிட்ட இருக்கணுமோ அவுங்ககிட்டதான் இருக்கணும். இல்லாட்டி அவஸ்தைதான் .ரைட்டா ...

ஊரை தூக்கி கடலில் போடும் காணொளி !

டைட்டானிக் கப்பல் எவ்வளவு பெரியது என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். இன்றும் டைட்டானிக் கப்பலை விட பெரிய சொகுசுக்கப்பல்கள்  பல பயன்பாட்டில உள்ளன .

இவற்றை துறை முகங்களில் நாம் காணும்போது ஆச்சரியத்தில் மெய் மறந்து விடுவோம் .ஆனால் இவ்வளவு பெரிய கப்பலை தொழிற்ச்சாலைகளில் வடிவமைத்து கடலில் விடப்படுவது எப்படி என்பதை பெரும்பாலோனோர் அறிந்திருக்க வாய்ப்பில்லை .

07 ஜூலை 2011

அதி பயங்கர புழுதி புயல் : காணொளி

கடந்த 5-7-2011 அன்று அமெரிக்காவில் அமைந்துள்ள போனிக்ஸ் நகரத்தை அதி பயங்கர புழுதி புயல் தாக்கியது .


60 மைல் அகலத்தையும் 1 மைல் உயரமும் கொண்ட இந்த புழுதி புயல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் அந்நகரை தாக்கியது .

ஆங்கில படங்களில் வரும் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு சவால் விடும் வகையில் அதன் தாக்குதல் அமைந்திருந்தது .