பிளாக்கர் டிப்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பிளாக்கர் டிப்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

02 நவம்பர் 2011

உங்கள் பிளாக் வெவ்வேறு கணினி திரைகளில் எவ்வாறு தோற்றமளிக்கிறது என்பதை அறியவேண்டுமா?

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நமக்குப் பிடித்த  முறையில் நம் வலைப்பூவை வடிவமைப்போம் .வடிவமைக்கும்போது அது நமது கணினி திரையில் எவ்வாறு தோற்றமளிக்கிறது என்பதை மட்டுமே நாம்  அறிந்திருப்போம் .ஆனால் வெவ்வேறு ரெசொலூஷன் கொண்ட கணினித் திரைகளில் அது எப்படி தோற்றமளிக்கும் என்பதை நாம் அறிந்திருக்க மாட்டோம் .


உதாரணமாக நமது கணினி திரையின் ரெசொலூஷன் 1600 x900  என்று வைத்துக் கொள்வோம் நமது பிளாக் 800x600  ரெசொலூஷன் கொண்ட கணினி திரையில் எப்படி தோற்றமளிக்கும் என்பதை நாம் அறிய முடியாது .அதை நாம் அறிந்துகொண்டால் அதற்கேற்ற முறையில் நமது வலைப்பூவை வடிவமைக்கலாம் .

http://resolutiontester.com/ இந்த தளத்திற்கு சென்று நமது வலைப்பூ முகவரியைக் கொடுத்தால் வெவ்வேறு ரெசொலூஷன்களில் நமது வலைப்பூ எவ்வாறு தோற்றமளிக்கும் என்பதை அறிந்துகொள்ளலாம் .

பொதுவாக தற்போது உபயோகத்தில் உள்ள 95  சதவீத கணினி திரைகள் 1024x768  மற்றும் அதற்கு அதிகமான ரேசொலூஷனை கொண்டுள்ளன. இதற்கேற்ற முறையில்  நமது வலைப்பூ இருந்தால் அது வாசகர்களை கவரும் விதத்தில் அமையும் .

18 ஜூலை 2011

பதிவிடுதலால் மரணத்தை வென்ற பெண் :உண்மை சம்பவம்

இந்நாட்களில் புற்று நோய் தாக்கிவிட்டது என்பதை அறிந்ததுமே  இனி வாழ்க்கை அவ்வளவுதான் என்று  பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கையிழந்து  சோகத்தில் உறைந்துவிடுகின்றனர்.

23 ஜூன் 2011

உலகின் TOP 5 பதிவர்கள் !

பதிவர்கள் அனைவருக்கும் ஒரு உற்சாகம் அளிக்கும்  இடுகை இது .பதிவுலகில் நாம் ஒவ்வொரு சாதனையை எட்டும்போதும் பூரிப்படைகிறோம் .
அதிக  பின்பற்றுபவர்கள் ,அதிக பார்வையாளர்கள் ,அதிக கருத்துரையாளர்கள் வரும்போது நாம் மகிழ்ச்சி அடைகிறோம் .
மார்ச் மாத நிலவரப்படி  நமது பதிவர்கள் குடும்பத்தில் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளவர்கள் யார்  யார் என்பதை பார்ப்போமா .

17 ஜூன் 2011

பதிவர்களுக்கு Comment களால் கிடைக்கும் 10 பரிசுகள் !

பதிவர்களுக்கு   இடுகைகளை விட comment  மூலம் அதிக நன்மைகள் உள்ளன.சில வலைப்  பூக்களில்  இடுகை மிகச் சிறியதாக இருக்கும் ஆனால் கமெண்ட்கள் அதிகமாக இருக்கும் .

நல்ல இடுகைகளுக்கும் கமெண்ட்கள் கிடைக்கவில்லையே  என்று ஏங்கும் பதிவர்கள் இருக்கிறார்கள் .அதிக கமெண்ட்கள் கிடைக்க பதிவர்கள் என்ன செய்யவேண்டும் அதற்கு கிடைக்கும் பத்து பரிசுகள் என்னென்ன என்பதை பார்ப்போமா .