இந்நாட்களில் புற்று நோய் தாக்கிவிட்டது என்பதை அறிந்ததுமே இனி வாழ்க்கை அவ்வளவுதான் என்று பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கையிழந்து சோகத்தில் உறைந்துவிடுகின்றனர்.
இந்த சூழ்நிலையில் ஒரு பெண் மிக எளிதாக புற்று நோயை வேன்றிருக்கிறாள் .புற்று நோயிலிருந்து அவள் மீளக் காரணமாக அமைந்தது நமது பதிவுலகம்தான் .
இங்கிலாந்தில் வசிக்கும் எமிலி ஹோல்ட் எனும் 29 வயதுடைய இப்பெண்ணுக்கு மார்பக புற்று நோய் இருப்பது கடந்த ஆகஸ்ட் 2008 ல் உறுதி செய்யப்பட்டது .அவளுக்கு அப்போது ஒரு வித்தியாசமான எண்ணம் தோன்றியது .
இந்த நோயைப்பற்றி வெளியுலகத்தில் பகிர்ந்தால் என்ன என்றெண்ணி ஒரு பிளாகை ஆரம்பித்து அதில் அவளுக்குண்டான நோய் பற்றியும் அதனால் அவளுக்குண்டாகி வரும் பாதிப்புகள் பற்றியும் பகிர்ந்தாள்.
சில வாரங்களிலேயே அவளுடைய பிளாக் மிகவும் பிரபலமடைந்தது.அவளை பற்றி அறிந்த சாம்சங் நிறுவனம் மார்பகப் புற்று நோய் விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு அவளை பயன்படுத்தியது .
அவளுடைய நோயின் கொடூரத்தை பற்றியும் அதற்கு மேற்கொள்ளும் சிகிச்சைகள் பற்றியும் விலா வாரியாக தன்னுடைய தளத்தில் அவள் பகிர்ந்தாள் .
அவளுக்கு செய்யப்பட்ட மார்பக அறுவை சிகிச்சைகள்,அவளுக்கு ஏற்பட்ட முடி கொட்டுதல் போன்றவற்றை தளத்தில் பகிரும்போது வேதனையாக இருந்தாலும் அது காயத்தை ஆற்றும் ஒரு மருந்து போல செயல் பட்டதாக அவள் கூறினாள்.
அத்தகைய பதிவுகள் மார்பக புற்று நோயால் பாதிக்கப்பட்ட இளம் பல பெண்களுக்கு பயன்பட்டது .
இந்த நிகழ்வு அவளுக்கு இன்னும் நாம் அதிக நாள் வாழவேண்டும் என்ற நேர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தியது .
இந்த நிகழ்வு அவளுக்கு இன்னும் நாம் அதிக நாள் வாழவேண்டும் என்ற நேர்மறையான எண்ணத்தை ஏற்படுத்தியது .
அந்த நேர்மறையான எண்ணங்கள் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தி அவளுடைய உடல் நிலையிலும் நல்ல முன்னேற்றத்தை ஏற்படுத்தியது .
தொடர்ந்து அவளுக்கு செய்யப்படும் சிகிச்சைகள் மற்றும் அவற்றின் நேர்மறை விளைவுகளைப்பற்றி விலா வாரியாக தன்னுடைய தளத்தில் பகிர்ந்தாள் .
இப்போது அவள் நோயிலிருந்து பூரணமாக விடுபட்டுவிட்டாள்.தற்போது சொந்தமாக நெசவுத் தொழில் தொடங்கி எதிர் காலத்தை வளமாக்க திட்டமிட்டு வருகிறாள் .
Thanks : Daily mail (UK)
22 கருத்துகள்:
வாழிய நீ பல்லாண்டு
நம் துன்பங்களை நம் மனதுக்கு நெருங்கியவர்களிடம்
சொல்லும்போது மனதுக்கு ஆறுதல் கிடைக்கும்.
யாரோ ஒரு அறிஞர் சொன்னார்...
உனக்கு துன்பம் வரும்போது அதை
உன் பதிவேட்டில் எழுதிப்பார் உன் துன்பம் குறையும் என.....
உண்மைதான் இதோ நீங்கள் கொடுத்த கட்டுரை அதற்கு சாட்சியம்.
நம்பிக்கை கொடுக்கும் பதிவுக்கு நன்றி.
வணக்கம் பாலா
நல்ல கருத்துள்ள பதிவு
தன்னம்பிக்கை இல்லாதவர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் இந்த பதிவு.
நன்றி
மனதின் ஆதிக்கத்தினால் பலதும் கிட்டும்.
இந்த பெண்ணிற்க்கு கிட்டியது மருந்தை விட மனபலம் அதிகம் .
எண்ணம்போல் போல் வாழ்வு என்பதற்கு இது ஒரு உதாரணம் .
வாழவேண்டும் என்று எண்ணியதால் நோயின் வீரியம் குறைந்தது .
பகிர்வுக்கு நன்றி பாலா .
பகிர்வுக்கு நன்றி
நல்ல பதிவு...தன்னம்பிக்கையின் வெற்றி...பதிவுலகத்தின் வெற்றியும் கூட ...
நல்ல தகவல்.
மனிதம் சந்திக்கும் பல ஆச்சர்யங்களில் இதுவும் ஒரு வகை என்றே எண்ணுகிறேன் நண்பா
தன்னம்பிக்கையின் அர்த்தம் இவர்
நல்ல நம்பிக்கையூட்டும் பதிவு.. பகிர்வுக்கு நன்றி
அப்போ பாருங்களேன் மன தைரியத்தை!!
@மகேந்திரன் மிக்க நன்றி மகேந்திரன் !
@M.R
மிக்க நன்றி M.R.
@தமிழ்வாசி - Prakash நன்றி அண்ணா !
@Reverie தங்கள் கருத்து உண்மைதான் ...
@எஸ்.பி.ஜெ.கேதரன் நன்றி எஸ்.பி.ஜெ.கேதரன்
@A.R.ராஜகோபாலன் நன்றி அண்ணா !
தன்னம்பிக்கை பதிவு
துன்பம் நேர்கையில் யாழெடுத்து மீட்டி...உலகை குணப்படுத்தி தானும் நலம் பெற்ற அன்புச்சகோதரி நூறாண்டுகள் வாழட்டும்.
இப்பதிவின் மூலம் நல்ல விசயங்களை சொன்ன கூடல் பாலாவும் நூறாண்டுகள் வாழ்க...
மனம் விட்டுப் பேசும்போதும் தன் பிரச்சனைகளை வெளியில் சொல்லுபோதும் பிரச்சனைகளுக்கு ஒரு வழி கிடைக்கிறது என்பதற்கு இந்தப் பதிவு சாட்சி !
நல்ல தகவல் சகோ .
துன்பங்களைக் கண்டு அஞ்சாமல்.துன்பவேளையிலும் மற்றவர்களுக்கு உதவவேண்டும் என்பதற்கு இந்த பெண் சிறந்த உதாரணம்.
ஆச்சரியமான தகவலைப் பகிர்ந்திருக்கிறீங்க. எமது வாழ்த்துக்களையும், தொலைவில் இருந்து எமிலி ஹோல்ட்டிற்கு சொல்லிக் கொள்ளுவோம். பதிவர்கள் அனைவருக்கும் மன உறுதி தரும் பதிவாக இப் பதிவு அமைந்துள்ளது.
அருமையான தகவல்... இந்த பதிவை நாங்கள் பிரதி செய்துகொள்ள அனுமதி வேண்டுகிறோம் நண்பா.. விருப்பம் இருப்பின் தொடர்க..
கருத்துரையிடுக