உடல் மற்றும் மன ரீதியாக மனிதன் துன்பப்படும் வேளையில் அவனுக்கு கை
கொடுப்பது தெய்வ பக்திதான் .அந்த வகையில் இந்த பக்திப் பாடலை கேட்கும்போது
ஒரு மன ஆறுதல் ஏற்படுகிறது .
பாடலை ஆன்லைனில் கேட்க இங்கே சுட்டுங்கள்
.
பாடல் வரிகள் கீழே .
நெறஞ்ச மனசு உனக்குத்தாண்டி மகமாயி –உன்னே
நெனச்சிப்புட்டா கெடுதல் எல்லாம் சுகமாகி
மறைகளும் இதை சொல்லுமடி மகமாயி –கண்ணில்
தொட்டியங்குளம் தெரியுதடி மகமாயி
நமையாளும் நாயகியாம் நம் மகமாயி
கண் இமை போல காத்திடுவாள் மகமாயி
உமையவள் அவளே இமவான் மகளே
சமயத்தில் வருபவள் அவளே எங்கள் சமயபுரத்தாள் அவளே
இசைக்கலை யாவும் தந்தருளவேண்டும்
என் குல தெய்வமே மகமாயி
தஞ்சமென்று உன்னை சரணடைந்தேன் தஞ்சை முத்துமாரி
முந்தை வினைகளை களைந்தெறிவாள்
தாய் மயிலையிலே முண்டகக்கண்ணி கோலவிழி பத்ரகாளி
வேண்டும் வரம் தருவாள் என் தாய் வேற்காட்டு கருமாரி
ஆத்தா கருமாரி கண் பார்த்தா போதும்
பார்த்தா வினை தீரும் பாவமெல்லாம் பறந்தோடும்
ஆத்தா கருமாரி கண் பார்த்தா போதும்
பார்த்தா வினை தீரும் பாவமெல்லாம் பறந்தோடும்
காத்தாயி மகமாயி கருணை தெய்வம் மாகாளி (2)
நார்த்தாமலை வாழும் .... நார்த்தாமலை
வாழும்
எங்கள் நாயகியாம் திரிசூலி –(ஆத்தா)
நெஞ்சினிலே நிறைந்திருப்பா நிம்மதியைத் தந்திடுவா
வஞ்சகரின் வாழ்வறுப்பா வந்த வினை நீக்கிடுவா
மஞ்சளிலே குளிச்சி நிப்பா சிங்காரமாய் சிரிச்சி நிப்பா (2)
தஞ்சமென்று வந்துவிட்டா தயங்காம காத்து நிப்பா (2)
மல்லிகை சரம் தொடுத்து மாலையிட்டோம்-அரிசி
மாவிளக்கு ஏற்றி வைத்து பொங்கலுமிட்டோம்-அம்மா
துள்ளியே எந்தன் முன்னே வாருமம்மா –அம்மா
தூயவளே என் தாயே மாரியம்மா
பட்டுப் பீதாம்பரத்தில் தாவணியும் உனக்கு
பாவாடை சேலைகளும் கொண்டு வந்தோம்
பட்டுப் பீதாம்பரத்தில் தாவணியும் உனக்கு
பாவாடை சேலைகளும் கொண்டு வந்தோம்
உன்னிடத்தில் சொல்லாமல்
வேறு எந்த உறவிடத்தில் முறையிடுவேன் தாயே
எந்தன் அன்னையவள் நீயிருக்க உலகில் மற்ற
அந்நியரை இவன் கெஞ்சிடுதல் முறையோ அம்மா
கண்ணீரை துடைத்து விட ஓடி வா அம்மா
காத்திருக்க வைத்திடுதல் சரியோ அம்மா
இந்த சின்னவனின் குரல் கேட்டு உன்
முகம் திருப்பு-அம்மா
சிரித்தபடி என்னை தினம் வழி அனுப்பு அம்மா
கண்ணிரண்டும் உன்னுருவே காணவேண்டும்-அம்மா
காலிரண்டும் உன்னடியே நாடவேண்டும்
பண்ணமைக்கும் நாவுனையே பாடவேண்டும்-அம்மா
எல்லோரும் பக்தியோடு கையெடுத்து
உன்னையே கும்பிடவேண்டும்
எண்ணமெல்லாம் உன் நினைவே ஆகவேண்டும்
இருப்பதெல்லாம் உன்னுடையதாகவேண்டும்
மண்ணளக்கும் தாயே
பெரிய பாளையத்தம்மா
மண்ணளக்கும் தாயே
குலதெய்வமே தொட்டியங்குளம் மாரியம்மா
மாமதுரையிலே தெப்பக்குளம் மாரியம்மா
விருதுநகரிலே முத்துமாரியம்மா
சிவகாசியிலே பத்ரகாளியம்மா
வீரபாண்டியிலே கௌமாரியம்மா
தாயமங்கலத்திலே முத்துமாரியம்மா
இருக்கன்குடியிலே மாரியம்மா
செந்தூரிலே சந்தன மாரியம்மா
ஆரல்வாய்மொழியிலே முப்பந்தலிலே இசக்கி மாரியம்மா
பெருங்கரையிலே சதுரங்க நாயகியம்மா
சிவகங்கையிலே வெட்டுடையா காளியம்மா
திண்டுக்கல்லிலே கோட்டை மாரியம்மா
மணப்பாறையிலே முத்துமாரியம்மா
திருச்சியிலே சமயபுரத்தம்மா வெட்காளியம்மா
சிறுவாச்சூர் மதுரகாளியம்மா
மண்ணளக்கும் தாயே
தஞ்சையிலே புன்னைநல்லூர் மாரியம்மா
குடந்தையிலே படைவெட்டி மாரியம்மா
வலங்கைமானிலே பாடைகட்டி மாரியம்மா
நாகையிலே நெல்லுக்கடை மாரியம்மா
வேளாங்கண்ணியிலே வேளாங்கண்ணியம்மா
திருத்துறைப்பூண்டியிலே முள்ளாச்சியம்மா
எட்டுக்குடியிலே துரோபதை மாரியம்மா
ஆரூரிலே சீதளாதேவி எல்லம்மா
பட்டுக்கோட்டையிலே நாடியம்மா
அறந்தாங்கியிலே வீரமாகாளியம்மா
திருவப்பூர் மாரியம்மா
கொன்னையூர் மாரியம்மா
காரைக்குடியிலே கொப்புடைய நாயகியம்மா
கண்கொடுக்கும் தெய்வமே நாட்டரசன்கோட்டை வாழும்
என் கண்ணாத்தா
மண்ணளக்கும் தாயே
படவேட்டிலே ரேணுகா பரமேஸ்வரியம்மா
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியம்மா
மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரியம்மா
வெட்டுவாணம் எல்லையம்மா
செங்கையிலே மணப்பாக்கம் கன்னியம்மா
செங்கையிலே நாகத்தம்மா
மண்ணளக்கும் தாயே
சென்னையிலே மயிலையிலே அருள்மிகுதேவி
முண்டகக்கண்ணியம்மா
கோலவிழி பத்ரகாளியம்மா
அல்லிக்கேணியிலே எல்லம்மா
புரசையிலே பாதாள பொன்னியம்மா
மாம்பலத்திலே முப்பாத்தம்மா
வடசென்னையிலே ரேணுகா பரமேஸ்வரியம்மா
மண்ணளக்கும் தாயே
சேலத்திலே அன்னதான மாரியம்மா
ஈரோட்டிலே சின்ன மாரி பெரிய மாரியம்மா
கோவையிலே தண்டுமாரியம்மா ..கோனியம்மா
சத்யமங்கலத்திலே பண்ணாரி மாரியம்மா
மண்ணளக்கும் தாயே
வட நாட்டிலே காசிவிசாலாட்ச்சியம்மா
வங்காளத்திலே காளியம்மா
விஜயவாடாவிலே கனக துர்க்கையம்மா
கர்நாடக மாநிலத்திலே அன்னை சாமுண்டீஸ்வரி
சாரதாம்பிகே மூகாம்பிகேயம்மா
தங்க வயலிலே கங்கையம்மா
மண்ணளக்கும் தாயே
கேரளத்திலே சோட்டாணிக்கரை பகவதி அம்மே
கொடுங்கல்லூர் பகவதியம்மே
மண்ணளக்கும் தாயே
மலேசிய நாட்டிலே மகா மாரியம்மா
சிங்கப்பூரிலே வீரமாகாளியம்மா
இவையனைத்தையும் ஒன்றுசேர்ந்த சக்தி சொரூபமே
அம்மா திருவேற்காட்டில்வாழ்
கனவிலும் நினைவிலும் இவண் தொழும்
என் சத்திய தெய்வமே கருமாரியம்மா .....கருமாரியம்மா
இந்த மகனுடைய குறைகளையும் கவலைகளையும் தீரடியம்மா
அம்மா .... அம்மா அம்மா அம்மா ... அம்மா
அம்மா கற்பூர நாயகியே கனகவல்லி
காளிமகமாயி கருமாரியம்மா
பொற்கோவில் கொண்ட சிவகாமியம்மா
பூவிருந்தவல்லி தெய்வயானையம்மா
விற்கோல வேதவல்லி விசாலாட்சி
விழிக்கோல மாமதுரை மீனாட்சி
சொற்கோவில் நானமைத்தேன் இங்கு தாயே –அம்மா
சுடராக வாழ்விப்பாய் எம்மை நீயே
புவனமுழுதாளுகின்ற புவனேஸ்வரி
புறமெரித்தோன் புறமிருக்கும் பரமேஸ்வரி
நவ நவமாய் வடிவாகும் நாகேஸ்வரி-அம்மா
நம்பினவர் கைவிளக்கே சர்வேஸ்வரி
கவலைகளை தீர்த்து வைக்கும் காளீஸ்வரி
காரிருளின் தீச்சுடரே ஜோதீஸ்வரி
உவமானப் பரமருளே ஜெகதீஸ்வரி-அம்மா
உன்னடிமைச் சிறியேனை நீயாதரி
நெற்றியில் உன் குங்குமமே
நிறையவேண்டும்
நெஞ்சில் உன் திருநாமம் வழியவேண்டும்
கற்றதெல்லாம் மென்மேலும் பெருகவேண்டும்
கவிதையிலே உன் நாமம் பாடவேண்டும்
சுற்றமெல்லாம் நீடூழி வாழவேண்டும்
ஜோதியிலே நீயிருந்து ஆளவேண்டும்
மற்றதெல்லாம் நானுனக்கு சொல்லலாமா
மடிமீது பிள்ளை என்னைத் தள்ளலாமா
அன்னைக்கு உபதாரம் செய்வதுமுண்டோ
அருள் செய்ய இந்நேரம் ஆவதுமுண்டோ
கண்ணுக்கு இமையின்றி காவலுமுண்டோ –அம்மா
கன்றுக்கும் பசுவின்றி சொந்தமுண்டோ
முள்ளைக்கும் பிள்ளைக்கும் பார்ப்பதுமுண்டோ
முழுமைக்கும் நீ எந்தன் அன்னையன்றோ
எண்ணைக்கும் விளக்குக்கும் பேதமுண்டோ-அம்மா
என்றைக்கும் நானுந்தன் பிள்ளையன்றோ
அன்புக்கே நானடிமை ஆகவேண்டும்
அறிவுக்கே என் காது கேட்கவேண்டும்
வம்புக்கே போகாமல் இருக்கவேண்டும்-அம்மா
வஞ்சத்தை என் நெஞ்சம் அறுக்கவேண்டும்
பண்புக்கே உயிர் வாழ ஆசை வேண்டும்
பரிவுக்கே நாங்கள் என்றும் பணியவேண்டும்
என் பக்கம் இவையெல்லாம் இருக்கவேண்டும்-அம்மா
என் நாவில் நீயென்றும் பாடவேண்டும்
கும்பிடவோ கையிரண்டு போதவில்லை
கூப்பிடவோ நாவொன்றால் முடியவில்லை
நம்பிடவோ மெய்யதனில் சக்தியில்லை
நடந்திடவோ காலிரண்டால் ஆகவில்லை
செம்பவள வாயழகி உன்னெழிலோ-இவன்
சின்ன இரு கண்களுக்குள் அடங்கவில்லை
அம்பளவு விழியாலே உன்னை என்றும் –இவன்
அடிபணியும் ஆசைக்கோர் அளவுமில்லை
காற்றாகி கனலாகி கடலாகினாய்
கயிறாகி உயிராகி உடலாகினாய்
நேற்றாகி இன்றாகி நாளாகினாய்
நிலமாகி பயிராகி உணவாகினாய்
தோற்றாலும் ஜெயித்தாலும் வாழ்வாகினாய்
தொழுதாலும் அழுதாலும் வடிவாகினாய்
காணாத நாளில்லை தாயே உன்னை
அம்மா தினம் உன்னை பாடாத நாளில்லை
கருமாரி மகமாயி
பொருளோடு புகழோடு நோய் நொடியில்லாமல்
எல்லோரையும் வைப்பாய் அம்மா ...அம்மா....
வேற்காடு ஆலயத்தில் மூலஸ்தானத்தில்
சரவிளக்கு சுடர்விடவே
சாற்றிய மாலை எல்லாம் உரு மறைக்க
அம்மாவுக்கு அர்ச்சகர்கள்
ஓம் அகா ராஜக்ஷ்ய ராகாராயை நமக
ஓம் அன்னபூர்ணாயை நமக
ஓம் அம்பிகாயை நமக
ஓம் அங்காள பரமேஸ்வரியை நமக
ஓம் ஆச்யந்த ரகிகாயை நமக
ஓம் இச்சாகிருதையே நமக
ஓம் ஈஸ்வரப்ப்ரிய வல்லபாயை நமக
ஓம் ராஜ ராஜேஸ்வரி மூகாயை நமக
ஓம் ராமதாசாய வந்திதாயை நமக
ஓம் கிருஷ்ண மாயை நமக
அம்மாவுக்கு அர்ச்சனை செய்து
கற்பூரம் காட்டி கை தொழுதால்
கணத்திலே எங்கிருந்தாலும் ஓடி வருவாள்
தேவி கருமாரி
கிண்கிணி கிலுகிலுக்க ...கால் சலங்கையும் சலசலக்க
கிண்கிணி கிலுகிலுக்க கால் சலங்கையும் சலசலக்க
உடலெல்லாம் சிலுசிலுக்க உன் சிரிப்பொலி கேட்குதம்மா
எங்கள் சிந்தை குளிருதம்மா ....அம்மா...
உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்துப் பாடாட்டா
இந்த ஜென்மம் எடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா
செல்லாத்தா...செல்ல மாரியாத்தா –எங்கள்
சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா
கண்ணாத்தா உன்னை காணாட்டா
இந்த கண்கள் இருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா
இந்த ஜென்மம் எடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா
செல்லாத்தா செல்ல மாரியாத்தா –எங்கள்
சிந்தையில் வந்து அரை வினாடி நில்லாத்தா
கண்ணாத்தா உன்னை காணாட்டா
இந்த கண்கள் இருந்து என்ன புண்ணியம் சொல்லாத்தா
உந்தன் பெருமையை இந்த உலகுக்கு எடுத்து பாடாட்டா
இந்த ஜென்மம் எடுத்து என்ன பயனென்று சொல்லடி நீயாத்தா
ஆதிசக்தி மாதா கருமாரி மாதா
எங்கள் ஆதிசக்தி மாதா கருமாரியாத்தா
தீ மிதித்து வந்திடுவார் பக்தர்களும் உனை நாடி
தேவி உன்னை பாடிவரும் அன்பர்களும் பலகோடி
புற்றினிலே பாலூற்றி பணிந்திடுவார் பலகோடி
சக்தி உமை நாயகியே சங்கரியே கருமாரி
ஆதிசக்தி மாதா கருமாரியாத்தா
எங்கள் ஆதிசக்தி மாதா கருமாரியாத்தா
உலகமே ஆடுதம்மா உன் சிரிப்பிலே –அம்மா
உமையவளே என் தாயே மாரியம்மா
பூவாடை வீசுதம்மா பூமகளே –உனக்கு
பாமாலை கொண்டு வந்தோம் பாருமம்மா –உனக்கு
பாமாலை கொண்டு வந்தோம் பாருமம்மா
சமய புரத்தாளே மாரியம்மா –அம்மா
சங்கரியே எந்தன் முன்னே வாருமம்மா
தொல்லைகளை அகற்றும் தெய்வமே மாரியம்மா
தொட்டியங்குளம் வாழும் மாரியம்மா
வேற்காடு தனிலிருக்கும் மாரியம்மா –எனக்கு
வேண்டும் வரம் தருபவளே மாரியம்மா
மாரியம்மா கருமாரியம்மா
மாரியம்மா கருமாரியம்மா
மாரியம்மா கருமாரியம்மா
மாரியம்மா கருமாரியம்மா
மாரியம்மா கருமாரியம்மா
மாரியம்மா கருமாரியம்மா
ஆத்தா கருமாரி கண்பார்த்தா போதும்
பார்த்தா வினை தீரும் பாவமெல்லாம் பறந்தோடும்
ஆத்தா கருமாரி கண்பார்த்தா போதும்
பார்த்தா வினை தீரும் பாவமெல்லாம் பறந்தோடும்
கற்பூர நாயகியே கனகவல்லி
காளிமகமாயி கருமாரியம்மா
கருமாரியம்மா...கருமாரியம்மா .
6 கருத்துகள்:
பக்திப் பாடலை கேட்கும்போது ஒரு மன ஆறுதல் ஏற்படுகிறது...//
உண்மை தான் பாலா....
உன்னை போல கை கூலி எல்லாம் என்ன செயதாலும் தாய் நாட்டுக்கு செய்யும் துரோகம் என்றும் விலகாது,
பெரிய பாட்டு....
பகிர்வுக்கு நன்றி..
மாமா பாலா பாவம் பல செய்து விட்டு ஏண்டா இப்படி பக்தி வேடம் போடுகிறாய். திருந்தி விடு ஆத்தா உம்மை மன்னிப்பாள். உதயகுமார் கூட்டத்தை விட்டு விலகி விடு பல ஆயிரம் குடும்பங்கள் உன்னை கை எடுத்து கும்பிடும் உன் உடல் நிலையும் சீராகும். வேண்டாமடா இந்த வினை
பகிர்வுக்கு நன்றி நண்பா
// பெரிய பாட்டு....
பகிர்வுக்கு நன்றி..
7:55 PM, February 14, 2012
பெயரில்லா பெயரில்லா கூறியது...
மாமா பாலா பாவம் பல செய்து விட்டு ஏண்டா இப்படி பக்தி வேடம் போடுகிறாய். திருந்தி விடு ஆத்தா உம்மை மன்னிப்பாள். உதயகுமார் கூட்டத்தை விட்டு விலகி விடு பல ஆயிரம் குடும்பங்கள் உன்னை கை எடுத்து கும்பிடும் உன் உடல் நிலையும் சீராகும். வேண்டாமடா இந்த வினை
//
இன்னது புது குழுப்பம்
கருத்துரையிடுக