30 ஏப்ரல் 2011

உங்கள் கணினி எப்போதும் புதிதாகவே இயங்க

பொதுவாக கணிப்பொறி பயன்படுத்துவோர் அனைவருக்கும் நேரும் அனுபவம் வாங்கிய புதிதில் அல்லது FORMAT செய்த புதிதில் மிக வேகமாக இயங்கும் .ஆனால் நாளடைவில் வயோதிகனை போல் மெதுவாக இயங்கி நம்மை சோதிக்கும் .

சிலரது கணினி பூட் ஆவதற்குள் காலை சிற்றுண்டியை முடித்துவிடலாம்.சிலரது கணினி SHUT DOWN ஆவதற்கு மணிக்கணக்கில் நேரம் எடுத்துக்கொள்ளும் .இடையில் கணினியை RESTART செய்யவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதற்குள் தூக்கம் வந்துவிடும் .

இதுபோல இல்லாமல் நாம் கணினியை வாங்கியபொழுது என்ன வேகத்தில் இயங்கியதோ அதே வேகத்தில் தொடர்ந்து இயங்க ஒரு மென்பொருள் உள்ளது .

WIN ASO REGISTRY OPTIMIZER என்னும் மென்பொருளில் உங்கள் கணினியை வேகமாகவும் பிழையின்றியும் செயல்பட வைக்க பல்வேறு கருவிகள் உள்ளன .மிகவும் மெதுவாக இயங்கும் ஒரு பழைய கணினியில் இதை நிறுவினால் நிறைய வித்தியாசத்தை  உணரலாம் .

ஒண்ணே ஒண்ண சொல்ல மறந்துட்டேன் .இதோட TRIAL VERSION தான் இலவசமாக கிடைக்கிறது .FULL VERSION தேவை படுபவர்கள் அதற்குரிய வழிகளில் பெற்றுக்கொள்ளலாம் .

இந்த மென்பொருளை ஒரு முறை பயன்படுத்தியவர்கள் கண்டிப்பாக நிரந்தரமாக வைத்துக்கொள்வார்கள் .TRIAL VERSION டவுன்லோடு செய்ய இங்கேகிளிக் செய்யவும் .

29 ஏப்ரல் 2011

அணு உலைகளை எதிர்ப்பதற்கு 10 காரணங்கள் ...

       ஜப்பானில் நிகழ்ந்துள்ள அணு உலை விபத்திற்கு பிறகு அணு உலைகளுக்கு எதிரான கருத்துக்கள் வலுப்பெற்றிருக்கின்றன .வழக்கம் போல பணம் சம்பாதிப்பதை மட்டுமே அடிப்படையாக கொண்டு இயங்கும் முதலாளித்துவம் அணு உலைகளால் பாதிப்பில்லை என்று கூறி வருகிறது .ஆனால் சுற்று சூழல் ஆர்வலர்களும் விஞ்ஞானிகளும் இனியும் அணு உலைகளை மின் தேவைக்காக நம்பியிருப்பது முட்டாள்தனம் என்று கூறி வருகிறார்கள் .பல்வேறு விதத்திலும் ஆராயும்போது எந்த ஒரு வகையிலும் அணு உலைகள் நாட்டிற்கோ ,மக்களுக்கோ நன்மை தருபவை இல்லை என்பது விளங்குகிறது .

இப்போது அந்த பத்து காரணங்கள் .

1 . அணு மின் நிலையங்கள் என்றாலே முதலில் அனைவருக்கும் நியாபகத்திற்கு வருவது விபத்துதான். அதிகமான எண்ணிக்கையில் விபத்துக்கள் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு விபத்தும் பல நூறு ஆண்டுகளுக்கு ஆறாத ரணத்தை ஏற்படுத்திவிடுகின்றன .செர்நோபில் அணு உலை விபத்தால் இன்றளவும் பிறக்கும் குழந்தைகள் குறைபாட்டோடு பிறக்கின்றன .    ஜப்பான் அணு விபத்தால் ஏற்படும் பாதிப்புகள் இனி வரும் நாட்களில்தான் முழுமையாக தெரிய வரும் .விபத்துக்கள் இல்லாமல் அணு உலைகளை இயக்க முடியாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது .
 
2 .அதிக அளவிலான விளை நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன .ஒரு இடத்தில் அணு உலை அமைக்க 3000  முதல் 5000  ஏக்கர் வரை நிலம் கையகப்படுத்தப்படுகிறது .அணு உலைக்காக கையகப்படுத்தும் நிலத்தை அணு மின் நிலையம் அமைந்த பின்பு வேறு எந்த நோக்கத்திற்க்காகவும் பயன்படுத்த முடியாது .

3 . அணு உலைகளில் விபத்து நேராவிட்டாலும் கூட அணு உலைகளிலிருந்து 30  கிலோ மீட்டர் சுற்றளவுக்குள்  வசிக்கும் மக்களுக்கு புற்று நோய், மரபணு சம்மந்தப்பட்ட  வியாதிகள் அதிகரித்திருப்பது ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது .

4 . அணு உலையில் விபத்து நேரும் பட்சத்தில் கிட்டத்தட்ட 50 கிலோமீட்டர் சுற்றுப்பகுதிக்குள் வசிக்கும் மக்கள் தங்கள் உடைமைகள் அனைத்தையும் இழந்துவிட்டு இடம்பெயர வேண்டிய சூழ் நிலை உருவாகும் .அவ்வாறு இடப்பெயர்ச்சிக்கு உள்ளாகும் நடுத்தட்டு மக்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் நிலை அதோ கதிதான் .

5 . அணு உலை கட்டுவதற்கு ஆகும் செலவு (சுமார் 15,000 கோடி )மிக அதிகம் .மற்றும் கால அவகாசம் மிக அதிகம் (கிட்டத்தட்ட 15 வருடங்கள் )

6  .அணு உலையின் ஆயுள் மிக குறைவு .30 வருடங்கள் மட்டுமே மின்சாரம்  தரும் உலை பகுதியை வேறு எந்த உபயோகத்திற்கும் பின்னாட்களில் பயன்படுத்த முடியாது .

7 .விபத்து நடந்தால் ஊழியர்களை மட்டுமன்றி அருகில் வசிப்பவர்களையும் அதிக அளவு இம்சைக்குள்ளாக்குவது அணு உலை மட்டும்தான் .

8 . அணு உலைகளை விட ஆபத்து நிறைந்த இன்னொரு பெரிய ஆபத்து அணு கழிவுகள் .அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட எரிபொருட்களை 10,000 வருடம் கண்ணும் கருத்துமாக பாதுகாக்கவேண்டும் .இதில் அஜாக்கிரதை செலுத்தினால் அதோகதிதான் .மேலும் இதனை பாதுகாக்க ஆகும் செலவு அணு உலைகளை கட்ட ஆகும் செலவை விட அதிகம் .

9.           எதிரி நாடுகளுக்கோ ,தீவிரவாதிகளுக்கோ முதல் இலக்கு அணு உலைதான்

10.ஒவ்வொரு நாடும் அணு குண்டுகள் தயாரிக்க பயன்படுத்துவது அணு உலைகளிலிருந்து கழிவாக கிடைக்கும் ப்ளுட்டோனியம்தான் .ஒரு அணு உலையிலிருந்து ஆண்டொன்றுக்கு 500 அணு குண்டுகள் தயாரிக்கும் அளவிற்கு ப்ளுட்டோனியம் கிடைக்கிறது .அணு உலைகளை ஒழித்தால்தான் அணு ஆயுதங்களையும் ஒழிக்க முடியும் .
  
    உலக வெப்பமயமாதலுக்கு ஒரே தீர்வு அணுமின் நிலையங்கள்தான் என்று சிலர் கூறி வருகின்றனர் .ஆனால் அணு உலைகள் தீர்வு அல்ல .சுற்று சூழல் சீர்கேட்டுக்கு போடப்படும் அடித்தளம் .

பதிவை பற்றிய உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் .பிடித்திருந்தால வாக்களிக்கலாம் .




28 ஏப்ரல் 2011

Windows XP : அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய குறுக்கு விசைகள் !

இன்று கணிப்பொறி பயன்படுத்துபவர்கள் பெரும்பாலும் Windows XP OS ஐ தான் பயன்படுத்துகிறார்கள் .நாம் MOUSE ன் துணை கொண்டு இயக்கும் ஒவ்வொரு இயக்கத்திற்கும் KEYBOARD SHORTCUT உண்டு .பல்வேறு KEYBOARD SHORTCUT கள் நாம் அறிந்தவையாக இருக்கும் .இருந்தபோதிலும் சில இயக்கங்களுக்கு KEYBOARD SHORTCUT   தெரியாததால்  MOUSE ன் துணை கொண்டு நாம் அதை செய்துகொண்டிருப்போம் .அவற்றை நாம் அறியும்பொழுது கணினியை இயக்குவது மேலும் சுலபமாக இருக்கும் .நம்மில் பெரும்பாலானோர் அதிகம் பயன்படுத்தாத அதே சமயம் அதிகம் பயன்படக்கூடிய சில KEYBOARD SHORTCUT  களை இங்கு பகிர்ந்துள்ளேன் .நீங்களும் பயன்படுத்திபாருங்கள். பலனடையுங்கள்.

WINDOWS KEY            START  மெனு திறக்க

WIN+R                            RUN  DIALOG  BOX   திறக்க

WIN+M                திறந்திருக்கும் அனைத்து WINDOWS  களையும்   MININIZE செய்ய   
WIN+SHIFT+M      திறந்திருக்கும் அனைத்து WINDOWS களையும்MAXIMIZEசெய்ய  

WIN+E                          MY COMPUTER திறக்க             

WIN +F                         SEARCH OPTION திறக்க

WIN+D            DESKTOP ஐ பார்க்க / அனைத்துWINDOWSகளையும் MINIMIZE செய்ய 

WIN+PAUSE                SYSTEM PROPERTIES பார்வையிட

ALT+SPACEBAR+N    இயங்கிக்கொண்டிருக்கும்  PROGRAMME  ஐ MININIZEசெய்ய  

ALT+SPACEBAR+R    இயங்கிக்கொண்டிருக்கும்  PROGRAMME  ஐ RESTORE செய்ய      

ALT+SPACEBAR+C    இயங்கிக்கொண்டிருக்கும்  PROGRAMME  ஐ  மூட

ALT+SPACEBAR+X    இயங்கிக்கொண்டிருக்கும்  PROGRAMME  ஐ MAXIMIZE செய்ய

SHIFT+DELETE           கோப்புகளை  RECYCLE BIN க்கு செல்லாமல் அழிக்க    

                                          பிடித்திருந்தால் ஓட்டளிக்கவும்.                                                                               

27 ஏப்ரல் 2011

செர்நோபில் அணுஉலை வெடிப்பு :வீடியோ

ஜப்பான் நாட்டில் நிகழ்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக ஏற்பட்ட அணுஉலை விபத்து பற்றிய தகவல்கள் பலவற்றை நாம் இன்று ஊடகங்களிலே கண்டு வருகிறோம் .இதற்கு சரியாக 25  வருடங்களுக்கு முன்பாக சோவியத் யூனியனில் (தற்போது உக்ரைன் )அமைந்திருந்த செர்நோபில் அணு உலை வெடித்து சிதறியது அதன் காரணமாக வெளியேறிய கதிரியக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர் மேலும் தீராத நோய்கள் மற்றும் பிறவிக்குறைபாடுகள் இன்றளவும் ஏற்பட்டு வருகின்றன .அணு உலை வெடிப்பு மற்றும் கதிரியக்கத்தை கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் பற்றிய ஓர் அருமையான காணொளி .


26 ஏப்ரல் 2011

இணைய பக்கங்களை PDF வடிவில் சேமித்திட இலவச மென்பொருள் !

பல இணைய தளங்களை நாம் பார்வயிடும்பொழுது சில தேவைகளுக்காக அதை சேமித்து வைத்தால் பிற்காலத்தில் உபயோகமாக இருக்கும் என்று நாம் கருதுவதுண்டு .ஆனால் இணைய பக்கங்களை சேமிப்பதில் பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதுண்டு .இணைய பக்கங்கள் மட்டுமல்லாமல் எந்த வகையான கோப்பாக இருந்தாலும் அதை PDF வடிவில் சேமிக்க ஓர் அருமையான இலவச மென்பொருள் உள்ளது .Primo pdf எனப்படும் இந்த மென்பொருளை தரவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ள வேண்டும் .எந்த இணைய பக்கத்தை pdf ஆக சேமிக்க வேண்டுமோ அந்தபக்கத்தை திறந்து கொண்டு .File மெனுவில் Print ஐ அழுத்த வேண்டும் .பின்பு வரும் பெட்டியில் படத்தில் காண்பித்துள்ளவாறு Primo pdf என்பதை தேர்வு செய்யவேண்டும் .அதன் பிறகு Create PDF ஐ அழுத்தவேண்டும் .இப்போது நமது கோப்பு pdf ஆக சேமிக்கப்பட்டிருக்கும் .PDF உருவாவதில் பிரச்சினை ஏற்பட்டால் Save As ல் specific folder என்பதை தேர்ந்தெடுக்கவும் .செயல்படுத்தி பயனடையுங்கள் .அத்தோடு கொஞ்சம் இதை like பண்ணுநீங்கன்னா உங்களை மாதிரி நிறையபேர் பயனடைவார்கள் .மென்பொருளை தரவிறக்க  சுட்டி