06 ஜூலை 2011

கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே !

இது போன்ற  பல பழமொழிகளை நாம் அடிக்கடி உபயோகிக்கிறோம் .ஆனால் இவை பலரால் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது .
 
 1 .பகையாளி வீட்டை உறவாடிக்கெடு
 
இதை மேலோட்டமாக பார்த்தால் நமது முன்னோர்கள் ஒரு டெரரான  பாதையை  நமக்கு காண்பிப்பது போல் தோன்றும் .இந்த பழமொழியின் உண்மையான பொருள் என்னவென்றால் பகையாளியிடம் நாம் உறவாடினால் நாளடைவில் அவர்களும் நம்மிடம் உறவாட ஆரம்பித்து அந்த பகை கெட்டுப்போகும் என்பதுதான் .
 
டிஸ்கி :அளவுக்கதிகமாக பகையாளியிடம் உறவாடினால் இவன் ரொம்ப நல்லவனா இருக்கான்னு நெனச்சி அளவுக்கதிகமாக அடிக்கவும் வாய்ப்புள்ளது .
 
2 .ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்
 
மேலோட்டமாக பார்த்தால் இது முரண்பாடு நிறைந்ததாக தோன்றும் .அதெப்படி அடுத்த வீட்டு பிள்ளையை ஊட்டினால் நம் பிள்ளைக்கு சாப்பாடு போடவேண்டிய அவசியம் இல்லையா .?
இதன் உண்மையான பொருள் வேறு .இது புது மாப்பிள்ளைகளுக்காக வகுக்கப்பட்ட பழமொழி .இங்கு ஊரார் பிள்ளை என்று மனைவியை குறிப்பிடுகிறார்கள் .கட்டிய மனைவிக்கு சத்தான உணவுகளை கொடுத்தால் அவள் வயிற்றில் இருக்கும் தனது பிள்ளை நன்கு வளரும் என்பதே கணவனுக்கு கூறப்படும் அறிவுரை .
 
டிஸ்கி : நம்மாளு ஒருத்தர் பக்கத்து வீட்டு பையன் ஊட்டியில உள்ள பாட்டி வீட்டுல வளருறதுனால அவரோட பையனுக்கு சரியா சாப்பாடே போடுறதில்ல.மிஸ் அண்டர்ஸ்டேன்டிங் 
 
3 .கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே  

அப்படீன்னா வீட்டு சாவியை கள்ளன்கிட்ட கொடுக்கலாம் .பக்கத்து வீட்டுக்காரன் குள்ளமாக இருந்தால் அவனிடம் கொடுக்கக்கூடாதா
இது பாகவதத்துல உள்ள கதைங்க .இங்கே கள்ளன் என அழைக்கப்படுபவர் கண்ணன் .கண்ணனை நம்பியவர்கள் அனைவரும் நன்மையே அடைந்தார்கள். குள்ளன் என்பது வாமனனை.மன்னன் மகாபலி மூன்றடி மண்தானே என்று குள்ளமாக இருந்த வாமனனை  மெத்தனமாக எண்ணியதால் ஆட்ச்சியை இழக்க நேரிட்டது .

 
டிஸ்கி : குள்ளர்களாக இருப்பவர்களிடம் உயரமானவர்களை விட ஏதோ ? ஒரு திறமை  இருப்பதாக மட்டும் பலர் சொல்கிறார்கள் .

05 ஜூலை 2011

வந்துவிட்டது avast antivirus ன் புதிய பதிப்பு !

இலவச antivirus program களில் சிறந்ததாக உலகில் அதிகம்பேரால் கருதப்படும் avast antivirus ன் புதிய பதிப்பு 6.0.1203 வெளி  வந்துள்ளது  .
பணம் கொடுத்து வாங்கப்படும் வைரஸ்  எதிர்ப்பு மென்பொருட்களுக்கு இணையாக இது செயல்படுகிறது .

ஒருமுறை இதை பயன்படுத்தியவர்கள் பிற மென்பொருட்களுக்கு மாற விரும்பமாட்டார்கள் .
இணைய தளம் வாயிலாக மற்றும் removable flash drive கள் மூலமாக பரவுகின்ற வைரஸ்கள் ,மால்வேர்களை எதிர்த்து நன்கு போரிடுகிறது .

உபயோகிக்க விரும்புபவர்கள் இங்கே கிளிக் செய்து இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்துங்கள் .


டிஸ்கி : அதிகம் புகழ்வதனால் avast நிறுவனத்தின் பிரதிநிதியாக என்னை கருதவேண்டாம் .பயன்படுத்தி பார்த்ததால் சொல்கிறேன் .

03 ஜூலை 2011

நான் கட்டிக்கப்போற பொண்ணு (18 +)

கல்லூரி வகுப்புகள் ஆரம்பித்து 10  நாட்களே ஆகியிருந்தன
வழக்கம் போல ஜூனியர்களை சீனியர்கள் கலாய்க்கும் நிகழ்வுகளும் நடந்துகொண்டிருந்தன
 

மாணவிகள் அதிகமாக நின்றுகொண்டிருந்த பகுதியில் தனது சகாக்களுடன் நின்ற   மிகவும் வில்லங்கமான சீனியரிடம் நமது ஜூனியர் சிக்கிகொண்டார்
 

"எங்கடா ஓடப்பாக்கிற நில்றா ......நீ ஃபஸ்ட் இயர்தானே  "
 
"ஆமா ப்ரதர் "
 
"நாங்க ரேகிங் பண்ணுவோம் தெரியும்ல  "
 
"தெரியும் "
 
"நான் சொல்றதல்லாம் செய்வியா "
 
"என்னால முடிஞ்சா செய்வேன் ப்ரதர் "

02 ஜூலை 2011

குழந்தையும் தெய்வமும் குரங்கும் நாயும் !!!

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்று சொல்கிறோம் .கடவுளுக்கு எப்படி மரியாதை குறைந்துவிட்டதோ அது போலத்தான் குழந்தைகளையும் சரியாக பலர் பேணுவதில்லை  .

இதில் நம் நாடு சற்று பரவாயில்லை .ஐரோப்பிய நாடுகளில் ......
படங்களை பாருங்கள் விளங்கும்

தகர டப்பாவை விட கேவலமாய் தரையில்

தமிழ் நாடு :அணு உலைகளை மூடக்கோரி உண்ணாவிரதம் .

சமீபத்தில் ஜப்பானில் நிகழ்ந்த அணு உலை விபத்தினால் லட்ச்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களிலிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர் .மேலும் விபத்து பாதிப்பை முற்றிலும் சரி செய்ய பத்து லட்சம் கோடி ரூபாய் செலவாகும் என ஜப்பான் அரசு மதிப்பிட்டுள்ளது .
எனவே மின்தேவையை பூர்த்தி செய்ய அணுமின்சாரம் சரியான வழி அல்ல என்றுணர்ந்து பல்வேறு நாடுகள் அணு உலைகளை மூடிவிட்டு  மாற்று வழிகளில் மின்சாரம்  தயாரிக்க  முடிவெடுத்துள்ளன .
இந்நிலையில் தமிழ் நாட்டில் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் இரண்டு அணு உலைகள் கட்டப்பட்டு விரைவில் இயக்கப்பட இருக்கிறது .