02 ஆகஸ்ட் 2011

உங்கள் உடலைப் பற்றி நீங்கள் இது வரை அறியாத 10 உண்மைகள் !

THANKS: MEN'S FITNESS

மனித உடலைப் பற்றி உலகம் முழுவதும் பல்வேறு நிபுணர்கள் ஆராய்ந்த  ஆராய்ச்சிகளின் சமீபத்திய முடிவுகள் இவை .

1 .தனி மனிதன் உணவு
ஒரு மனிதன் வாழ் நாளில் உண்ணும் உணவின்  அளவு 7 டன்கள் (7000  கிலோ )

நாம சொல்றது இன்னாண்ணா : "தனி மனிதனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் " சரியாத்தான் இருந்திருக்குது .....வேற வழி ?

 2 .மூளையின் ஆற்றல் 


மூளையின் ஆற்றலில் 10  சதவீதம் மட்டுமே பயன்படுத்துவதாக தவறாக எண்ணிக்கொண்டிருக்கிறோம் .அனைவருமே கிட்டத்தட்ட 100  சதவீதம் மூளையை பயன்படுத்துகிறோம் .இது fMRI  மற்றும் PET  ஸ்கேன் மூலமாக கண்டறியப் பட்டுள்ளது .

நாம சொல்றது இன்னாண்ணா :அதுக்காக பரிட்சையில ஃபெயிலாகுறதுக்கும் மூளைக்கும் சம்மந்தம் இல்ல ....பல ஃபிகர்கள ஃபாலோ பண்றதுனால உண்டாகுற குழப்பம்தான் பரிட்சையில ஃபெயிலாக காரணம் .

3 .நாக்கிலும் ரேகைகள்
விரலிலுள்ள ரேகைகளைப் போலவே நாக்கிலும் அனைவருக்கும் வெவ்வேறான ரேகைகள் உள்ளன .

நாம சொல்றது இன்னாண்ணா :திருடனைப் பிடிக்க இன்னொரு வழி கிடைச்சிடுச்சி .திருட வர்றவனுங்க அரை குறையா சாப்பிடற மாதிரி ஏதாவது  உணவுப்பொருளை வச்சீங்கன்னா  ஈசியா புடிச்சிடலாம் !

4 . தோல் 

1  மணி நேரத்தில் தோலிலிருந்து 6  லட்சம் துகள்கள் விழுகின்றன .அதாவது 1  வருடத்தில் சுமார் 600  கிராம் தோல் நம் உடலிலிருந்து விழுகிறது .

நாம சொல்றது இன்னாண்ணா : அட நாமகூட பாம்போட இனம்தான் .அது ஒரு நாளைல உரிக்கிறத நாம பல நாளா உரிக்கிறோம்.ஆனா அதுக்கு பல்லுல மட்டும்தான் விஷம் நமக்கு உடம்பு பூரா விஷம் .

5 .மூளையின் வாசனைத் திறன்

மனித மூளையால் 50000  வாசனைகளை நினைவில் வைக்க முடியும்

நாம சொல்றது இன்னாண்ணா :அட போங்கப்பா ...பசி எடுத்தா காக்கா பிரியாணிக்கும்  கோழி பிரியாணிக்கும் வித்தியாசம் தெரியல ....

6 .எலும்பின் சக்தி 
மனிதனின் தொடை எலும்பு கான்கிரீட் சுவரை விட வலிமை வாய்ந்தது .தொடை எலும்பு அதனைப் போல் 30  மடங்கு எடையை தாங்கவல்லது .

நாம சொல்றது இன்னாண்ணா :இனியும் எதுக்குன்னே அரிவாள் அது இதுன்னு தேடிகிட்டு உங்கிட்டவே பெரிய ஆயுதம் இருக்கே ...ஹி ..ஹி

7 .மண்டே ப்ரெஷர்
ஒவ்வொரு திங்கட் கிழமைகளிலும் காலை எழுந்ததும் இரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது .

நாம சொல்றது இன்னாண்ணா :வேலை செய்யுற உங்களுக்கே இவ்வளவு பிரஷர் ஏறுனா கோடிக்கணக்குல கடன் வாங்கி முதல் போட்ட முதலாளிக்கு எவ்வளவு பிரஷர் இருக்கோணும் ...

8 .எலும்புகளின் எண்ணிக்கை 

பிறக்கும் பொழுது 300  க்கும் அதிகமான எலும்புகளுடன் பிறக்கும் நாம் முதுமையடையும் போது எலும்புகளின் எண்ணிக்கை சுமார் 200  ஆக குறைகிறது .எலும்புகள்   ஒன்றுடன் ஒன்று இணைவதால் இவ்வாறு நிகழ்கிறது .

நாம சொல்றது இன்னாண்ணா :எண்ணிக்கை குறைறது திருமணத்துக்கு முன்னாடியா அல்லது பின்னாடியாங்கிறது தெரியலையே

9 .தும்மலின்  வேகம்

தும்மும் போது வெளியாகும் காற்றின் வேகம் 100  கிலோ மீட்டருக்கும் அதிகம் என்ற தவறான எண்ணம் உள்ளது .தும்மும்போது சுமார் 40  மைல் வேகத்தில்தான்  காற்று வெளிப் படுகிறது .

நாம சொல்றது இன்னாண்ணா :தும்முறதுக்கெல்லாம்  கோல்டு மெடலா குடுக்குறாங்க ...எத்தனை வேகத்துல தும்மினா என்ன ...

10 .தாடியின் நீளம்

மனிதனின் வாழ்நாளில் மொத்தம் 27  அடி நீளத்திற்கு தாடி வளர்கிறது

நாம சொல்றது இன்னாண்ணா :காதல்ல தோத்தா என்ன மக்கா .....தாடி வளக்க ஆரம்பி ...வாழ்க்கைல ஜெயிக்கலாம் . 
                                            
                                                                            நன்றி 

42 கருத்துகள்:

கிராமத்து காக்கை சொன்னது…

திங்கட் கிழமைகளிலும் காலை எழுந்ததும் இரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது உண்மைதான்
பல அரிய தகவல் நண்பரே

அமுதா கிருஷ்ணா சொன்னது…

அருமையான தகவல்கள்

ஹேமா சொன்னது…

பதிவு அறிவுபூர்வமா அதிசயமாவும் இருக்கு.நாம சொல்றது இன்னாண்ணா....வேணாம் சொல்லல.பாலா சொன்னதே போதும் !

கோகுல் சொன்னது…

நான் சொல்றது இன்னான்னா பதிவு சூப்பரு

Unknown சொன்னது…

அட நாமகூட பாம்போட இனம்தான் .அது ஒரு நாளைல உரிக்கிறத நாம பல நாளா உரிக்கிறோம்.ஆனா அதுக்கு பல்லுல மட்டும்தான் விஷம் நமக்கு உடம்பு பூரா விஷம் .

நல்ல எடுத்துக் காட்டு பாலா
அருமை அருமை அருமை!

என் வலை வந்து கருத்துரை வழங்கி யுள்ளீர்
அடிக்கடி வாருங்கள் நன்றி

புலவர் சா இராமாநுசம்

Unknown சொன்னது…

தகவல்கள் எல்லாமே புதுசா இருக்கு பாஸ்!!பின்னுறீங்க நாளாந்தம்!

Mathuran சொன்னது…

இவ்வளவு விசயம் இருக்கா... பகிர்வுக்கு நன்றி

கூடல் பாலா சொன்னது…

@கிராமத்து காக்கை ரொம்ப கஷ்டமான வேலையோ ?

கூடல் பாலா சொன்னது…

@Amutha Krishna கருத்துக்கு மிக்க நன்றி சகோதரி !

கூடல் பாலா சொன்னது…

@ஹேமா அட ...சொல்ல வந்தத சொல்லாம போறீங்களே ...சரி ...நன்றி ஹேமா !

கூடல் பாலா சொன்னது…

@கோகுல் அப்படீங்கறீங்க ...ரைட்டு...நன்றி கோகுல் !

கூடல் பாலா சொன்னது…

@புலவர் சா இராமாநுசம் மிக்க நன்றி ஐயா !அடிக்கடி வருகிறேன் தங்கள் தளத்துக்கும் !

கூடல் பாலா சொன்னது…

@மைந்தன் சிவா என்ன பண்றது ...புதுசா சொல்லி காலம் தள்ளுவோம் ...நன்றி மாப்ள !

கூடல் பாலா சொன்னது…

@மதுரன் நன்றி மதுரன் !

Unknown சொன்னது…

எழாவது ஒட்டு

Unknown சொன்னது…

நீங்க சொல்லித்தான் இவ்வளவு விசயமும் எனக்கு தெரிந்தது ,நீங்க சொன்னதுநாலா தான் நான் கேட்டேன்

Unknown சொன்னது…

உங்கள் நகைச்சுவைகளும் அருமை

M.R சொன்னது…

நல்ல தகவல் ,தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் அருமை

நாம சொல்றது இன்னான்னா :-

இதனை அனைவரும் அறிய பகிர்ந்ததற்கு நன்றி நண்பரே

பெயரில்லா சொன்னது…

சி பி யும் பாலாவும் ஒரே பதிவில் பார்த்தது போல் ஒரு வித்தியாச பதிவு..கலக்கல்...

மகேந்திரன் சொன்னது…

ஆக்கப்பூர்வ அறிவியல் மற்றும் உடற்கூறு தகவல்கள் உங்கள்
நடையில்.
அற்புதம்.

மாய உலகம் சொன்னது…

ஆஹா.. நக்கலுடன் நன்மையான விசயங்கள்... நாங்க் சொல்றது இன்னான்னா... வாழ்த்துக்கள்

கூடல் பாலா சொன்னது…

@ரியாஸ் அஹமது அடேங்கப்பா ...அப்படீன்னா வேற யாரு சொன்னாலும் கேக்க மாட்டீங்க ?

கூடல் பாலா சொன்னது…

@M.R மிக்க மகிழ்ச்சி !

கூடல் பாலா சொன்னது…

@Reverie மிக்க நன்றி ப்ரதர் !

கூடல் பாலா சொன்னது…

@மகேந்திரன் நன்றி அண்ணாச்சி !

கூடல் பாலா சொன்னது…

@மாய உலகம் அட ...நீங்க சொல்றதுகூட நல்லாதான் இருக்கு !

சக்தி கல்வி மையம் சொன்னது…

Nice.,
Mobilil comment poduvathaal template comment thaan. sorry.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

செம போஸ்ட்ப்பா

நிரூபன் சொன்னது…

ஆச்சரியமான தகவல்கள் சகோ,
ஒவ்வோர் டிபிஸ் இற்கு நடுவிலும் உங்களின் காமெடித் துணுக்குகளைச் சேர்த்தது சூப்பரா இருக்கு சகோ.

shanmugavel சொன்னது…

இன்ட்ரஸ்டிங் .வாழ்த்துக்கள்.

உணவு உலகம் சொன்னது…

வித்யாசமான தகவல்கள்.

koodal kanna சொன்னது…

மிகவும் அருமையான அற்புதமான தகவல்கள் \மிக்க நன்றி .

ராஜா MVS சொன்னது…

நல்ல தகவல்கள் நண்பா..,

கூடல் பாலா சொன்னது…

@!* வேடந்தாங்கல் - கருன் *! No problem ...Thanks

கூடல் பாலா சொன்னது…

@சி.பி.செந்தில்குமார் தங்கள் பாராட்டுதலுக்கு நன்றி அண்ணே !

கூடல் பாலா சொன்னது…

@நிரூபன் நன்றி ப்ரதர் !

கூடல் பாலா சொன்னது…

@shanmugavel நன்றி அண்ணா !

கூடல் பாலா சொன்னது…

@FOOD நன்றி ஆபீசர் !

கூடல் பாலா சொன்னது…

@koodal kanna கருத்துக்கு நன்றி அண்ணா !

கூடல் பாலா சொன்னது…

@ராஜா MVS மிக்க நன்றி !

Mahan.Thamesh சொன்னது…

சில நாட்களாக வலைத்தளம் பக்கம் வர முடியல்ல சகோ கொஞ்சம் பிஸி ;
அப்பாடி எம்புட்டு தகவலை அள்ளி வந்திரிருக்கிங்க ; எல்லாமே கமெடியோட நல்ல இருக்கு

சென்னை பித்தன் சொன்னது…

புதிய தகவல்கள்.நன்றி!