இது போன்ற பல பழமொழிகளை நாம் அடிக்கடி உபயோகிக்கிறோம் .ஆனால் இவை பலரால் தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது .
1 .பகையாளி வீட்டை உறவாடிக்கெடு
இதை மேலோட்டமாக பார்த்தால் நமது முன்னோர்கள் ஒரு டெரரான பாதையை நமக்கு காண்பிப்பது போல் தோன்றும் .இந்த பழமொழியின் உண்மையான பொருள் என்னவென்றால் பகையாளியிடம் நாம் உறவாடினால் நாளடைவில் அவர்களும் நம்மிடம் உறவாட ஆரம்பித்து அந்த பகை கெட்டுப்போகும் என்பதுதான் .
டிஸ்கி :அளவுக்கதிகமாக பகையாளியிடம் உறவாடினால் இவன் ரொம்ப நல்லவனா இருக்கான்னு நெனச்சி அளவுக்கதிகமாக அடிக்கவும் வாய்ப்புள்ளது .
2 .ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்
மேலோட்டமாக பார்த்தால் இது முரண்பாடு நிறைந்ததாக தோன்றும் .அதெப்படி அடுத்த வீட்டு பிள்ளையை ஊட்டினால் நம் பிள்ளைக்கு சாப்பாடு போடவேண்டிய அவசியம் இல்லையா .?
இதன் உண்மையான பொருள் வேறு .இது புது மாப்பிள்ளைகளுக்காக வகுக்கப்பட்ட பழமொழி .இங்கு ஊரார் பிள்ளை என்று மனைவியை குறிப்பிடுகிறார்கள் .கட்டிய மனைவிக்கு சத்தான உணவுகளை கொடுத்தால் அவள் வயிற்றில் இருக்கும் தனது பிள்ளை நன்கு வளரும் என்பதே கணவனுக்கு கூறப்படும் அறிவுரை .
டிஸ்கி : நம்மாளு ஒருத்தர் பக்கத்து வீட்டு பையன் ஊட்டியில உள்ள பாட்டி வீட்டுல வளருறதுனால அவரோட பையனுக்கு சரியா சாப்பாடே போடுறதில்ல.மிஸ் அண்டர்ஸ்டேன்டிங்
3 .கள்ளனை நம்பினாலும் குள்ளனை நம்பாதே
அப்படீன்னா வீட்டு சாவியை கள்ளன்கிட்ட கொடுக்கலாம் .பக்கத்து வீட்டுக்காரன் குள்ளமாக இருந்தால் அவனிடம் கொடுக்கக்கூடாதா
இது பாகவதத்துல உள்ள கதைங்க .இங்கே கள்ளன் என அழைக்கப்படுபவர் கண்ணன் .கண்ணனை நம்பியவர்கள் அனைவரும் நன்மையே அடைந்தார்கள். குள்ளன் என்பது வாமனனை.மன்னன் மகாபலி மூன்றடி மண்தானே என்று குள்ளமாக இருந்த வாமனனை மெத்தனமாக எண்ணியதால் ஆட்ச்சியை இழக்க நேரிட்டது .
டிஸ்கி : குள்ளர்களாக இருப்பவர்களிடம் உயரமானவர்களை விட ஏதோ ? ஒரு திறமை இருப்பதாக மட்டும் பலர் சொல்கிறார்கள் .