30 ஜனவரி 2012

கூடங்குளம் அணு உலை மாதிரி எரிப்பு !

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக சில மாதங்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது .இந்நிலையில் இன்று ஒரு மிகப் பெரிய போராட்டம் கூடங்குளத்தில் நடைபெற்றது .

கூடங்குளம் அணு உலையைப்போல் ஒரு மாதிரி அட்டைகளால் உருவாக்கப்பட்டு கூடங்குளம் கொண்டுவரப்பட்டது .

அதன் பிறகு  அது வாகனத்தில்  கூடங்குளம் வைராவிகிணறு விலக்கிலிருந்து கூடங்குளம் அணுமின் நிலையம் அருகிலுள்ள பைபாஸ் ரோடு சந்திப்பிற்கு  ஊர்வலமாக எடுத்துவரப் பட்டது .

அங்குவைத்து பொதுமக்கள் அதற்கு ஒப்பாரி வைத்தனர் 

பின்னர் அங்கு அதற்கு எரியூட்டப்பட்டது .

சம்பிரதாயப் படி அணு உலை மாதிரியை எரிப்பதையொட்டி கூடங்குளம் ஊராட்சி மன்ற உறுப்பினர் பெருமாள் சாமி உட்பட மூன்று உறுப்பினர்கள் மொட்டையடித்து இறுதிக்கடன் செலுத்தினர் .

இன்று நடை பெற்ற போராட்டத்தில் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் டாக்டர் உதயகுமார் உட்பட சுமார் 8000  பேர் கலந்துகொண்டனர்.அணு  உலை மாதிரி ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது 


அணு உலை மாதிரிக்கு ஒப்பாரி வைத்த பொதுமக்கள்
 

அணு உலை மாதிரி எரியூட்டப்பட்டது 


மொட்டையடித்த ஊராட்சி உறுப்பினர் பெருமாள் சாமி

18 கருத்துகள்:

இருதயம் சொன்னது…

ஜனங்களின் அறியாமை இப்படி எரிக்கப்பட வேண்டும் . ஆனால் கொடுமை....! பாருங்கள் .... அப்படியே மாறி நடக்கிறது .... அறிவியலை குறித்த எழுச்சி மக்களிடம் வரவேண்டும் ..... மாறாக மக்களை தவறான் பாதையில் நடத்த அனுமதிக்க கூடாது . என்னவோ நடக்கிறது ... மக்களின் பயம் தீரும் நாள் சீக்கிரம் வரும் என்று நம்புவோம் .

பெயரில்லா சொன்னது…

நன்கு அந்த படத்தை உற்று பாருங்கள் .. சுற்றிலும் ஒப்பாரி எல்லாரும் வைக்கிற பொழுது ஒரு சகோதரி சிரித்து கொண்டு இருக்கிறார்கள் பாருங்கள் . இது ஓன்று போதும் ..... போராட்டத்தின் வீரியத்தை சொல்ல .......

ரசிகன் சொன்னது…

ஒரு நாள் நிஜ அணு உலை கட்டிடம் ஒரு பள்ளிக்கூடமாக மாற்றப் படும்.

Admin சொன்னது…

மத்திய அரசின் நிலைப்பாடு என்னவென்று ஒன்றும் புரியவில்லை..போராட்டங்கள் வீணாகக்
கூடாது..படங்கள் இணைப்பு சிறப்பு..

பெயரில்லா சொன்னது…

இந்த போராட்டம் வீரியம் குறையாது தொடர்வது கண்டு மகிழ்ச்சி தோழர் பாலா...

பெயரில்லா சொன்னது…

மக்களின் கோயில்'- peoples temple என்று இயக்கம் ஆரம்பித்து ( இங்கல்ல அமெரிக்காவில் ) மக்களின் மனதில் முறையான மத எண்ணங்களை விட ஒரு போதை மாதிரி திரித்து விட்டாரே ஜிம் ஜோன்ஸ் என்பவர், அந்த நிகழ்வு உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா....?..1970 களில் மிகப்பிரபலமாக இருந்த செய்தி இது.. ..கடைசியில் தென் அமெரிக்காவின் கயானாவில் 918 மக்கள் ( அவர்களில் 278 பேர் குழந்தைகள் ) விஷம் குடிக்க வைக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டார்கள். ---------முழுதும் படிக்க http://en.wikipedia.org/wiki/Peoples_Temple


தற்பொழுது இந்த ஒப்பாரி வைக்கும் மக்களை பார்க்கும் பொழுது இந்த நிகழ்வு தான் எனக்கு தோன்றுகிறது. எந்த அளவுக்கு மக்களை போதையேற்ற முடியும் ...அதுவும் நன்மைக்கு எதிராகவே என்று எனக்கு ஆச்சர்யமாக உள்ளது. கூடல் பாலா போன்றவர்களே அணு உலைக்கு எதிராக குறுகிய பார்வையில் இருக்கும் போது ஒப்பாரி வைக்கும் அந்த சகோதரியை என்ன சொல்ல ?

கூடல் பாலா சொன்னது…

@இருதயம் சுமூக முடிவே எனது விருப்பம் ...

Unknown சொன்னது…

இதோட முடிவு எப்போது என்று எதிர்பார்க்கிறோம்!

கூடல் பாலா சொன்னது…

@பெயரில்லா ஆஹா ..துன்பத்திலும் ஒரு இன்பம் !

கூடல் பாலா சொன்னது…

@ரசிகன் கருத்துக்கு நன்றி!

கூடல் பாலா சொன்னது…

@Madhu Mathi எல்லா பிரச்சினைகளிலும் அரசின் நிலைப் பாடு இவ்வாறுதான் இருப்பது போல் தோன்றுகிறது ..கருத்துக்கு நன்றி!

கூடல் பாலா சொன்னது…

@பெயரில்லா இது மனித சக்தியை மீறிய ஒரு போராட்டமாகவே எனக்கு தென் படுகிறது ...அதனால்தான் 5 மாதங்களாக ஆயிரக்கணக்கானோர் ஒரு சிறிய வன்முறையின்றி போராடுகிறார்கள் ...சுமூக முடிவு விரைவில் கிடைக்க பிரார்த்திப்போம்....

கூடல் பாலா சொன்னது…

@ரெவெரி உண்மையான மக்கள் போராட்டமல்லவா இது ...நன்றி தோழர் !

கூடல் பாலா சொன்னது…

@விக்கியுலகம் நாங்களும்தான் ...நன்றி மாம்ஸ்!

மகேந்திரன் சொன்னது…

தொடர் வினைகளில் புது வினையாய்
எரிப்பு போராட்டம் ....
எரியட்டும் போக்கத்த அரசியல் கொள்கைகளும் ..
சிரசற்ற சிந்தனைகளும்..
வெல்லட்டும் போராட்டம்.

Mahan.Thamesh சொன்னது…

விடியும் தூரம் வெகு தொலைவில் இல்லை என படங்கள் புலப்படுத்துகின்றன சகோ ;

நிரூபன் சொன்னது…

வணக்கம் பாலா அண்ணா,
நல்லா இருக்கிறீங்களா?

கூடங்குள மக்கள் அனைவரும் நலமா?

நீண்ட நாட்களின் பின்னர் வந்திருக்கிறீங்க.

இன்னமும் போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கலையே என்பது வேதனையாக இருக்கிறது.

எம் மக்களின் உணர்வுகளைப் பார்த்தாவது அரசு கண் விழிக்க வேண்டும் என்பதே எனது விருப்பமும்.

SURYAJEEVA சொன்னது…

இன்குலாப் ஜிந்தாபாத்