29 ஜூலை 2011

அரசனை நம்பி புருசனை கை விடாதே .

இது ஒரு பழமொழி என்பது அநேகமாக அனைவருக்கும் தெரிந்திருக்கும் .

பெரிய பொருள் ஒன்றுக்கு ஆசைப்பட்டு அதன் மூலம் இருக்கின்ற சிறிய பொருளையும் இழந்துவிடக்கூடாது என்ற சூழ்நிலைகளில் இந்த பழமொழியை பலரும் பயன்படுத்துகிறார்கள் .

ஆனால் இது தவறு .இதன் பொருளே வேறு .

இந்த பழமொழிக்குப் பின்னால்  ஒரு பெரிய செயலை உணர்த்தும் ஒரு சிறிய சம்பவம் உள்ளது .

நடந்தது இதுதான் .


ஒரு ஊரில் ஒரு பெரிய செல்வந்தர் இருந்தார் .அவருடைய மனைவி இளம் வயதிலேயே இறந்துவிட்டாள். அவருக்கு மிகவும் அழகான ஒரு அழகான மகள் இருந்தாள்.அவளை இன்னொரு ஊரில் வசித்த அவளை விட அழகான ஒரு இளைஞனுக்கு திருமணம் முடித்தார் .

திருமணம் முடித்து வைத்து மூன்று ஆண்டுகளிலேயே செல்வந்தருக்கு கவலை தொற்றிக்கொண்டது .காரணம் மூன்றாண்டுகள் ஆகியும் அவரது மகளுக்கு குழந்தை இல்லை .

செல்வந்தர் தனக்குத்தெரிந்த ஒரு சாமியாரிடம் தனது மகளை அழைத்துச் சென்று அவளின் குறையை எடுத்துக் கூறினார் .அதற்கு அந்த சாமியார் தினமும் அரச மரத்தை ஒரு மணி நேரம் சுற்று குழந்தை பிறக்கும் என்று கூறினார் .


அதன் படியே செல்வந்தரின் மகளும் தினமும் அரச மரத்தை சுற்றி வந்தாள்.ஒரு வருடம் கடந்தது ,இன்னமும் அவள் கருத்தரிக்கவில்லை .

மீண்டும் மகளை சாமியாரிடம் அழைத்துச் சென்றார் .சாமியார் அவளை ஏறெடுத்துப் பார்த்தார் .அவருக்கு ஒரு உண்மை புரிந்தது .இப்போது சாமியார் அவளிடம் "அரசினை நம்பி புருசனைக் கை விடாதே "என்று கூறினார் .

இப்போதுதான் செல்வந்தருக்கும் உண்மை புரிந்தது .அவளது மகள் அரச மரத்தைதான் சுற்றினாளே தவிர தனது கணவனை "அதற்கு" அனுமதிக்கவில்லை .


இப்போது செல்வந்தர் தகுந்தவர்கள் மூலம் தன்  மகளுக்கு ஆலோசனை வழங்கியதன் மூலம் குழந்தை பிறந்தது .

நாளடைவில் "அரசினை" என்னும் வார்த்தை அரசனை என்று மருவியது .

29 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

ரைட்டு...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நல்லாயிருக்குங்க..
அப்படியே எல்லா பழமொழிகளுக்கும் கதைப்போடுங்க...

வாழ்த்துக்கள்...

கோகுல் சொன்னது…

பழமொழிக்கான உண்மையான அர்த்தத்தை விளக்கியதற்கு நன்றி

M.R சொன்னது…

நன்று .இது மட்டுமில்லை நண்பரே .நிறைய பழமொழிகள் இப்பொழுது மருவி மாறி விட்டது .எனது பதிவில் கூட இது பற்றி கூறியிறுன்தேன் பார்த்தீர்களா .

ஆனால் தங்களை போல் இத்தனை விரிவாக சொல்லவில்லை .இப்பொழுது உள்ள பழமொழியின் உண்மை பல மொழி எது என்று குறிப்பிட்டு இருந்தேன் .


பகிர்வு அருமை .அதை நயம்பட கூறியிருந்த விதம் அருமை ,தங்கள் நடையிலே சொல்ல வேண்டும் என்றால்


அடி பொழி சேட்டா .

நன்றி

Unknown சொன்னது…

நன்றி பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ...

Unknown சொன்னது…

புருஷனுக்கு அதரவா இருந்த ஒரு பழமொழி காலி !!
என்ன ஒரு வில்லத்தனம் ...ஏன் ...முடியல !!

போட்டாச்சு போட்டாச்சு
ஒட்டு ...

பெயரில்லா சொன்னது…

ஆகா, இது தான் அந்த பழமொழியின் உண்மையான அர்த்தமா ,,,நன்றி பாஸ் ...

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

பழமொழி நல்லாயிருக்கு. கதையும் அருமை.

Yaathoramani.blogspot.com சொன்னது…

பழமொழியும் அதற்கான விளக்கமும் அருமை
அர்த்தமில்லாமல் படம் போடக்கூடாது என
செல்வந்தரின் மகள் படம் போட்டிருப்பது கூட அருமை
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

கூடல் பாலா சொன்னது…

@gokul நன்றி தலைவா ....

மகேந்திரன் சொன்னது…

அப்படியா
இப்படியும் திருத்தமா
இனிமேல் சரியா சொல்வோம்....
நன்றி நண்பரே.

கூடல் பாலா சொன்னது…

@M.R உங்களுக்கு தெரிஞ்சதையும் அவுத்து விடுங்க பாஸ் .....

கூடல் பாலா சொன்னது…

@ரியாஸ் அஹமது அப்போ இனி வீட்ல மரியாதை சுத்தமா அவுட்டா ......

கூடல் பாலா சொன்னது…

@கந்தசாமி. எனக்கும் நேத்துதான் தெரிஞ்சது ......அதான் உடனே போட்டுட்டேன் .....

கூடல் பாலா சொன்னது…

@தமிழ்வாசி - Prakash நன்றி ப்ரதர் ..

கூடல் பாலா சொன்னது…

@Ramani வாழ்த்துக்கு ரொம்ப நன்றி அண்ணாச்சி....

சக்தி கல்வி மையம் சொன்னது…

பழமொழியும் அதற்கான விளக்கமும் அருமை..
நன்றி..

Unknown சொன்னது…

இப்பிடி ஒரு கண்டுபிடிப்பா!!பிரம்மாதம்!!

கிராமத்து காக்கை சொன்னது…

கதை அப்படி போகுதா

M.R சொன்னது…

ஹி ஹி கேட்க மறந்துட்டேன்

அந்த பொண்ணு யாரு பாஸ்

மாய உலகம் சொன்னது…

அரசனை நம்பி புருசனை கைவிடாதே...சரியாக சொல்லியிருக்கிறீர்கள்.. அர்த்தம் சரியானதே... நன்றி

கூடல் பாலா சொன்னது…

@மகேந்திரன் நன்றி அண்ணே !

கூடல் பாலா சொன்னது…

@!* வேடந்தாங்கல் - கருன் *! நன்றி வாத்யாரே !

கூடல் பாலா சொன்னது…

@மைந்தன் சிவா ஒவ்வொருத்தன் எதையெல்லாமோ கண்டு பிடிக்கிறான் ....இதென்ன மாப்ள பிரமாதம் .....கருத்துக்கு நன்றி !

கூடல் பாலா சொன்னது…

@கிராமத்து காக்கை போயிடிச்சி ......

கூடல் பாலா சொன்னது…

@M.R போன் நம்பர் குடுங்க ....விசாரிச்சி சொல்றேன் ...

கூடல் பாலா சொன்னது…

@மாய உலகம் இதோ வந்துட்டேன் ....

நிரூபன் சொன்னது…

ஆகா...என்ன தான் இருந்தாலும் மனுசனை அதற்கு அனுமதிக்க வேண்டும் எனும் தத்துவத்தை மறைமுகமாகவும், புருசனை நம்ப வேண்டும் எனும் தத்துவத்தை நேரடியாகவும் நம்ம அண்ணாச்சி இந்தக் கதையினூடாகச் சொல்லியிருக்கிறார்.
ரசித்தேன் பாஸ்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

குட் ஒன்