04 மார்ச் 2012

மதங்களை ஒன்றிணைத்த கூடங்குளம் போராட்டம்!

கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி நடை பெற்று வரும் போராட்டம் பல்வேறு தடைகளையும் தாண்டி 200  நாட்களைக் கடந்து தொடர்ந்துகொண்டிருக்கிறது. 

இப்போராட்டங்களில் நம் சமூகத்திற்கு மிகவும் அவசியமான சில நிகழ்வுகள் இங்கே நடக்கின்றன.

அது மத ஒருமைப் பாடு .

இடிந்தகரை கிறிஸ்தவ தேவாலயத்தில் நடந்து வரும் உண்ணாவிரதத்தில் ஏராளமான இந்து மதத்தினர் கலந்துகொள்கிறார்கள் .

இந்நிலையில் இன்று அணு உலையை மூடவேண்டி கூடங்குளம் அருள்மிகு அரசமரத்து விநாயகர் திருக்கோவிலிலிருந்து விஜயாபதி அருள்மிகு விஸ்வாமித்திர மகா லிங்கேஸ்வரர் கோவில்(இத்திருத்தலம் பிரம்ம ரிஷி பதவியை அடைய விஸ்வாமித்திர மகரிஷி ஸ்ரீராமன் ,ஸ்ரீஇலக்குவன் துணையோடு யாகம் செய்த இடமாக இராமாயணம் கூறுகிறது)  வரை 7  கிலோ மீட்டர் தொலைவிற்கு பக்தர்கள் பால்குடம் ஏந்தி பாத யாத்திரை  சென்றார்கள் .

இந்து வழிபாடுகளில் மிகவும் பக்திப்பூர்வமாக செய்யப்படும் நேர்த்திக் கடன்களில் பால் குடம் எடுத்துச் செல்வதும் ஒன்று.

இந்த ஊர்வலத்தில் பல கிறிஸ்தவர்களும் பால்குடம் ஏந்தி வந்தது மெச்சும்படியாக இருந்தது.




மதங்கள் வெவ்வேறாக இருந்தாலும் மார்க்கம் ஒன்றுதான் என்பதை இந்நிகழ்வுகள் உணர்த்தின.

5 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அவ்வளவுதான் பாலு........ஷோ முடிஞ்சிட்டு ......திரையத் தூக்கிட்டு வேற பக்கம் போப்பா....யாருமே இல்லாத கொட்டாயில எதுக்கு இம்புட்டு சிரமப்பட்டு பிலிம் காட்டுறே.......போ போ.....புள்ள குட்டிகள கொண்டு போய் பள்ளிகூடத்துல விடு.....

Unknown சொன்னது…

பெயரில்லா நண்பர்கள் இப்படித்தான் சொல்லுவார்கள் பாலா.
நல்ல விஷயம் எப்படியாவது கை கூடி வந்தால் இன்னும் நல்லதுதான்.

முஸ்தபா நௌபாத் சொன்னது…

ஜனநாயகம் என்ற பெயரில் தமிழ் நாட்டில் தான் அதிக கேலிக்கூத்துக்கள் நடக்கின்றன. சின்னச் சின்ன பிரச்சினைகளுக்கு எல்லாம் வீதியில் இறங்கி போராடிக் கொண்டிருப்பார்கள். அதனால் புக்கியமான பிரச்சினைகளுக்கு போராடும் போது கூட அது அவ்வளவு பெரிய பிரச்சினையாக தெரிவதில்லை..

மாநிலத்தமிழ்ச்சங்கம் சொன்னது…

ஒட்டு மொத்த இந்தியர்களுக்காகப் போராடி வரும் கூடங்குளம், இடிந்த கரை மக்களுக்கு நன்றி! கிறித்தவர்கள் போராட்டம் எனக் கொச்சைப்படுத்துபவர்களுக்குச் சரியான சவுக்கடி இந்தப் பதிவு!

Unknown சொன்னது…

நல்லது நடக்கும் என்று நம்புவோம்!