11 மார்ச் 2012

ஜப்பான் மக்களுக்கு அஞ்சலி.

கடந்த ஆண்டு இதே நாள் மறக்க முடியாத சோகம் ஒன்றை ஜப்பான் மக்கள் அடைந்த நாள் .


கடந்த 11-03 2011 ல் ஜப்பான் வரலாற்றில் மிகவும் மோசமான பேரழிவை சந்தித்தது .9  ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் பல நகரங்கள் சிதைந்து சின்னாபின்னமாயின 

அதைத் தொடர்ந்து வந்த சுனாமி பல்லாயிரம் மக்களை நிர்மூலமாக்கியது .

அடுத்த பெரும் சோதனையாக நான்கு அணு உலைகள் வெடித்து சிதறின .

அதனால் பல்லாயிரக்கணக்கானோர் சொந்த ஊரைக் காலி செய்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர் .


இவ்வேளையில் பேரழிவால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம். 

வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டவர்கள் விரைவில் மீழவும் இது போன்றதொரு பேரழிவு இன்னொரு முறை நிகழாமல் இருக்கவும் இறைவனை வேண்டுவோம் .

13 கருத்துகள்:

SURYAJEEVA சொன்னது…

இறைவன் காப்பாற்ற மாட்டான் தோழர்,
காப்பாற்றப் போவது நம் போராட்டம் மட்டுமே

ஹேமா சொன்னது…

அழிவுக்கான காரணத்தைத் தேடுவதுதான் சிறப்பு !

மகேந்திரன் சொன்னது…

மனமார்ந்த அஞ்சலிகள்...

அம்பலத்தார் சொன்னது…

ஞாபகப் பதிவிற்கு நன்றிகள். அடிக்கடி ஞாபகமூட்டாவிட்டால் நாம் சீக்கிரமே மறந்துவிடுவோம். இந்த அழிவில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதுடன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகள் கிடைக்கவும், உலகின் எந்தப்பாகத்திலும் இதுபோன்றதொரு அழிவு எற்பட்டாமல் இருக்கவும் ஒன்றிணைந்து செயல்படுவோம். செர்னோபில் மற்றும் ஜப்பானில் ஏற்பட்ட அணு உலை விபத்துக்களில் பெற்றுக்கொண்ட பாடங்களுடன் ஆக்கபூர்வமான மாற்று வழிமுறைகளிற்காக குரல்கொடுப்போம்.

பெயரில்லா சொன்னது…

:பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், கூடங்குளம் போராட்டத்திற்கு மதத்திற்கு அப்பாற்பட்டு ஆதரவு தருவதாக கத்தோலிக்க ஆயர்கள் கூறுகின்றனர். இதேபோல், கேரளாவுக்கு எதிரான, தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்ச்சி போராட்டமான முல்லைப்பெரியாறு பிரச்னையில், ஏன் பங்கேற்கவில்லை. கர்நாடகாவிற்கு எதிரான காவிரி பிரச்னையில் ஏன் கலந்து கொள்ளவில்லை. மின்வெட்டுக்கு எதிராகவும், தமிழகத்திற்கு மத்திய அரசு கூடுதல் மின்சாரம் தராததை எதிர்த்தும், பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்தும் நடைபெறும் போராட்டங்களில் ஆயர்கள் ஆதரவு தராதது ஏன்? என பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் நடுநிலையாளர்கள் மத்தியில் எழுந் துள்ளன.மத்திய அரசின் சார்பிலான விஞ்ஞானி ஆபிரகாம் முத்துநாயகம் தலைமையிலான நிபுணர் குழுவின் மீதும், தமிழகத்தில் சிறந்த பல்கலையான அண்ணா பல்கலை பேராசிரியர் இனியன் தலைமையிலான நிபுணர் குழு மீதும், உலகில் சிறந்த இந்திய விஞ்ஞானியாக கருதப்படும் அப்துல்கலாம் மீதும், அவர்களது அறிவியல் ரீதியிலான ஆய்வறிக்கைகள் மீதும், கத்தோலிக்க ஆயர்களுக்கு நம்பிக்கை வரவில்லையா?

பெயரில்லா சொன்னது…

எந்த அறிவியல் பூர்வ ஆய்வையும் மேற்கொள்ளாத, சொன்னதையே திரும்ப
திரும்ப சொல்லும் விதண்டாவாதியான உதயகுமார் மற்றும் பீதியூட்டும் குழுவினர் மீதுதான், பிஷப்கள் நம்பிக்கை வைத்துள்ளார்களா என்ற கேள்விகள் அனைவர் உள்ளத்திலும் எழுந்துள்ளன. இதற்கு தார்மீக ரீதியான, மனசாட்சியும், உளஉறுதியும் கொண்ட பதில்களை, ஆயர்கள் மீது அளவற்ற பற்று கொண்ட மதத்திற்கு அப்பாற்பட்ட விசுவாசிகளான தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.இந்திய மக்களின் வரிப்பணமான 14,000 கோடி ரூபாய் பணத்தை, பல ஆண்டுகள் ஆய்வுகளின் போதும், அதற்கு பிறகும், அணுமின் நிலையமாக அமைக்கும் வரை, இந்த ஆயர்களும், தார்மீக ஆதரவளிக்கும் ஆலய வளாகங்களும் என்ன செய்து கொண்டிருந்தன என்பது விடை தெரியாத மில்லியன் அமெரிக்க டாலர் கேள்வியாக உள்ளது.

பெயரில்லா சொன்னது…

போராட்டத்திற்கு தார்மீக அடிப்படையில் ஆதரவு அளிப்பதாக, அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேச்சு, பொது மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. கிறித்துவ நிறுவனங்கள் உதவி செய்யவில்லை என்றால், எதற்காக கிறித்துவ ஆலய வளாகத்தில் போராட்டம் நடக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது.திருநெல்வேலி மாவட்டத்திற்கு தொடர்பில்லாத கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த உதயகுமாரும், தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலுள்ள அமலி நகரை சேர்ந்த இடிந்தகரை பாதிரியார் ஜெயக்குமாரும், முதல்முறையாக ஏன் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தை துவக்கி வைத்தனர். எங்கோ நடக்கும் போராட்டத்திற்கு தூத்துக்குடியில் உள்ள மறை மாவட்ட ஆயர் இவான் அம்ப்ரோஸ் ஏன் நேரில் வந்து பங்கேற்க வேண்டும் என, சந்தேகங்கள் எழுந்துள்ளன.

பெயரில்லா சொன்னது…

தற்போது, வெயில் காலம் துவங்கி உள்ளதால், மின்சாரம் இல்லாமல் பெரிதும் சிரமப்படும் மக்கள், வசதியான வீடுகளில் மட்டும் காணப்பட்ட ஜெனரேட்டர், இன்வெர்ட்டர் போன்றவற்றை வாங்க துவங்கி உள்ளனர்.அதுவும், புறநகர் பகுதிகளில் மின்வெட்டு நேரம் அதிகமாகி உள்ளதால், அங்கு இன்வெர்ட்டர் விற்பனை சூடுபிடித்து உள்ளது. ஜெனரேட்டர் வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் கூட, எரிபொருள் விலை காரணமாக, இன்வெர்ட்டரையே விரும்புகின்றனர்.இதனால், அடிப்படை வசதி உள்ள இன்வெர்ட்டரின் விலை, 10 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்ந்து உள்ளது.இன்வர்ட்டர்களில், பேட்டரி மற்றும் மின் மாற்று கருவி என, இரண்டு பாகங்கள் உள்ளன.

தமிழகத்தில், மின் மாற்று கருவிகளை தயாரிக்கும் நிறுவனங்கள் பல மூலைகளிலும் முளைத்துள்ளன.ஆனால், இவற்றிற்கான பேட்டரிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மின்வெட்டு பிரச்னையால், பேட்டரி தயாரிப்பு அளவும் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. பல கடைக்காரர்கள், தங்களுக்கு 30 பேட்டரி வேண்டும் என்று ஆர்டர் செய்தால், மூன்று பேட்டரிகள் கூட சப்ளை செய்யப்படுவதில்லை என்று கூறுகின்றனர். இதனால், கடும் போட்டியில் இன்வெர்ட்டர்கள் விற்கப்படுகின்றன. விற்பனை அதிகரித்து வரும் நேரத்தில், தேவைக்கு ஏற்ப பேட்டரிகள் கிடைக்காததால், சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, சம்பாதிக்க முடியாமல் கடைக்காரர்கள் தவிக்கின்றனர்.

பெயரில்லா சொன்னது…

படத்தின் கதைக்கு தேவைப்பட்டால் எப்படி வேண்டுமானாலும் நடிப்பேன், என்று நடிகை த்ரிஷா கோபத்துடன் கூறியுள்ளார்

பெயரில்லா சொன்னது…

லட்சிய திமுகவின் ஆதரவு யாருக்கும் கிடையாது- விஜய டி.ராஜேந்தர்

அம்பலத்தார் சொன்னது…

//பெயரில்லா கூறியது......//

பெயரிலி, உங்கள் கருத்துக்களை கூறுவதற்கு எதற்கு அநாமதேயராக வரவேண்டும். நீங்கள் கூறவரும் கருத்தில் உங்களிற்கே பூரண திருப்தி இல்லையா? பல பின்னூட்டங்கள் ஒரே இடத்தில் பெயரிலியாக இருக்கும்போது படிக்கும் வாசகர்களுக்கும் அவற்றை எல்லாம் எழுதியது ஒருவரா அல்லது பலரா என்ற குழப்பம் ஏற்படுமே. உங்களை வெளிப்படுத்திக்கொள்வதில் சங்கடம் இருப்பின் எதாவது ஒரு புனைபெயரிலாவது வந்து பின்னூட்டம் இடலாமே.

பெயரில்லா சொன்னது…

இன்னொரு முறை நிகழாமல்...அதுவும் இந்தியாவில் நிகழாமல் இருக்க இறைவனை வேண்டுவோம்...

எல் கே சொன்னது…

பாலா, உணர்ச்சிவசப்படாமல் சிந்தியுங்கள். அணு உலையை எதிர்க்கும் அனைவரும் எதோ ஒரு உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே இருக்கிறீர்கள்