13 மார்ச் 2012

கூடங்குளம் பிரச்சினை: சிறப்பு பிரார்த்தனை .

கூடங்குளம் அணு உலையை நிரந்தரமாக மூடவேண்டி விஜயாபதியில் அமைந்திருக்கும் விசுவாமித்திர மகாலிங்க சுவாமி திருக்கோவிலில் இன்று சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது .


1 .கூடங்குளம் அணு உலை நிரந்தரமாக மூடப் படவேண்டும் 

2 .அணு உலைக்கு ஆதரவாக கருத்து கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள் மன நிலை மாறவேண்டும் 

3.சூழலுக்கு மாசற்ற வகையில் மின்சாரம் வழங்கி மக்கள் வாழ்வு வளமடையவேண்டும் ஆகிய வேண்டுதல்கள் வைக்கப்பட்டன .

பிரார்த்தனை நிகழ்ச்சியில் அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .


விஜயாபதி விசுவாமித்திர மகாலிங்க சுவாமி திருக்கோவில் 

 ராஜரிஷி விசுவாமித்திரர் சந்நிதி

7 கருத்துகள்:

rajamelaiyur சொன்னது…

பிரார்த்தனை வெல்லட்டும்

பெயரில்லா சொன்னது…

கூடங்குளம் அணு உலை நிரந்தரமாக மூட வேண்டும்... வெற்றி வெகு தொலைவில் இல்லை...

பெயரில்லா சொன்னது…

நபிகள் நாயகம் சல்லேல்லாஹுவ அலைஹுவ சல்லம் அவர்களை வணங்கி வேண்டுகிறேன்...கூடங்குளம் அணு உலை நிரந்தரமாகத் திறக்கப்பட வேண்டும்.... மேலும் பரமண்டலத்திலிருக்கிற எங்கள் பிதா யேசுராஜனை துதித்து வேண்டுகிறேன் அணு உலை நிரந்தரமாகத் திறக்க்கப்பட வேண்டும்...மாய உலகத்தில் இருக்கிற ரெவேரி, சூர்யஜீவா, கூடல்பாலா, நாஞ்சில் மனோ, புலவர் சா.ராமானுசம் மற்றும் அவர்தம் நண்பர்களுக்கும் நல்லறிவைக் கொடுத்து கூடங்குளம் அணு உலை நிரந்தரமாகத் திறக்கப்பட வேண்டியதன் நற்காரணங்களை அவர்களுக்கு தெளிய வைக்க வேணுமாய் செபிக்கிறேன்..ஆண்டவரே...

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

நல்லதே நடக்கும்

Unknown சொன்னது…

சீக்கிறத்தில் நல்ல செய்தி வரும் என எதிர்பார்ப்போம்!

SURYAJEEVA சொன்னது…

போராட்டம் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்தும், வழிபாடு அந்த போராட்டத்திற்க்கான ஊக்கத்தை கெடுக்காத வரை நல்லதே... கடவுள் பார்த்துக் கொள்வார் என்று போராட்டம் தோயாமல் இருந்தால் சரி... இன்குலாப் ஜிந்தாபாத்

http://avargal-unmaigal.blogspot.in/2012/03/never-give-up.html

இருதயம் சொன்னது…

மக்களை எப்படி எல்லாம் வசியப்படுத்த வேண்டும் என்ற பார்முலா மாத்திரம் திரு . உதயகுமார் மற்றும் Co க்கு தெரிகிறது போல .. பாவம் மக்கள் ...