19 மார்ச் 2012

கூடங்குளத்தில் உச்ச கட்ட கிளைமேக்ஸ் -வெற்றி யாருக்கு?

பலரும் எதிர் பார்த்தது போலவே சங்கரன் கோவில் இடைத் தேர்தல் முடிந்த மறுநாளே தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உண்மை முகம் தெரிந்துவிட்டது.

கடந்த செப்டம்பர் 22  ம் தேதி தமிழக அமைச்சரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி கூடங்குளம் பகுதி மக்களின் அச்சம் தீரும் வரை அணு உலைப் பணிகளை நிறுத்தி வைக்கவேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா தீர்மானம்    நிறைவேற்றினார் .

அதோடு நில்லாமல் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூடங்குளம் போராட்டத்தில் நானும் ஒருத்தியாக இருப்பேன் என்றும் கூறினார்

ஆனால் மக்களின் அச்சம் சிறிதளவும் தீராத நிலையில்   அணுமின் நிலையம் தொடங்க அனைவரும்  ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்று இன்று அமைச்சரவையைக்கூட்டி தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள் .

அத்தோடு நில்லாமல் எந்த ஒரு தனி மனிதரையோ அல்லது பொதுச் சொத்தையோ அணு அளவுக்குகூட சேதம் விளைவிக்காமல் ஆறு மாதமாக போராடிவரும் அப்பாவி மக்களை கைது செய்து வருகிறார்கள் .இது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

என்னைப் பொறுத்தவரை போராட்டத்தின் இறுதிக்கட்டமாக இது இருக்கும் என்று கருதுகிறேன் .

கைது நடவடிக்கையை தொடர்ந்து போராட்டக் குழுவின்  ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் காலவரையற்ற உண்ணாநிலையைத் தொடங்கியுள்ளார் .மேலும்  பல்லாயிரக்கணக்கானோர் இடிந்தகரையில் குவிந்து வருகின்றனர் .

வேற்றூர்களில் இருந்து வருபவர்களை தடுக்க ஆயிரக் கணக்கான போலீசார் குவிக்கப் பட்டுள்ளதால் கடலோர கிராம மக்கள் கடல் வழியாக இடிந்தகரையை நோக்கி வந்தவண்ணம் உள்ளனர் .

கிளைமேக்ஸ் தொடங்கிவிட்டது ,வெற்றி கூடங்குளம் பகுதி பொதுமக்களுக்கா இல்லை அணு உலைக்கா என்பது விரைவில் தெரிய வரும் என நினைக்கிறேன் .

கைது செய்யப் பட்ட கூடங்குளத்தை சார்ந்த வக்கீல் சிவசுப்பிர மணியன் மற்றும் போராட்டக் குழுவினர் .

கடல் மார்க்கமாக இடிந்தகரை நோக்கி வரும் கடலோர கிராம மக்கள் .

18 கருத்துகள்:

இருதயம் சொன்னது…

முற்று பெறும் கூடங்குளம் பிரச்சினை - வெற்றி பெற்றது யார் ...?


http://naanoruindian.blogspot.in/2012/03/blog-post_19.html

பெயரில்லா சொன்னது…

எப்படியோ , இந்த அறியாமைக்கும் , அறிவியலுக்கும் இடையே நடந்த போராட்டம் சுமூக முடிவுக்கு வந்தால் சரி தான்

நாய் நக்ஸ் சொன்னது…

என்ன சொல்லுவது....????

பெயரில்லா சொன்னது…

அதுக்கு அவ்வளவு தான் அறிவு...

Unknown சொன்னது…

நான் முன்பே மறுமொழியில்
தெளிவாக குறிப்பிட்டிருந்தது
நினைவிருக்கு மென்று கருதுகிறேன்
அதுதான் இன்று நடந்ததுபுலவர் சா இராமாநுசம்

PUTHIYATHENRAL சொன்னது…

தமிழ் நாட்டில் ஒரு உள்நாட்டு யூத்தத்தை தொடங்காமல் மத்திய அரசு தூங்காது என்று நம்புகிறேன்.

துரைடேனியல் சொன்னது…

எல்லாரும் எதிர்பார்தததுதானே சார்? இதில் வியப்படைய ஒன்றுமில்லை. என்ன செய்வது? எல்லாம் நம் தலைவிதி.

பெயரில்லா சொன்னது…

still you are not arrested?

பெயரில்லா சொன்னது…

அருமை. அடுத்தது உதயகுமார் எப்போது கைது செய்யபடுவார் என்பதை தெரியபடுத்துங்கள்.

பெயரில்லா சொன்னது…

ஒரு நாட்டின் மின் தேவைக்காக மூன்று மாவட்ட மக்களை பலி கொடுப்பதில் தவறில்லை. இதுதான் மனுதர்மம் சொல்லிக் கொடுத்த நீதி. உங்களுக்கு பயமாக இருந்தால், வேறு மாவட்டங்களுக்குச் சென்று குடியேறுங்கள்.
கடந்த 25 ஆண்டுகளாக திமுக அதிமுக இரண்டு கட்சிகளையும் மாறி மாறி ஆட்சியில் அமர்த்தும் முட்டாள் மக்களுக்கு இதுவும் வேணும்; இன்னமும் வேணும்"

பெயரில்லா சொன்னது…

Democracynna ennannu ippathaan theriyuthu?!!!

பெயரில்லா சொன்னது…

ஜெயலலிதாவின் உண்மை முகம் தெரிந்துவிட்டது

ஆனால் மக்களின் அச்சம் சிறிதளவும் தீராத நிலையில் .

எந்த ஒரு தனி மனிதரையோ அல்லது பொதுச் சொத்தையோ அணு அளவுக்குகூட சேதம் விளைவிக்காமல்

என்னைப் பொறுத்தவரை போராட்டத்தின் இறுதிக்கட்டமாக இது இருக்கும் என்று கருதுகிறேன் .

கிளைமேக்ஸ் தொடங்கிவிட்டது ,வெற்றி கூடங்குளம் பகுதி பொதுமக்களுக்கா இல்லை அணு உலைக்கா என்பது விரைவில் தெரிய வரும் என நினைக்கிறேன் .,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,உன் காமெடிக்கு ஒரு அளவே இல்லியா பாலா...?....போர்வைய தூக்கி எறிஞ்சுட்டு போயி மூஞ்சிய கழுவுப்பா....சீக்கிரமா நனவுலகத்துக்கு வா...

பெயரில்லா சொன்னது…

the govt is fooling people about tsunami not being a threat to that area. How can they guarantee that it cannot rise above 20 feet. In Japan the tsunami wave rose up to a height of 40-45 feet. We are not capable of any safety measures or rescue measures unlike Japan. indian govt is anti-people and pro corruption.

பெயரில்லா சொன்னது…

@?????????

பெயரில்லா சொன்னது…

USA-ல PhD. முடிச்சிட்டு அங்கேயே செட்டில் ஆகிட்டு நிம்மதியா இருக்காம, ஊருல வந்து எல்லா மக்களோடும் நிலையான சந்தோஷம்னா என்ன என்று உணர்த்த முயலும் உதயகுமார் போன்றவர்களை எப்போது தான் மக்கள் புரிந்து கொள்வார்களோ? தெரியவில்லை! சம்பளம் வாங்கிக்கொண்டு தாங்கள் செய்வது தான் சரி என்று சொல்பவர்களையும் சேர்த்து காப்பாற்ற தானே இந்த போராட்டம்! ஒன்றும் புரியவில்லை!!

கேரளாக்காரன் சொன்னது…

Where is my comments

பெயரில்லா சொன்னது…

அது யாருப்பாஅது சுனாமி 40 அடி போச்சுன்னு உளருவது. 40 அடி அளவு தெரியுமா?

1 அடி 30 cm. அப்ப 40 அடி 1200 cm..12 மீட்டர். யோவ் விவரம் புரியாம அடிச்சு உடாதீங்க

பெயரில்லா சொன்னது…

உதயகுமாரு phdயாம். ஆகா இப்படி எல்லாம் ஆரம்பிச்சுடானுங்களா