அன்பின் உறைவிடமாய் இருந்து இன்றும் புதுவையில் ஆத்ம ஒளி வீசிக்கொண்டிருக்கும் ஸ்ரீ அன்னையை வேண்டி கங்கை அமரன் அவர்கள் இசையமைத்து பாடிய பாடல் இது .எத்தனை முறை கேட்டாலும் நெஞ்சை வருடும் இப்பாடலைக் கேட்டு மலர் போன்ற மனதைப் பெறுங்கள் .
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
வரம் தரும் அன்னை வணங்கினோம் உன்னையே
வரம் தரும் அன்னை வணங்கினோம் உன்னையே
மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே
பலர் போற்றி பாராட்டும் குணம் வேண்டும் தாயே
ஒரு நோயும் தீண்டாமல் அணை போடு தாயே
நதி காய நேராமல் நீரூற்று தாயே
நன்னிலம் பார்த்து நீயே
எளியோரை மகிழ்வாக்க வழி காட்டு தாயே
வலியோர்கள் வாட்டாமல் வகை காட்டு தாயே
என் வளமான தாயே
பசி தாகம் காணாமல் வயிறாக்கு தாயே
ரசிப்போர்கள் செவி தேடி இசை மூட்டு தாயே
இசை பாட்டு என்றென்றும் இனிப்பாக்கு தாயே -(மலர் போல)
புகழ் செல்வம் நலம் கல்வி குறைவின்றி வாழ
புவி மீது இறை ஞானம் எமை என்றும் ஆள
பொன் குறையாமல் வாழ
அருளோடு பொருள் பேத அறிவோடு ஞானம்
தெளிவோடு தினம் காணும் நிலை வேண்டும் வேண்டும்
அது திரளாக வேண்டும்
பல வீடு பல நாடு பல தேசம் என்று
உணராமல் வாழ்வோரை ஒன்றாக்கு தாயே
உறவோடு மகிழ்வோடு எமை மாற்று தாயே -(மலர் போல)
17 கருத்துகள்:
யார் எழுதியதென்று தெரியுமா பாலா?
யார் எழுதியதென்று தெரியுமா பாலா?
யார் எழுதி இருந்தாலும் அவர் கைக்கு தங்க மோதிரம் போடலாம்
தினம் காலை விஜய் டி.வி.யில் இந்தப் பாடலைப்போடுகிறார்கள் என நினைக்கிறேன்.
அருமையான பாடல்
கேட்டு மகிழ்ந்தோம்
அருமையான பாடலை பகிர்வாக்கித் தந்தமைக்கு
மனமாந்த நன்றி
Tha.ma 2
மனதுக்கு இனிமையான பாடல்
பகிர்ந்தமைக்கு நன்றிகள் நண்பரே.
@ரெவெரி இப்பாடலை எழுதியவரும் திரு கங்கை அமரன்தான்
வணக்கம் பாலா அண்ணா,
அம்மனின் பெருமைகளை அழகுறச் சொல்லும் ஓர் இனிய பாடலைப் பகிர்ந்திருக்கிறீங்க.
ரொம்ப நன்றி.
மென்மையான இசையும் கடைசி 3 வரிகளும் மனதில் பதிந்தது பாலா !
முத்தான வரிகள் அருமையான பகிர்வு .
விஜய டிவி யில் கலையில் ஒளி பரப்பப்படும் இந்தப் பாட்டு மனதை கொள்ளைகொள்ளும் பாட்டு. எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது.
அருமை.
நன்றி.
இசையும் கருத்தும் மிகவும் பொருத்தம்
நல்லபதிவு பாலா!
உடல் நலம் எப்படி? அறிய ஆவல்
புலவர் சா இராமாநுசம்
மிகவும் மகிழ்ச்சி.. மிக்க நன்றி :-)
திரு.கங்கைஅமரன் அவர்கள்
kadandha 10 aandugalaga indha padalai ketukondu irukiren yethanai murai ketalum mudhal murai ketu rasipathupol thonrum.. very nice song
கருத்துரையிடுக