25 ஜூலை 2012

இப்படியும் ஒரு மாமனிதர்!

கோவை ம.யோகநாதன். 
 
கோவையை சேர்ந்த பேருந்து நடத்துனரான இவர் கடந்த 25 வருடங்களில் ஒரு லட்சம் மரங்கள் நட்டு சாதனை தமிழராக வலம் வருகிறார். 
 
 
இவரின் சொந்த ஊர் மயிலாடுதுறை. கோவை அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வருகிறார் . 
 
மரக் கன்றுகளை நடுவதொடு விட்டுவிடாமல் ஒரு ஆண்டுவரை மரங்களை பாதுகாத்து, பராமரிக்கும் விதத்தையும் சொல்லி கொடுக்கிறார். சுதேசியாக வாழும் இவர் வெளிநாட்டு மரக் கன்றுகளை தொடுவதில்லை என்பதில் வைராக்கியம் உள்ளவர். தனது வருமானத்தில் பெரும் பகுதியை இந்த பசுமை வேள்விக்கே செலவிடுகிறார். மரம் வெட்டும் கொடுமையை எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தியுள்ளார்.

வார விடுமுறையான ஒவ்வொரு திங்கட்கிழமையும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் புகைப்படக்காட்சி(Slide Show) நடத்தி விழிப்புணர்வு புரட்சி செய்து வருகிறார். 
 
இதுவரை 3000 பள்ளிகளுக்கு மேல் விஞ்ஞான விளக்கப் படக் காட்சி நடத்தி இருக்கிறார். 
 
 
இவரின் இந்த சேவைக்காக, தமிழக அரசு, 2008ல் "சுற்றுச்சூழல் செயல் வீரர் விருது" , குடியரசு துணைத் தலைவரிடமிருந்து, 2010ல் "பசுமைப் போராளி விருது", "சிறந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் விருது' உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.

ஒவ்வொரு மாணவரும், தன் பிறந்த நாளன்று, ஒரு மரக்கன்றை நட்டு, பராமரித்து வளர்த்து வரும் வகையில், "உயிர் வாழ ஒரு மரம்'”என்ற திட்டத்தை உருவாக்கி, இதுவரை 15 ஆயிரத்துக்கும் மேலான பள்ளி, கல்லூரி மாணவர்களை சேர்ந்துள்ளார். 
 
 
இவரின் சேவையை கண்டு வெளிநாட்டவர் ஒருவர் இவருக்காக ஒரு இணையதளம்  இலவசமாக அமைத்து தந்திருக்கிறார்.
 
தகவல் உதவி: திரு சண்முக சுந்தரம்-முகநூல் 

படங்கள் உதவி: கூகுள் 


12 கருத்துகள்:

Unknown சொன்னது…

இவரால தாங்க மழை பெயுது .. நல்ல பதிவு தொடருங்கள் சகோ

MARI The Great சொன்னது…

உதாரண புருஷர்கள்!

அருமையான பதிவு!

மகேந்திரன் சொன்னது…

வாழிய நீ எம்மான்..
உம்மை சிறிதளவேனும்
நாங்கள் பின்தொடர
முயற்சி செய்கிறோம்..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

மணிதர்களின் மாணிக்கம் என்று சொல்கிறேன்...

மரங்கள் போல் இவரும் வாழட்டும் பல்லாண்டு...

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பசுமை வேள்விக்ளுக்குப் பாராட்டுக்கள்!

valaiyakam சொன்னது…

8 ஆண்டுகளுக்கு முன்னர் நேரில் இவரை சந்தித்து பேசியுள்ளேன்...

அருமையான நபர்...

வணக்கம் உறவே
உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
http://www.valaiyakam.com/

முகநூல் பயனர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
http://www.valaiyakam.com/page.php?page=votetools

நன்றி

வலையகம்
http://www.valaiyakam.com/

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

மாமனிதருக்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
நன்றி.. (த.ம.4)
திண்டுக்கல் தனபாலன்

rajamelaiyur சொன்னது…

நல்ல மனிதரை பற்றி சொல்லி உள்ளீர்கள் ... எண்கள் ஊரை சேர்ந்தவர் என்பதில் எங்களுக்கு பெருமை

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இப்படிப்பட்டவர்களை நாம் தலையில் வைத்து கொண்டாடவேண்டும்...!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இவர் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துகிறேன்...!

NSK சொன்னது…

உண்மையான கதாநாயகனுக்கு பாராட்டுகள், பதிய வேண்டிய பதிவு வாழ்த்துக்கள்.

”தளிர் சுரேஷ்” சொன்னது…

மரம் வளர்க்கும் மாமனிதர் அறிமுகம்! அருமையாக இருந்தது! அவருக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்!