31 ஜூலை 2012

பாக்கெட் குடிநீர் அருந்துபவர்களா நீங்கள்....

உலகில் பரவும் பெரும்பாலான நோய்கள் தண்ணீர் மூலமாகத்தான் பரவுகின்றன.கண்ணுக்குத் தெரியாத பல நோய்க் கிருமிகள் நிறைந்த நீரை அருந்துவதால் பல்வேறு  நோய்களுக்கு ஆளாகி பலர் இன்னல் படுகின்றனர்.

தற்காலத்தில் பிரயாணங்களின் போது பலர் பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைக்கப் பட்டு விற்கப் படும் குடிநீரை வாங்கி அருந்துகின்றனர். பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் பல்வேறு அரசு தரச் சான்று முத்திரைகளெல்லாம் பொறிக்கப் பட்டிருக்கும்.ஆனால் அவை சுகாதாரமானதாகவோ தரமானதாகவோ இருக்கும் என்று நீங்கள் நம்பி அடிக்கடி அதை வாங்கி அருந்தினால் உங்களுக்கு பேராபத்து காத்திருக்கிறது.குடி நீர் பிளாஸ்டிக் கவரில்  அடைக்கப் பட்டாலே ஆபத்துதான்...அதிலும் சுகாதாரமற்ற நீர் அடைக்கப் பட்டால் ???


இரண்டு நாட்களுக்கு முன்பாக எனது நண்பர் திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் சென்றிருக்கிறார்.அங்கு தாகத்தை தணிக்கும் நிமித்தம் ஒரு பெட்டிக் கடையில் பாக்கெட் குடிநீர் வாங்கியிருக்கிறார் .

அதை குடிக்க முனைகையில் அந்த நீரினுள் ஒரு கொசு இறந்து கிடப்பதைப் பார்த்திருக்கிறார்.அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக அந்த பாக்கெட்டை தன்னுடன் பத்திரமாக எடுத்துச் சென்று சுகாதார அலுவலர்களுக்கு தகவல் கொடுத்திருக்கிறார். 

 
தண்ணீர் பாக்கெட்டினுள் கொசு 



சம்மந்தப் பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா  என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

14 கருத்துகள்:

rajamelaiyur சொன்னது…

பல பேருந்து நிலையங்களில் விற்கும் தண்ணீர் இந்த வகைதான்

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இதைவிட கொடுமையெல்லாம் நடக்குதுங்க...


அவங்கள என்ன பண்றதுன்னு தெரியல...

அம்பாளடியாள் சொன்னது…

பலரும் அறிய வேண்டிய தகவல் இது .மிக்க நன்றி பகிர்வுக்கு
தொடர வாழ்த்துக்கள் .

Yaathoramani.blogspot.com சொன்னது…

அருமையான எச்சரிக்கைப் பதிவு
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்

suvanappiriyan சொன்னது…

அருமையான எச்சரிக்கைப் பதிவு

கோவி சொன்னது…

கேள்விபட்டிருக்கிறேன்..

கோவி சொன்னது…

கேள்விபட்டிருக்கிறேன்..

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள். வாழ்த்துக்கள்.
நன்றி.
(த.ம. 5)



பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)

அமர பாரதி சொன்னது…

//சம்மந்தப் பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா  என்பது இனிமேல்தான் தெரிய வரும்.// நிச்சயம் எடுக்கப் படாது.  ஆனால் கொசுவின் அளவுக்கு ஏற்ப லஞ்சம் வசூலிக்கப் படும். வாங்கும் பணத்துக்கு ஏற்ப நண்பரின் முகவரியும் போட்டுக் கொடுக்கப் படும்.

ANBUTHIL சொன்னது…

பயனுள்ள தகவலை தெரிவித்த நண்பனுக்கு நன்றி

அருணா செல்வம் சொன்னது…

நல்ல தகவல்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அய்யய்யோ என்னைய்யா கல்லை தூக்கி தலையில போடுறீங்க....!

ஆண்டவா காப்பாத்துய்யா....!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

அறிந்துகொள்ள வேண்டிய அவசியத்தகவல் .. பகிர்வுக்கு நன்றிகள்..

”தளிர் சுரேஷ்” சொன்னது…

நல்ல விழிப்புணர்வு பதிவு! நான் பெரும்பாலும் இந்த தண்ணீர் பாக்கெட்டுகள் வாங்கி அருந்துவதில்லை!