இன்னிசை நிகழ்ச்சிகளில் நாம் பார்த்திருப்போம், வாத்தியக் கருவிகள் அதிகம் இல்லாமலேயே பின்னணி இசை அருமையாக ஒலிக்கும்.
குறைந்த பட்ஜெட்டில் இசை நிகழ்சிகள் நடத்துபவர்கள் karaoke CD மூலமாக இசையை ஒலிக்க செய்கிறார்கள். பாடகர்கள் பாடலை பாடுகிறார்கள்.
இது போன்ற karaoke CD க்களை நமக்கு பிடித்த பாடல்களைக் கொண்டு நாமே உருவாக்க ஒரு அருமையான இலவச மென்பொருள் உள்ளது.
Audacity என்னும் இம்மென்பொருளை தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள்.
பின்பு இசையை பிரிக்க வேண்டிய பாடலை Audacity ல் திறந்துகொள்ளுங்கள்.
அதில் படத்தில் காண்பிக்கப்பட்டுள்ளவாறு Effect மெனுவில் Vocal Remover என்பதை தேர்வுசெய்து பாடலில் உள்ள குரலை நீக்கிவிடலாம். பின்னர் File மெனுவில் Export ஐ அழுத்தி இசையை சேமித்துக்கொள்ளலாம்.
இம்மென்பொருளில் பாடலிலிருந்து இரைச்சலை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளன.
பயன்படுத்திப்பாருங்கள் ...இது எத்தனை அருமையான இலவச மென்பொருள் என்பது தெரியும்.
4 கருத்துகள்:
பயனுள்ள மென்பொருள் அறிமுகம் நண்பரே.
இதையும் பயன்படுத்திப் பார்க்கிறேன்....
பயனுள்ள பகிர்வுகளுக்கு நன்றிகள்..
ரொம்ப நாளை தேடிகொண்டிருதேன் .. தகவலுக்கு நன்றி
கருத்துரையிடுக