17 செப்டம்பர் 2011

வெற்றியை நோக்கி ஒரு மரண பயணம்

தமிழகத்தை பேரழிவிலிருந்து காப்பாற்றும் முயற்சியான கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வலியுறுத்தி 127 பேர் மேற்கொண்டுள்ள காலவரையற்ற உண்ணாவிரதம் இன்று 7  வது நாளை எட்டியுள்ளது .

ஒவ்வொரு நாளும் 20000 க்கும் அதிகமான தமிழ் மக்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு எங்களை ஊக்கப் படுத்தி வருகிறார்கள் .

எங்களில் பலருடைய உடல்நிலை கவலைக்கிடமாகியுள்ளபோதிலும் எப்பாடு பட்டேனும் அணு உலையை மூட வழி கிடைத்தால் மட்டுமே பட்டினிப் போரை முடிவுக்கு கொண்டு வருவதென்பதில் உறுதியாக உள்ளோம் .

எங்களின் இந்த முயற்சிக்கு பதிவுலகம் மிகப் பெரிய அளவில் ஆதரவளித்து வருவது மிகவும் உற்சாகமளித்து வருகிறது .ஆதரவளித்து வரும் சக பதிவர்கள் அனைவருக்கும் எண்ணிலடங்கா நன்றிகள் .

அலைப்பேசியில் பல பதிவர்கள் தொடர்புகொண்டு வாழ்த்தியது ஆனந்தமளித்தது .

விடமாட்டோம் போராட்டத்தை வெற்றி கிட்டும் வரை !

பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் வேறு ஊர்களிலிருந்து நடந்துவரும் மக்கள்
                              போராட்டத்தை ஆதரித்த புரட்சிப் புயல் 


                                                      பால பிரஜாபதி அடிகளார்
                                                 வணிகர்சங்க தலைவர் வெள்ளையன் 
                       செண்டிமேன்டாகப் பேசி அழ வைத்த பள்ளி மாணவி


                                            அணி திரண்ட பள்ளி மாணவர்கள் 


                                                            மயக்கமடைந்தவர்

14 செப்டம்பர் 2011

சாகும் வரை உண்ணாவிரதம் day-4

அன்பு  நண்பர்களே,

தமிழகத்தை அழிவிலிருந்து காக்க 127  பேர் சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளோம் .

இன்று நான்காவது நாளை எட்டியுள்ளது .


உண்ணாவிரதத்தின் மூன்றாம் நாள் படங்கள் கீழே .





ஆதரவளித்து வரும் பதிவர்களுக்கும் தமிழக மக்களுக்கும் நன்றி .

13 செப்டம்பர் 2011

தமிழர்களே இந்த 127 உயிர்களை காப்பாற்றுங்கள்

அன்புள்ளம் கொண்ட தமிழ் உடன்பிறப்புகளே 

தென் தமிழகத்தை அழிவிலிருந்து காக்கும்பொருட்டு கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி திருநெல்வேலி மாவட்டத்திலே 20 பெண்கள் உட்பட 127 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறோம் .

எங்களுக்கு ஆதவராக தினமும் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் எங்களுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

நேற்று புரட்ச்சிப்புயல் வைகோ உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டார் .


நாளை செந்தமிழர் சீமான் கலந்துகொள்கிறார் .


எனினும் இன்று எங்கள் காலவரையற்ற உண்ணாவிரதம் மூன்று நாட்களை கடக்கின்ற நிலையிலும் தமிழகஅரசு சார்பாகவோ மத்திய அரசு சார்பாகவோ யாரும் எங்களை அணுகவில்லை .

ஒருவேளை அணு உலையை காப்பாற்றுவதற்காக இந்த 127 பேரும் இறந்தாலும் பரவாயில்லை என்றிந்த அரசுகள் நினைக்கிறதோ என்று எண்ணுகிறோம் .


எனவே தமிழுணர்வாளர்கள் அனைவரும் எவ்வாறாவது அரசுக்கு இப்பிரச்சினையை கொண்டு செல்லுமாறு வணக்கத்துடன் கேட்டுக்கொள்கிறேன் .

இப்போராடத்திற்கு ஊக்கமளித்துக் கொண்டிருக்கும் பதிவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி .

உண்ணாவிரத மேடையிலிருந்து கூடல்பாலா .

அவசரம்: SAVE 127 LIVES

DEAR FRIENDS WE ARE 127 PEOPLE INCLUDING 20 WOMEN CONTINUING AN INDEFINITE FASTING FOR THIRD DAY FOR THE CLOSURE OF KOODANKULAM NUCLEAR POWER PLANT .

TEN THOUSANDS OF PEOPLE SUPPORTING US .BUT THERE IS NO RESPONSE FROM THE INDIAN GOVERNMENT .

MANY OF US STRANGE TO FASTING.AS IT IS THIRD DAY MANY PEOPLE OF US ARE SO TIRED .

IF IT IS CONTINUING LIKE THIS IT WILL MAKE DANGER FOR MANY LIVES.PLEASE FORWARD THIS TO SAVE OUR LIVES

12 செப்டம்பர் 2011

தமிழ் நாடு :அணு உலைகளை மூடக் கோரி 10000 பேர் உண்ணாவிரதம் .

கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வலியுறுத்தி நேற்று (11 -9 -2011 ) முதல் நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் . மேலும் 200 க்கும் அதிகமானோர் சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடு பட்டுள்ளனர் . அண்ணா ஹசாரே உண்ணாவிரதத்தை விட பெரிதாக தமிழகத்தில் நடக்கும் இந்த உண்ணாவிரதத்திற்கு தமிழ் உள்ளங்கள் அனைவரும் ஆதரவு தர வேண்டுகிறேன் . சாகும் வரை உண்ணாவிரதத்தில் நானும் ஈடுபட்டுள்ளேன் .உங்கள் ஆதரவு இருந்தால் எங்கள் கோரிக்கை எளிதாக நிறைவேறும் . இயன்றால் மீண்டும் சந்திப்போம் நண்பர்களே .