கூடங்குளம் அணு மின் நிலையம் மக்கள் போராட்டத்தையடுத்து தற்காலிகமாக
மூடப்பட்டுள்ளது .
இந்நிலையில் மாநில அரசின் வல்லுநர் குழு இரு தினங்களுக்கு
முன் கூடங்குளம் வந்தது .ஆனால் மக்களை சந்திக்காமல் அணு உலையை மட்டும்
சுற்றி பார்த்துவிட்டு அணு உலைக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டது .
இது
கூடங்குளம் பகுதி மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.இதன்
காரணமாக நேற்று மாலை அவசரமாக அணு உலை போராட்டக்குழுவினர் ஆலோசனை நடத்தினர்
.
அதன்படி தமிழக அரசின் வல்லுநர் குழுவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும்
,கூடங்குளம் அணு உலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் நேற்று (20 -2 -2012
)நள்ளிரவு 12 மணியிலிருந்து 72 மணி நேரம் தொடர் உண்ணாவிரதம்
தொடங்கப்பட்டுள்ளது .
கூடங்குளம் பகுதியைச் சார்ந்த 107 பேர் இந்த தொடர்
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களுக்கு ஆதரவாக இன்று 10000 க்கும்
அதிகமானோர் கலந்துகொண்டனர்.
உண்ணாவிரதத்தில் மாநில நிபுணர் குழு மக்களை
சந்திக்க வேண்டும் எனவும் அவ்வாறு சந்திக்காமல் ஒரு தலைப் பட்சமாக
ஆய்வறிக்கையை வெளியிட்டால் அதை 50000 க்கும் மேற்பட்டோர் கூடி தீயிட்டு
கொழுத்துவோம் என்று போராட்டக்குழுவினர் தெரிவித்தனர்.