20 பிப்ரவரி 2012

இடிந்தகரையில் இன்றிரவு முதல் 72 மணி நேரம் உண்ணாவிரதம் .

கூடங்குளம் அணு உலையை மூடக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன .

இந்நிலையில் நேற்று முன் தினம் கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு வந்த தமிழக அரசின் நிபுணர் குழுவினர்  மூன்று மணி நேரம் அணு உலையை பார்வையிட்டு அணு உலை பாதுகாப்பாக உள்ளது என்று கூறினர்.

கூடங்குளம் பகுதி பொதுமக்களின் கருத்தை கேட்கவேண்டும் என்று போராட்டக்குழுவினர் விடுத்த கோரிக்கையை அவர்கள் ஏற்க மறுத்து விட்டனர். 

இதைக் கண்டிக்கும் விதமாகவும் ,கூடங்குளம் அணு உலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் இன்றிரவு 12  மணி முதல் தொடர்ந்து 72  மணி நேரம் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக போராட்டக்குழுவினர் கூறியுள்ளனர்.

முன்னதாக இன்று காலை பொதுமக்கள் அணு உலையை முற்றுகையிடக் கூடும் என்ற நோக்கில் அணு உலைக்கு அருகில் கிட்டத்தட்ட 1000  போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் .பொதுமக்களை கைது செய்து அடைத்து வைக்க திருமண மண்டபங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன .ஆனால் இன்று அணு உலைக்கு அருகில் பொதுமக்கள் யாரும் செல்லவில்லை.

கூடங்குளம் பிரச்சினையில் தற்போது தமிழக அரசுக்கும் போராட்டக் காரர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் கூடங்குளம் போராட்டம் உச்ச கட்ட பரபரப்பை எட்டியுள்ளது .

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

நல்ல தகவல். தமிழக அரசு இப்போதாவது நடவடிக்கை எடுக்க துணிந்தத நல்ல செய்தி. கூடிய விரைவில் தேச துரோகிளான உதய குமார் கூட்டம் மத்திய சிறையில் காலத்தை கழிக்கும் நல் நாள் வரட்டும்

பெயரில்லா சொன்னது…

ஜெயின் முகமூடி கொஞ்ச கொஞ்சமாய் கிழிகிறது...

இன்குலாப் ஜிந்தாபாத்...

பெயரில்லா = Spineless

பெயரில்லா சொன்னது…

பல்வேறு நோக்கங்கள் கொண்ட தனி மனிதர்களால் தவறாக வழிநடத்தப்படும் இந்த மக்கள் கூட்டம் உண்மையை உணராமல் ஆட்டு மந்தைகளாய் போராடுகின்றனர். அணு சக்திக்கு எதிரான போராட்டம் என்ற போர்வையில் மறைத்து வைக்கப்பட்ட சதித்திட்டங்கள் உள்ளே நெளிகின்றன.

அணு சக்தி எதிர்ப்பு என்பதை விட ரஷ்ய உதவியுடனான கூடங்குளத்தை மூடியாக வேண்டும் என்கிற ஒற்றை நோக்கமே இவர்களுக்கு பிரதானமாக இருக்கிறது. உதயகுமார் எப்படியாவது உச்ச கட்ட ஆணவத்துடன் பேசி இந்த அரசாங்கங்களைத் தூண்டி பிரச்னையை வக்கிரமாகத் திருப்பி விட இதுவரை முயற்சித்தார். இதுவரை மிகவும் சரியாக இந்த விஷயத்தைத் தமிழக அரசு கையாண்டதை பாராட்ட வேண்டும். இனி போராட்ட குழுவினர் அமைதி காப்பதே நல்லது . உதயகுமார் என்ற மனிதரின் பின்னால் இருக்கும் சர்வதேச சதிகளை உணர்ந்து நமது நாட்டின் முன்னேற்றத்துக்காக மக்கள் அமைதியாக வேண்டும்

போராட்டக்குழுவினர் நினைப்பு எப்படியோ, கூடல் பாலா போன்றவர்கள் எண்ணம் எப்படியோ ஆனால் ஆளும் கட்சியின் எண்ணம் சிறுபான்மை கிருத்துவ மக்கள் நமக்கு எதிராகப்போய் விடக்கூடாது என்பது தான். அதனால் தான் இந்த உதயகுமாரின் ஆணவப் பேச்சுக்கள் கூட மக்களின் குரலாக மாறி விட்டது ..ஆனால் எதற்கும் ஒரு அளவு உண்டல்லவா...நாட்டின் முன்னேற்றத்தைக்காவு கொடுத்து ஓட்டு வங்கியைக் காப்பாற்றுவது ஒரு எல்லையை தாண்டிப் போகும் போது என்ன செய்ய முடியும் ?

மக்கள் சக்தி என்பது ஒரு குழுவின், மதத்தின், இனத்தின் ஆதிக்க எண்ணத்தை வெளிப்படுத்த மட்டுமே ஒன்று கூடக்கூடாது. துரதிர்ஷ்ட வசமாக இடிந்தகரையில் அதுதான் நடக்கிறது.

Prabu Krishna சொன்னது…

தொடர்ந்து போராடுவோம் சகோ.