கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி கடந்த ஒரு மாதமாக கூடங்குளம் பகுதியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கடந்த ஒரு வாரமாக இடிந்தகரையில் காலவரையற்ற உண்ணாவிரதமும் கூடங்குளம் அணு மின் நிலையம் முற்றுகைப் போராட்டமும் நடந்தது .
ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரு வாரமாக இரவு பகலாக அணு மின் நிலையத்தை முற்றுகையிட்டிருந்ததால் பணியாளர்கள் யாரும் அணுமின் நிலையத்திற்குள் நுழைய முடியவில்லை .
அதனைத் தொடர்ந்து இனியும் இங்கிருந்தால் வேலைக்காகாதென்று எண்ணி அணு மின் நிலையத்தில் பணியாற்றிய ஆயிரக்கணக்கான வெளிமாநில ஒப்பந்தப் பணியாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர் .
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு இடிந்தகரையில் 8 வது நாளாக நடைபெற்று வந்த 106 பேரின் காலவரையற்ற உண்ணாவிரதம் முடிவுக்கு கொண்டு வரப் பட்டது .அணு உலை முற்றுகைப் போராட்டமும் தற்காலிகமாக நிறுத்தப் பட்டது .எனினும்
நாளையிலிருந்து இடிந்தகரையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உத்தேசிக்கப் பட்டுள்ளது .மேலும் இனிமேலும் அணு உலையில் பணிகளைத் தொடர பணியாளர்கள் உள்ளே நுழைந்தால் மீண்டும் அணு உலையை முற்றுகையிடவும் தீர்மானிக்கப்ப்பட்டுள்ளது.
மேற்படி முடிவுகள் நேற்று கூடங்குளத்தில் நடைபெற்ற அனைத்து கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்களின் ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டன .
இதனிடையே இன்று தமிழர் தேசிய கூட்டமைப்பின் தலைவர் திரு பழ நெடுமாறன் அவர்கள் இடிந்தகரை வந்து பொதுமக்களை சந்தித்து போராட்டத்தை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார் .
5 கருத்துகள்:
இந்தப் போராட்டங்களில் கலந்து கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் உங்கள் செய்திகள் மனதை இனிக்க வைக்கிறது.
நல்லதே நடக்கட்டும்.
கரங்கள் வலுப்படட்டும்.
முற்றுகையிடுவது என எடுத்த முடிவு நன்று.
மக்கள் சக்தி வெற்றி பெறட்டும்.
இதில் நீங்கள் குறிப்பிட மறந்த விஷயம், வெளிமாநில ஒப்பந்த தொழிலாளிகளுக்கு இரண்டு மாத சம்பளம் தரப் படவில்லையாம்.. அவர்கள் வெளியேற இதுவும் ஒரு காரணம்... போராட்டத்தின் வீரியம் கண்டு ஒப்பந்ததாரர் சம்பளம் கொடுப்பதும் ஒன்று தான் கொடுக்காமல் இருப்பதும் ஒன்று தான் என்று முடிவெடுத்து விட்டார் போலும்
@suryajeeva சரியாகச் சொன்னீர்கள் ....
கருத்துரையிடுக