கடந்த 21 ம் தேதி ஒரு தமிழ் தின நாளிதழில் இந்திய அணு மின் கழகம் ஓர் அறிக்கை கொடுத்துள்ளது .அதில் உலகின் மிக மோசமான அணு விபத்துக்கள் பற்றி விளக்கம் கொடுத்துள்ளது .
இந்திய அணு மின் கழகம் : 1979 ல் அமெரிக்காவிலுள்ள திரீ மைல் தீவில் ஏற்பட்ட அணு விபத்தில் கதிர் வீச்சு ஏற்படவில்லை .
இப்ப நாம கேக்குறது : திரீ மைல் தீவில் ஏற்பட்ட அணு விபத்தில் கதிர் வீச்சு கலந்த 40000 கேலோன் நீர் ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது .அதனைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்த 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் வெளியேற்றப் பட்டுள்ளார்கள் .இவ்விபத்தை தொடர்ந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட அமெரிக்க அணுசக்தி திட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன .( visit -http://en.wikipedia.org/wiki/Three_Mile_Island_accident) .உங்கள் கருத்தை அமெரிக்க அரசாங்கத்திடம் கூறி அவர்கள் அச்சத்தை அகற்றுங்கள் .
இந்திய அணு மின் கழகம் : செர்நோபில் அணு விபத்தால் 56 தீயணைப்பு வீரர்கள் மட்டுமே இறந்தனர் .விபத்தால் மறைமுகமாக கேன்சர் ஏற்பட்டுள்ளது.இது அனல் மின் நிலையங்களால் ஏற்படும் பாதிப்பை விட குறைவுதான் .
இப்ப நாம கேக்குறது : செர்நோபில் விபத்தால் 4000 பேர் இறந்ததாகவும் லட்சக் கணக்கானோர் பல்வேறு நோய்களால் பாதிக்கப் பட்டதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது (visit:http://www.who.int/mediacentre/news/releases/2005/pr38/en/index.html).என்ன சார் பூசணிக்காய் தோட்டத்தையே சோத்துக்குள்ள மறைக்கிறீங்க .
இந்திய அணு மின் கழகம் : சுனாமியின் போது ஜப்பான் அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் தொழில் நுட்ப பிரச்சினையில் வேதியல் கோளாறு ஏற்பட்டதே தவிர அணு உலை வெடிக்கவில்லை .
இப்ப நாம கேக்குறது : அப்படீன்னா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜப்பான் விபத்து கிராபிக்ஸா .
கடைசியாக நாம் கூறிக்கொள்வது என்னவென்றால் இப்படி புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடும் இந்திய அணுமின் கழகம் இந்தியாவில் அணு உலை வெடித்தால் அணு உலை வெடிக்கவில்லை தீபாவளிப் பட்டாசுதான் வெடித்தது என்று நம்மை ஏமாற்றாது என்பதற்கு என்ன உத்தரவாதம் .
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !
31 கருத்துகள்:
முதல் அணுகுண்டு....
மெத்த படிச்சவனே என்கூட சண்டை போடுறான், அணுமின் நிலையம் வேணும்னு அரசாங்கத்தை கேட்கணுமா, கண்டிப்பா தீபாவளி பட்டாசு மட்டுமில்லை ஊசி வெடின்னு சொன்னாலும் ஆச்சர்யம் இல்லை...
ஊசிவெடி ...
//என்ன சார் பூசணிக்காய் தோட்டத்தையே சோத்துக்குள்ள மறைக்கிறீங்க . //
சிரித்து கொண்டிருக்கிறேன், எப்பொழுது நிற்கும் என்று தெரியவில்லை...
really super
@MANO நாஞ்சில் மனோ\\\முதல் அணுகுண்டு....\\\கொஞ்சம் இருங்க காதை மூடிகிடுறேன்
@MANO நாஞ்சில் மனோ \\\மெத்த படிச்சவனே என்கூட சண்டை போடுறான்\\\நானும் நிறைய பேரிடம் அனுபவப் பட்டிருக்கிறேன் .இவர்களிடம் சக்தியை வீணாக்கக் கூடாது ...
@!* வேடந்தாங்கல் - கருன் *! தைரியமா பத்த வைங்க
@suryajeevaசிரிப்பு ரொம்ப அவசியம் தோழர்
சீக்கீரம் ஒரு தீர்வு வரணும்...
தங்களுக்கு என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
என்ன வேணா சொல்லுவாங்க.
கேட்கும் எல்லா தகவல்களையும் கொடுக்க இணையக் கடவுள்(!) இருக்கும் போது, நம்மை இன்னும் கற்காலத்து மனிதர்களாகவே அரசு நினைப்பது வேடிக்கையாக உள்ளது.
//சுனாமியின் போது ஜப்பான் அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் தொழில் நுட்ப பிரச்சினையில் வேதியல் கோளாறு ஏற்பட்டதே தவிர அணு உலை வெடிக்கவில்லை . //
இவர்கள் எல்லாம் எப்போதுதான் திருந்தப்போகிறார்களோ..
பகிர்விற்க்கு நன்றி நண்பரே.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
நட்புடன்
சம்பத்குமார்
மனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள்
\\அணு உலை வெடிக்கவில்லை தீபாவளிப் பட்டாசுதான் வெடித்தது என்று நம்மை ஏமாற்றாது என்பதற்கு என்ன உத்தரவாதம் .\\ Haa...haa..haa...
அதுவும் போட்டு வெடிதான் வெடிச்சுதும்பாங்க!
தீபஒளிதிரு நாள் வாழ்த்துக்கள்!
கூடல் பாலா,
நீங்களும் அந்த மணல் மாஃபியா அல்லது அணு உலை கோஷ்டியா? ஏதோ ஒன்று இருந்துவிட்டு போகட்டும். நிங்க பேசுறதும் காமெடி தானே!
இப்போ அண்ணன் தம்பி ரெண்டு பேர் அதாவது அண்ணன் ஒருத்தன் தம்பி ஒருத்தன் எனவே 1+1= 2 மட்டுமே. ஓகே. ஒரே ஒரு ஆள் மட்டும் வந்து முதல் நாள் அண்ணனை அடிச்சப்போ தம்பி சும்மா வேடிக்கைப்பார்த்தானாம், அப்புறம் அடுத்த நாள் அவனே வந்து தம்பியவும் அடிச்சுட்டு போனான்.
உடனே தம்பி ஏனடா உனக்கும் எங்க அண்ணனுக்கும் ஏதோ பிரச்சினை அவனை அடிச்ச ஓகே என்னை ஏன் இப்போ அடிச்சனு கேட்டான், நேத்து உங்க அண்ணனை அடிச்சப்போ நீ வேடிக்கைப்பார்த்த , அப்போ இன்னிக்கு உன்னைஅடிச்சா உங்க அண்ணனும் வேடிக்கைதான் பார்ப்பான் அதான் தெகிரியமா அடிச்சேன் சும்மா டைம் பாஸுக்குனு சொன்னானாம்.
கல்ப்பாக்கம்...கல்பாக்கம்னு ஒரு ஊருல கூடங்குளத்துக்கு முன்னாடியே அணு உலை அமைச்சுட்டாங்களாம், அப்போ யாருமே எதுமே சொல்லலையாம், அது ஆரம்பிச்சு ரொம்ப நாள் நல்லாவே ஓடிச்சாம் அப்பக்கூட அதை மூட சொல்லி யாரும் போராடலையாம்,இன்னிக்கும் ஓடுதாம், எதிர்ப்பே இல்லாத இந்த மாநிலத்துல இன்னொரு அணு உலை போடலாம்னு அரசாங்கம் கூடாங்குளம் வந்துச்சாம் கதை புரியுதா?
அண்ணே, என்னண்ணே செய்றது... நீங்க சொல்றது அரசாங்க காதுல விழல... பெரிய அணுகுண்டு ஒண்ணை போடுங்க...
இது போன்ற கருத்துக்களை அள்ளி வீசும் அல்லகைகள் மற்றும் அணுஉலை அமைப்பதை ஆதரித்து பேசும் அனைவருக்கும் அதானால் வரும் ஆபத்து தெரியும். அப்துல் கலம் போன்ற விளம்பர விரும்பி கோமாளிகள், பத்து நாள் கழித்து கருத்து கூறுகிறேன் என்று பம்முவதும் நாம் பார்க்கிறோம். ஆனால், அவர்கள் நேரில் பாதிக்க படாத வரை இது போல நொள்ள தனமாக பேசுவார்கள். பார்லிமெண்டின் அருகில் ஒரு அணுஉலை அமைத்து வட இந்தியாவின் மின்தேவையை பூர்த்தி செய்தால் என்ன? மேலும், இதில் வரும் மின்சாரம் தமிழ் நாட்டுக்கு என்றா நினைகிறீர்கள்?
இலங்கைக்கும் மற்ற மாநிலங்களுக்கும் தான் போகபோகுது. இப்போவே, நெய்வேலியின் மின்சாரத்தில் பெரும்பகுதி வேறு மாநிலங்களுக்குதான் செல்கிறது (அனால் அந்த மாநிலங்கள் நமக்கு தண்ணீர் தர மாட்டார்கள்). அவ்வளவு ஏன்? கல்பாக்கம் சுற்றுபுறத்தில் எவ்வளவு புற்றுநோய் பாதிப்பு என்பது அனைவருக்கும் தெரியும். அரசாங்க புள்ளி விபரங்களே இருக்கிறது. இந்த உலையால் வரும் மின்சாரத்தால் பலனடைய போகும் வர்த்தக மாபியாக்கள் இருக்கும் வரை எது போன்ற அபத்தமான கருத்துக்கள் வரத்தான் செய்யும்.
பார்த்துக்கொண்டே இருங்கள். அணு கதிர் வீச்சு உடலுக்கு நல்லது. மனிதர்களின் ஆயுளை நீடிக்கும், எந்த நோயையும் அணுக விடாது என்று கூடிய விரைவில் தொலைகாட்சி/வானொலி விளம்பரம் செய்வார்கள், அரசு சார்பில். பார்க்கலாம் கதை எவளவு துரம்போகுது என.
வணக்கம் அண்ணே,
நலமா?
தம் சுய இலாபங்களுக்காய் மக்கள் வாழ்க்கையினை அடமானம் வைத்துப் பிழைப்போர் பற்றிய காமெடி கலந்த சாட்டையடிப் பதிவு...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய இன்பத் தீபத் திருநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்
அப்படீன்னா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜப்பான் விபத்து கிராபிக்ஸா .//
ஹா ஹா...
தங்களுக்கு, தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா... சந்தோசமும் வளமும் பெருகட்டும்...
அருமையான படைப்பு.
என் இனிய
அன்பின் நண்பனுக்கு .
இனிய தீபாவளி நல்
வாழ்த்துக்கள் .
அன்பின் .
"யானைக்குட்டி "
ஞானேந்திரன்
Happy dewali sago
அன்பு சகோ .. வணக்கம் ,
தங்களின் கட்டுரையும் கேள்விகளும் படித்தேன் .
// அதனைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்த 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் வெளியேற்றப் பட்டுள்ளார்கள்//
நீங்கள் குறிப்பிட்ட வலைத்தளத்தை பார்த்தேன் . அந்த வலைப்பகுதியில் தெளிவாக எழுதப்படிருக்கிற காரியங்களை நான் ஒருவிசை இங்கு சொல்லி விடுகிறேன் . மார்ச் 30 , 1979 ம் வருடம் 20 மைல் சுற்றளவில் இருந்த சுமார் 140000 ஜனங்கள் தாங்களாகவே வெளியேறினார்கள் ( அச்சத்தின காரணமாக ). மீதம் 663500 பேர் அதே இடத்தில தங்கி இருந்தார்கள் . 1979 வருடம் ஏப்ரல் மாததில் தாங்களாக வெளியேறிய ஜனங்கள் தங்களது இடத்திற்கு திரும்பினார்கள் ( அச்சம் நீங்கி ). அமெரிக்காவின் 50 எதிர்கால அணுமின் நிலைய திட்டங்கள் நிறுத்தப்பட்டது உண்மை தான் . ஆனால் அந்த சமயத்தில் கட்டப்பட்டு கொண்டு இருந்து அணுமின் நிலையங்களை ( 53 Projects ) அவர்கள் கட்டிமுடித்து இயக்க ஆரம்பித்தார்கள் என்ற உண்மையை தாங்கள் மறைத்து விடீர்கள் . மாத்திரமல்ல அமெரிக்காவின் எதிர்கால அணுமின் திட்டங்கள் இந்த வலைப்பதிவில் விவரிக்கப்பட்டுள்ளது . http://www.world-nuclear.org/info/inf41.html
//இந்திய அணு மின் கழகம் : சுனாமியின் போது ஜப்பான் அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்தில் தொழில் நுட்ப பிரச்சினையில் வேதியல் கோளாறு ஏற்பட்டதே தவிர அணு உலை வெடிக்கவில்லை .
இப்ப நாம கேக்குறது : அப்படீன்னா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜப்பான் விபத்து கிராபிக்ஸா .//
இந்திய அணுமின் கழகம் சொன்னது உண்மைதான் . அணுமின் நிலையங்கள் வெடிக்க முடியாது. புகுஷிமாவில் நடந்ததது என்ன தெரியுமா ? புகுஷிமாவில் அணு உலை வெடிக்கவில்லை. அணு உலையின் வெப்பத்தை தணிக்க கடல் தண்ணீர் செலுதப்பட்டதால் தண்ணீர் மூலக்கூறுகள் பிரிந்து O2 மற்றும் hydrogen ஆக பிரிந்து விட்டது. இப்படி அணு உலையில் தேங்கிய Hydrogen அளவு அதிகமான போது வெண்ணிற புகையை கக்கியபடி கதிரியக்கத்தையும் கொண்டு வந்துவிட்டது. எனவே அணுமின் நிர்வாகம் சொன்னதும் சரிதான் தொலைக்காட்சயில் நீங்கள் பார்த்ததும் சரிதான் . ஆனால் புரிதல் தான் வேறுபட்டுள்ளது.
// இந்திய அணுமின் கழகம் இந்தியாவில் அணு உலை வெடித்தால் அணு உலை வெடிக்கவில்லை தீபாவளிப் பட்டாசுதான் வெடித்தது என்று நம்மை ஏமாற்றாது என்பதற்கு என்ன உத்தரவாதம் .//
நீங்கள் ரொம்ப குறும்புகாரர் .... எப்படியெல்லாம் யோசிக்கிறீர்கள் ... ஹ.. ஹா ...
தீபாவளி வாழ்த்துகள் ..நன்றி
//இப்படி புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடும் இந்திய அணுமின் கழகம் இந்தியாவில் அணு உலை வெடித்தால் அணு உலை வெடிக்கவில்லை தீபாவளிப் பட்டாசுதான் வெடித்தது என்று நம்மை ஏமாற்றாது என்பதற்கு என்ன உத்தரவாதம் .//
ரொம்ப நியாயமான கேள்விதான். ஆனால் இந்த கோமாளிகள்தான் அரசாங்கத்தை நடத்துகிறார்கள் எனபதே நிதர்சனம்...
பகிர்வுக்கு நன்றி..
தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
http://anubhudhi.blogspot.com/
//
அணு உலை வெடிக்கவில்லை தீபாவளிப் பட்டாசுதான் வெடித்தது என்று நம்மை ஏமாற்றாது என்பதற்கு என்ன உத்தரவாதம் .
//
நல்ல கேள்வி
பலரிடம் இதன் விளைவுகளை எடுத்து கூறினாலும் ஏற்க்க முறுப்பது ஏனோ?
தங்கள் உடல்நிலை சீராகிவிட்டதா? கவனித்துக்கொள்ளுங்கள்... பாலா..
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.. நண்பா...
சரியான நகைச்சுவைதான் போங்கள்...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
பூசணிக்காய் தோட்டத்தையே சோத்துக்குள்ள மறைக்கிறீங்க .
என்ன என்ன கதை சொல்றாங்க பாருங்க...
தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பா.
கருத்துரையிடுக