19 அக்டோபர் 2011

கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவாக மேற்கு வங்கத்தில் உண்ணாவிரதம் .

கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் நேற்று (18-10-2011) 12  மணி நேரம் அடையாள உண்ணாவிரதமும் ,ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது .கொல்கத்தா பல்கலைக் கழகத்தின் எதிரில் அமைந்துள்ள கல்லூரி சதுக்கத்தில் உண்ணாவிரதம் நடை பெற்றது .

உண்ணாவிரதத்தில் அறிவியல் அறிஞர்கள் சுஜை பாசு ,சமர் பாக்சி மற்றும் மனோதத்துவ நிபுணர் மேகார் எஞ்சினியர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர் .

இடிந்தகரை உண்ணாவிரதத்துக்கு ஆதரவு தெரிவித்தும் கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மூன்று மொழிகளில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன .


மேலும் அணு உலைக்கு எதிராக பலரிடம் கையெழுத்து பெற்று பிரதமருக்கு அனுப்பப் பட்டது .கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி கூடங்குளம் நோக்கி  யாத்திரை நடத்தவும் பலர் விருப்பம் தெரிவித்தனர் .

Thanks : dianuke.org

23 கருத்துகள்:

rajamelaiyur சொன்னது…

வெற்றி உங்கள் பக்கம்

ராஜா MVS சொன்னது…

''துணிவு மட்டும் இருக்குமென்றால்... எதுவும் கைக்கெட்டும் தூரமே..!'' -விவேகானந்தர்.

ராஜா MVS சொன்னது…

வெற்றி நிச்சயம்... பாலா...

தகவலுக்கு நன்றி... நண்பா...

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

தகவலுக்கு நன்றி.... தொடரட்டும் நீதி கிடைக்கும் வரை...

நட்புடன்.
http://tamilvaasi.blogspot.com/

கல்வெட்டு சொன்னது…

சிந்திப்பதில் மேற்குவங்கமும் தமிழகமும் கொஞ்சம் வித்தியாசமானவர்களோ? 10 பேர் இருந்தாலும் புதியசிந்தனகள் புதிய வரலாறு படைக்கும் விதைகள் போன்றவை.

நன்றி Paschim Banga

*

நன்றி கூடல்பாலா

.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

தீ கிழக்கேயும் பத்தி எரியுதா எரியட்டும், கூடிய விரைவில் கேரளாவிலும் போராட்டம் நடக்கும் என நண்பர்கள் சொல்ல கேட்டேன், நல்லதே நடக்கட்டும்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

காங்கிரஸ் மேலிடம் இந்தியாவின் சாபக்கேடு...!!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

பேருக்கு பின்னால காந்தின்னு பேரை வச்சிகிட்டு, மெத்தனமா இருக்குறவங்களுக்கு சவுக்கடி காத்து இருக்கு....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

மைனஸ் ஓட்டு போட்டுட்டு போன புண்ணியவானே நீயும் உன் சந்ததியும் நல்லா இருங்க....!!!

பெயரில்லா சொன்னது…

வெற்றி நிச்சயம்... பாலா...

Unknown சொன்னது…

பகிர்வுக்கு நன்றி மாப்ள!

SURYAJEEVA சொன்னது…

பற்றி எரியட்டும் பாரத பூமி; எங்கும் அணு உலை வந்து, நம் வாழ்வுக்கு உலை வைக்காமல் இருக்க... இன்குலாப் ஜிந்தாபாத்

M.R சொன்னது…

ஒற்றுமை ஓங்கட்டும் ,வெற்றி கிடைக்கட்டும்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

என்னய்யா அநியாயம் இது... இந்தப்பதிவுக்கும் மைனஸா?

Unknown சொன்னது…

@M.R

நானும் அதே உணர்வோடு வாழ்த்துகிறேன்.

பெயரில்லா சொன்னது…

நெஞ்சைத்தொட்டு
சொல்லுங்கடா.....அமெரிக்காவோட ஒத்துழைப்புல இந்த அணு உலை வந்திருந்தா இப்படித்தான் போராடுவீங்களா....இது சர்வதேச சதி , கிருத்துவன்களின் சதி, அதற்க்கு எதிர்கட்சி பைரவர்கள் குலைக்கின்றன.....உதயகுமாரன் வீழ்வான்....எல்லோரும் உண்மை புரிவார்கள்

மகேந்திரன் சொன்னது…

அனுவுலைக்கு எதிராக
அனைத்து மாநிலங்களும் ஒன்று கூடவேண்டும்.
இன்குலாப் ஜிந்தாபாத்.

கூடல் பாலா சொன்னது…

@பெயரில்லாநெஞ்சை தொட்டு சொல்கிறேன் அமெரிக்கா மூலமாக மட்டுமல்ல எந்த ஒரு நாட்டின் மூலமாக எங்கள் மண்ணில் அணுமின் நிலையம் அமைத்தாலும் அதற்க்கெதிராக போராடுவோம் ...திரு உதயகுமார் அவர்கள் பிரான்ஸ் நாட்டின் உதவியுடன் ஜைத்தாப்பூரில் அமைய இருக்கும் அணு உலைக்கெதிராக மகாராஷ்டிராவில் நடந்த போராட்டத்திலும் சமீபத்தில் கலந்துகொண்டார் என்பதை தங்களுக்கு அறியத்தருகிறேன் ....

கூடல் பாலா சொன்னது…

@பெயரில்லாபெயரும் இல்லை மரியாதை கொடுக்கும் அறிவும் இல்லை ...

Kishore சொன்னது…

Dear Koodal Bala,

When other state people are supporting us, our tamil daily publishing news against us and trying to divide people by caste & religion. My comment is below to the daily. but sure they will not publish.

தினமலர், சிறப்பு நிருபர் என்ற போர்வையில் சில சிரிப்பு, சில்லறைத்தனமான பொய்களை பரப்பி, அதன் மூலம் சில அரைவேக்காடுகளுக்கு தீனி போட்டுக்கொண்டிருக்கிறது. அணு மின் நிலைய போராட்டத்திற்கு நீங்கள் ஆதரவு தெரிவிக்க வேண்டாம். அணு உலைக்கு ஆதரவு என்று வெளிப்படையாக தெரிவிக்கலாம். ஆனால் நடுநிலை என்ற பெயரில் தொடர்ந்து விஷமத்தனமான், உண்மைக்கு முற்றிலும் முரணான, ஒரு மதத்தினரும் , ஒரு சமுதாயத்தினரும் மட்டுமே ஈடுபடும் போராட்டமாக சித்தரிக்க முயலுவது மிகுந்த கண்டனத்திற்குரியது. மீண்டும் மீண்டும் பொய்களையே செய்திகளாக போட்டால் மக்கள் நம்பி விடுவார்களா என்ன? இன்று யாரும் உங்கள் பத்திரிகைகளை மட்டுமே நம்புவதில்லை. உண்மை எது என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். உண்மையை தொடர்ந்து திரித்து எழுதி மக்களிடம் இருந்து விலகிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இருக்கும் , நீங்கள் சம்பாதிக்கும், தமிழ் நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் கொஞ்சமாவது விசுவாசமாக இருங்கள்.

சிறப்பு நிருபர் என்ற பெயரில் அவசராவசரமாக செய்தி வெளியிட வேண்டும் என்பற்காக, அந்த செய்தியில் இருக்கும் தகவல் கூட சரியாய் என்று பார்கவில்லை போலும். உங்கள் இந்த செய்தியில் இருக்கும் தகவல் பிழைகளை கண்டு தென் மாவட்ட மக்கள் சிரியாய் சிரிக்கிறார்கள். எந்த பாதிரியும் , எந்த பிஷப்பும், எந்த குருக்களும் , எந்த சாமியும், எந்த முல்லாவும் , போராட்டத்தில் இருந்து விலகினாலும், ஏன் இதன் ஒருங்கிணைப்பாளர்களே விலகினாலும் கூட இந்த மக்கள் இறுதி வரை போராடுவார்கள். நீங்கள் பெர்னாண்டோ இனம் என்று குறிப்பிட்ட பரதவர்கள் மட்டுமல்ல, கூடங்குளத்தில் அதிகம் வாழும் நாடார்களும், அதன் சுற்று வட்டாரத்தில் வாழும் தேவர்களும், ரெட்டிகளும், ஆசாரிகளும், கோனார்களும் , ஆதி திராவிடர்களும் , இன்னும் நீங்கள் தமிழகத்தில் இருப்பதாக குறிப்பிடும் அத்தனை ஜாதியும் , மத பாகுபாடின்றி போராட திரண்ட கூட்டத்தை சுதந்திர இந்தியாவில் , வேறு எந்த போராட்டத்திலும் பார்த்திருக்க முடியாது. அந்த உறுதியில் கூறுகின்றேன் இந்த போராட்டம் நிச்சயம் வெல்லும்.

பணம் வாங்கியது போராடுபவர்களா? அல்லது பொய் செய்திகளை வெளியிடும் நீயா என்பது எல்லோருக்கும் தெரியும். ஜாதி கூடாது, மதம் கூடாது என்று உன் பத்திரிகையில் பொய் வேஷம் போடுகிறாய். ஆனால் வாங்கிய பணத்திற்கு , ஜாதி மத பேதம் தூண்டி போராட்டத்தை திசை திருப்ப பார்க்கிறாய். கொச்சை படுத்துகிறாய். எல்லாவற்றிற்கும் காலம் பதில் சொல்லும்.

M.R சொன்னது…

அன்பு பாலா ,

தங்கள் உடல் நிலை பற்றிய தகவல் அறிந்தேன் ,மன வருத்தமாக உள்ளது .

வயிற்றுப் புண் ஆறும் வரை காரம் சேர்க்காதீர்கள் ,புளிப்பும் சேர்க்காதீர்கள் ,

அரைக்கீரை,வெந்தயக்கீரை ,சிருகீரை ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

இளநீர் ,புளிப்பில்லாத மோர் எடுத்துக் கொள்ளுங்கள்

வெரும் வயிற்றில் காப்பி ,டீ அருந்தாதீர்கள்.

உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் நண்பரே

அன்புடன்

ரமேஷ்

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

வரவேற்கத்தக்க நிகழ்வு..

Jayadev Das சொன்னது…

எங்கேயோ இருக்கும் பெங்காலிக் காரனுக்கு இருக்கும் அக்கறையும், தமிழன் மேலுள்ள பச்சாதாபமும், தமிழ் நாட்டிலேயே இருக்கும் அரசியல் வியாதிப் பயல்களுக்கு இல்லையே. கொள்ளைக் கூட்டப் பயல்கள் எதை பிடுங்குவதற்கு இன்னும் நடுவண் அரசில் இருக்கானுங்க, உண்மையிலேயே தமிழன் மேல அக்கறை இருந்தா அணு உலையை மூடச் சொல்லுங்கடா... இல்லாட்டி எல்லா நாய்களும் ராஜினாமா பண்ணுங்கடா... கொள்ளைக்காரப் பசங்களா...