12 அக்டோபர் 2011

அணுஉலை : மக்களின் அச்சத்தை போக்க எளிய வழி !

கூடங்குளம் அணு மின் நிலையத்தை     மூடவேண்டும் என்று கோரி நெல்லை ,
குமரி,தூத்துக்குடி மாவட்ட மக்கள்          மிகத்தீவிரமாக போராடி வருகிறார்கள் .
ஆனால்     அரசோ       மக்களின்    அச்சத்தை    போக்குவோம் என்று கூறுகிறது .
ஆனாலும் எவ்வாறு அச்சத்தை போக்குவது என்று அரசு முடிவெடுக்கத் திணறி வருகிறது .

ஏதோ என்னால் இயன்ற வரையில் அச்சத்தை போக்குவதற்குரிய சில வழிகளை சொல்கிறேன் .

அச்சம் 1 :அணு உலை செயல்பட ஆரம்பித்தால் அருகில் வசிக்கும் மக்களுக்கு  புற்று  நோய் வரும் .

அச்சத்தை போக்க : அணுமின் நிலையத்திலிருந்து 10  கிலோமீட்டருக்கு அப்பால் கட்டப்பட்டிருக்கும் ஊழியர் குடியிருப்பை 3  கிலோமீட்டருக்குள் கொண்டுவரவேண்டும் .பயத்தை போக்க விரும்பும் அதிகாரிகள் நிரந்தரமாக கூடங்குளம் பகுதியிலேயே குடியேறவேண்டும் .

அச்சம் 2 :மீன்களுக்கு கதிரியக்க பாதிப்பு ஏற்படும் என்பதால் அதை வாங்க யாரும் முன்வர மாட்டார்கள் .

அச்சத்தை போக்க : அணுமின் நிலையத்தில் பணிபுரிவோர் அனைவரும் இப்பகுதியிலிருந்து பிடிக்கப்படும் மீன்களையே வாங்கி உண்ணவேண்டும் .வியாபாரிகள் மீன்களை வாங்க மறுத்தால் அரசே மீன்களை கொள்முதல் செய்துவிட்டு அதற்குரிய விலையை மீனவர்களுக்கு வழங்கவேண்டும் .

அச்சம் 3 : அணு உலை வெடித்தால் கடுமையான பின்விளைவுகள் ஏற்படும் 

அச்சத்தை போக்க : அணுமின் நிலையத்திலிருந்து 50  கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் வசிக்கும் சுமார் 18 லட்சம் மக்களை 24  மணி நேரத்தில் பாதுகாப்பாக வெளியேற்றியும் உடனடியாக இவர்கள் அனைவருக்கும் அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் .இதை மூன்று முறை ஒத்திகையாக நிகழ்த்தி காண்பிக்கவேண்டும் .

இதுபோல இன்னும் சில அச்சங்களும் அதற்கு தீர்வுகளும் உள்ளன .

ஆனால் இந்த எல்லா அச்சங்களையும் எளிதாக போக்க ஒரு சிறந்த வழி உள்ளது .அது அணு உலையை உடனடியாக மூடிவிடுவதுதான் .

24 கருத்துகள்:

Unknown சொன்னது…

மாப்ள யாரெல்லாம் போலி விழிப்புணர்ச்சி பத்தி பேசி மக்களை பலியிட நினைக்கறாங்களோ...முதல்ல அவங்கள அங்க உக்கார வைக்கனும்யா!

நிவாஸ் சொன்னது…

உண்மைதான் சகா,

விக்கியுலகம் சொல்வது போல், AC உக்காந்துகொண்டு அணுஉலை ஆபத்தில்லை அதை மூட போராட்டம் நடத்த வேண்டாம் என்று சொல்லும் மேதாவிகளை எல்லாம் அகங்கு சென்று குடியிருந்து வாழ்க்கை நடத்த சொன்னால்தான் புரியும்

சக்தி கல்வி மையம் சொன்னது…

கடைசியா ஒரு தீர்வு சொன்னிங்களே அதுதான் சரி..

Admin சொன்னது…

மக்களின் பயத்தை போக்குவதற்கு கடைசியாக சொன்ன அணுமின் நிலைய மூடலே சரியான வழியாகும். பகிர்வுக்கு நன்றி நண்பா!

SURYAJEEVA சொன்னது…

அதை விட சூப்பர் வழின்னு ஒன்னு இருக்கு ன்னு எல்லோரும் சொல்கிறார்கள்... அது சட்டமன்றத்தை கூடங்குளம் பக்கத்தில் கட்டுவதும், இன்னொரு அனு உலை பிரதமர் வீட்டுக்கு பக்கத்தில் கட்டுவதும் என்று பேசிக் கொள்கிறார்கள்...

M.R சொன்னது…

ஆமாம் நண்பரே கடைசி வழிமுறையே சிறந்தது

Unknown சொன்னது…

3 super


ithu than sariyana idea

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

எல்லா அச்சங்களையும் எளிதாக போக்க ஒரு சிறந்த வழி உள்ளது .அது அணு உலையை உடனடியாக மூடிவிடுவதுதான் .

சம்பத்குமார் சொன்னது…

//அணு உலையை உடனடியாக மூடிவிடுவதுதான் .//

இதுதான் மிகச்சிறந்த வழி

பெயரில்லா சொன்னது…

@Abdul Basith

நண்பரே இரண்டுக்கும் பக்கத்தில் இடம் இருந்தால் சொல்லுங்கள் . அணு உலை கட்டலாமே ..!

Unknown சொன்னது…

நல்லா வழி காட்டுனீங்க அண்ணா

கடம்பவன குயில் சொன்னது…

//ஆனால் இந்த எல்லா அச்சங்களையும் எளிதாக போக்க ஒரு சிறந்த வழி உள்ளது .அது அணு உலையை உடனடியாக மூடிவிடுவதுதான் .//

சரியாய் சொன்னீர்கள் சகோ. இதுதான் சரியான முடிவு.

ராஜா MVS சொன்னது…

நெற்றி பொட்டில் அடிப்பதது போல்...

சரியான முடிவு... நண்பா...

K சொன்னது…

வணக்கம் பாலா! நீண்ட நாளைக்கப்புறம் சந்திக்கிறோம்! வேடிக்கையாக சொல்வதுபோல சொல்லி, உண்மையைப் புரிய வைத்துவிட்டீர்கள்! நன்றி!

Admin சொன்னது…

@பெயரில்லா

எந்த இரண்டுக்கும் இடையில்?

புரியவில்லை நண்பரே!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஆனால் இந்த எல்லா அச்சங்களையும் எளிதாக போக்க ஒரு சிறந்த வழி உள்ளது .அது அணு உலையை உடனடியாக மூடிவிடுவதுதான் .//

அதைதானேய்யா கரடியா கத்திகிட்டு இருக்கோம் கொய்யால காதுலேயே வாங்க மாட்டேங்குது அரசாங்கம்...!!! முதல்ல சோனியா பூந்தியை இங்கே குடிவர சொல்லுங்க,பாதுகாப்பா தலைநகர்'ல இருந்துகிட்டு பேட்டி குடுக்குறாங்க ஆக்கங்கெட்ட கூவைகள்....!!!

பெயரில்லா சொன்னது…

@Abdul Basith

நண்பர் மன்னிக்கவும் . சுர்யஜீவாவுக்கு சொன்ன பதில் உங்களுக்கு வந்து விட்டது.

பெயரில்லா சொன்னது…

நீங்கள் அச்சங்கள் என சொல்லுவது எதுவும் நடை பெறாத காரணத்தால் அணு உலையை மூட வேண்டிய அவசியம் இல்லை என் நினைக்கிறேன்.

கோகுல் சொன்னது…

அரசாங்கம் ஒரு அச்சத்தை உருவாக்கிட்டு இருக்கு.அது கரண்ட் கட்.

ஆனா போராடும் மக்கள் இதுக்கெல்லாம் அச்சப்படுவதா தெரியல.படவும் மாட்டாங்க!

மகேந்திரன் சொன்னது…

நீங்கள் சொல்லியிருக்கும் அத்தனை வழிமுறைகளையும்
அவர்கள் நிறைவேற்றி பார்க்க வேண்டும்,
அப்போது அச்சம் தீர்ந்துவிடும்.

சும்மா தூரத்தில இருந்து சாக்குபோக்கு சொல்லிக்கிட்டு,
மக்களை மாக்களாக நினைக்கும் அரசியல்வாதிகளே,
நாட்டை அழித்து கூறுபோட்ட பின்னர் யாருக்கு
மின்சாரம் தயாரிக்கப் போகிறீர்கள்.

எண்ணூர் அனல்மின்சார யூனிட்டை முதலில்
சரி செய்யுங்கள்.. அந்த மின்சாரம் போதும்.

சென்னை பித்தன் சொன்னது…

லாஸ்ட்டே ஃபஸ்ட்!

Jayadev Das சொன்னது…

எல்லாம் நெத்தி அடி!!

Astrologer sathishkumar Erode சொன்னது…

அடேயப்பா அருமையான தீர்வு.மக்கள் போராட்டத்தில் இதை வலியுறுத்த வேண்டும்.எவனும் பேசமாட்டான்

MaduraiGovindaraj சொன்னது…

http://govindarj.blogspot.com/2011/11/2.html

நன்றி கூடல் பாலா

உங்கள் பதிவிற்கு தொடர்பு கொடுத்துள்ளேன்