13 நவம்பர் 2011

கூடங்குளம் பிரச்சினை :முன்னாள் மத்திய அமைச்சர் பல்டி !

கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிராக சில மாதங்களாக தொடர் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன .கடந்த செப்டம்பர் மாதத்தில் 12 நாட்கள் தொடர்ந்து  கால வரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடை பெற்றது .அதில் பல்வேறு தலைவர்கள் கலந்துகொண்டு தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர் .

அவ்வமயம் கலந்துகொண்ட தலைவர்களில் அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் .இவர் கூடங்குளம் அமைந்திருந்த திருச்செந்தூர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதுதான் 1988  ல் இத்திட்டம் துவங்கப் பட்டது .

போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திரு தனுஷ்கோடி ஆதித்தன் தான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதுதான் இத்திட்டம் துவங்கப் பட்டதாகவும் இத்திட்டத்தின் தீமைகள் அப்போது தனக்கு தெரியாது எனவும் குறிப்பிட்டார் .


இடிந்தகரை போராட்டத்தில் தனுஷ்கோடி ஆதித்தன் 

கடந்த செப்டம்பர் 14  ம் தேதி இவ்வாறு கூறிய அவர் இரு தினங்களுக்கு முன் கூடங்குளம் அணு மின் நிலையம் தமிழ் நாட்டிற்கு மிகவும் அவசியம் என்று கூறியுள்ளார் .

இது போலத்தான் பாரதீய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் திரு சரவணாபெருமாள் இடிந்தகரை போராட்டத்தில் கலந்துகொண்டார் .ஆனால் இக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன் ராதா கிருஷ்ணன் அணு மின் நிலையம் தேவை என்கிறார் .

இது போல இரட்டை வேடம் போடும் தலைவர்களிடமும் கட்சிகளிடமும் மக்கள் எச்சரிக்கையாக நடந்துகொள்ளவேண்டும் .

30 கருத்துகள்:

SURYAJEEVA சொன்னது…

இன்று இந்து நாளிதழில் கூடன்குள போராட்டத்தின் உண்மை கட்டுரைகள்...
மக்களின் சொந்த பணத்தில் போராட்டம் நடத்துவதாகவும், வெளிநாட்டு சதியோ, உள்நாட்டு பணக்காரர்களின் தூண்டுதலோ இல்லை என்று வெளியிட்டு உள்ளனர்
பக்கம் எட்டு...

ingulab zindabad

சக்தி கல்வி மையம் சொன்னது…

இதுபோல மக்கள் போராட்டங்களில் அரசியல் வாதிகள் இரட்டை வேடம் போடாமல் இருக்கவேண்டும்..

இல்லையெனில் மக்கள் அவர்களை தூக்கி எறிவார்கள்..

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இந்த கட்சிகளின் அல்லைக்கைகளை தூக்கிவந்து, கூடங்குளத்துல குடித்தனம் வைய்யுங்கய்யா தொல்லை தாங்க முடியல...!!!

கூடல் பாலா சொன்னது…

@suryajeeva மக்களுக்கான தகவல் இது ..பகிர்வுக்கு நன்றி!

ராஜா MVS சொன்னது…

இந்த போராட்டத்தை திசைதிருப்பும் முயற்சியில் பலர் இடுபட்டாலும் அதையெல்லாம் தாண்டி இப்போராட்டம் வெற்றியடைவதை யாராலும் தடுக்க முடியாது...
தங்களின் வாழ்வாதாரத்தை உறுதிப் படுத்த போராடும் மக்களின் எழுச்சி...

பெயரில்லா சொன்னது…

இப்போராட்டம் வெற்றியடைவதை யாராலும் தடுக்க முடியாது...

M.R சொன்னது…

நல்ல கருத்து தான் நண்பரே

Unknown சொன்னது…

மாப்ள இன்னும் என்னன்னா கூத்தெல்லாம் பாக்கனுமோ!

Unknown சொன்னது…

மாப்ள இன்னும் என்னன்னா கூத்தெல்லாம் பாக்கனுமோ!

மகேந்திரன் சொன்னது…

ஆளும் வர்க்கம் எந்தெந்த முறையிலோ
முயற்சி செய்து ஆலையை தொடங்கிவிட எத்தனிக்கிறார்கள்..
மக்கள் சக்தி முடிவில் வெல்லும்...

Learn சொன்னது…

அருமையான கருத்து

இந்திரா சொன்னது…

நல்ல கருத்துக்கள்.

shanmugavel சொன்னது…

அரசியல்வாதிகள் கதை தெரிந்தவிஷயம்தான்,பகிர்வுக்கு நன்றி

துரைடேனியல் சொன்னது…

Anumin Nilaiyam, Arasiyalvaathigal, Aatsiyaalargal, Panam (13,000 Cr.), Makkal ivaikalil Makkale mukkiyam. Marana Vilaiyattu Vendam enpathe Namathu karuththu Sago.

மாய உலகம் சொன்னது…

மக்களின் மனநிலையை எப்பொழுது புரிந்துகொள்வார்கள்...

Muthoot Jawahar சொன்னது…

enna nanbare 5 naalaga entha thagavalum illai

பெயரில்லா சொன்னது…

மத்திய அரசின் மிரட்டல்களும், அடக்குமுறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பு போராட்டக் குழுவினர், சட்ட மற்றும் தார்மீக ரீதியாக மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களிடம் ஆதரவு கோரியுள்ள நிலையில், இப்பிரச்சனை குறித்து ஆராய்ந்த நாங்கள் கீழ்க்கண்ட முடிவுகளுக்கு வருகிறோம்.


http://www.vinavu.com/2011/11/19/stop-koodankulam/

சூனிய விகடன் சொன்னது…

ஒரு ரெண்டு நாயித்துக்கிழமை ஏசப்பாவைக் கும்பிடுற பிராத்தனைக்கூட்டத்தில பாதிரிமாரு அணு ஒலையினால ஆபத்தில்லைன்னு சொன்னா.............. பாதர் சொல்லறாரு ஒரு ஆபத்துமில்லைன்னு கூவப்போற கூட்டத்துக்கு அஞ்சு லட்சம் பத்து லட்சம்னேல்லாம் ஒரு கணக்கில்லை பிரதர். இது மூளைச்சலவை செய்யப்பட்ட கூட்டம்.....
இவர்களின் போராட்டம் அணு உலையே வேண்டாம் என்றா...இல்லை எங்கள் கூடங்குளத்தில் வேண்டாம் ..வேறு எங்காவது கட்டிகொள்ளுங்கள் என்றா...அச்சம் அச்சம் என்ற தெனாலிபுலம்பலைத் தீர்த்து வைக்க எவனாலும் ஆகாது பரமண்டலத்திலிருந்து தான் வர வேண்டும் ..மத்திய மாநில அரசுகளுக்கிடையே உள்ள கண்டும் காணாத போக்கால் தான் இந்த போராட்டம் வெற்றிகரமாக நடக்கிறது....இல்லையெனில் எப்போதே நொண்டியிருக்கும்

நல்லதாக ஒரு முடிவெடுக்கச்சொல்லுங்கள் ...கூடங்குளம் கட்டி முடிக்கப்பட்டு விட்டது இது இயங்கட்டும்..இனி அணு மின் சக்தி என்ற பேச்சே கூடாது.....இனியொரு அணு உலை இந்த இந்தியாவில் தொடங்கக்கூடாது என்று போராடுங்கள்....அல்லது இப்போது தமிழ்நாட்டில் கல்பாக்கம் அணு உலையை இப்போதே மூடவும் என்று போராட சொல்லுங்கள் ....அப்புறம் இந்தியாவில் இயக்க நிலையில் இருக்கும் எல்லா அணு உலைகளையும் மூடுங்கள் என்று போராட சொல்லுங்கள் ...

SamKanna சொன்னது…

@suryajeeva

sorry for my english..

Does any one knows where this place is ?

http://en.wikipedia.org/wiki/India-based_Neutrino_Observatory

Why it was shifted from Nilgris to Theni ?

Why and what is the significance of this Laboratory and its connection with the Kudankulam Nuclear Plant ?

Also please find the details of Neutrino Research in this ....

http://en.wikipedia.org/wiki/Neutrinos#Artificial

பெயரில்லா சொன்னது…

கூடல் பாலா தலைமறைவு......நண்பர் சூர்யஜீவா துக்கம்.......வாங்கிவிட்டீர்களா........" மூடு கூடங்குளம் " வார இதழ் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ad சொன்னது…

உண்மையில் பாதிப்பு ஏற்பட்டால் அது அங்குள்ள பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு மட்டும் ஏற்படும்,நமக்கென்ன சிக்கல்.. நாம் மேலிடங்களுக்கு ஜால்ரா அடிப்போம்,பணத்தை அடிப்போம் என்று நினைத்து செயற்படுவோர் ஏன் -தாமும் இங்குதானிருக்கிறார்களென்பதையும்,ஓரிடத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நாளடைவில் தன்னையும் தன்னுடைய சந்ததியையும் நேரடியாக வந்து சேரும் என்பதையும் உணராதவர்களாக முட்டாள்கள் போல் பேசுகிறார்கள்?

SURYAJEEVA சொன்னது…

@SamKanna

for more info on neutrino
http://rajasankarstamil.blogspot.com/2011/11/46.html

SURYAJEEVA சொன்னது…

தோழர். பெயரில்லா மற்றும் தோழர்.சூனிய விகடன்...
உண்ணாவிரதம் இருப்பது போல் நாடகம் இருப்பது வேறு..
உண்மையாகவே உண்ணாவிரதம் இருப்பது வேறு...
இந்த மக்களின் போராட்டத்தில் உண்மையாகவே உண்ணாவிரதம் இருந்து உணவுக் குழாய் பாதிக்கப் பட்டு ஓய்வில் இருக்கும் ஒரு மனிதனை நையாண்டி செய்வது மனிதனுக்கு அழகல்ல..
மருத்துவர்களின் ஆலோசனைப் படி அவர் உடல் நலம் தேறி வந்தவுடன் உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிப்பார்..
அது வரை ஜோசியம் பார்க்கும் வேலை எல்லாம் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்

leave tamilians alone சொன்னது…

Sorry to opine in English.
It is totally absurd to protest after spending 14,000 crores of ruppees. If these protest leaders were genuine or the so called NGOs representatives they should have campaigned from 1995 or earlier when it was evident.
Recently I visited Tamil Nadu and stayed in Karaikudi and felt the discomfort of having electricity cuts 4 times a day.
My heart goes to the millions of Tamilians suffering from this energy crisis. Just imagine the millions of crores it cost on the damages to the electrical appliances. All the inverters and capacitors and stabilizers are of poor quality. By the way my laptop was damaged.
May the Jesus teach these NGOs reps how to live their lives without hindering others progress.

மழை சொன்னது…

எல்லா அரசியல் பயபுள்ளைங்களும் இப்டித்தான்:(

பெயரில்லா சொன்னது…

டேய் அன்னிய சக்திகளிடம் இருந்து பணம் வாங்கி நீங்கள் செய்யும் இந்த நாடகம் மிக சீக்கிரமே தோற்க்க போகிறது.


உதயகுமார் என்ற கைகூலி துணையோடு நாட்டின் முன்னேற்றத்தை பாதிக்கும் செய்லகளை செய்யும் உன்னை போன்ற ஆட்களை வைத்து முட்டிக்கு முட்டி தட்ட வேண்டும்

மின்சாரம் இல்லாமல் மூட்ப்படும் சிறு குறு நிறுவனங்கள் பல. மின்சாரம் எடுக்கும் விதம் எல்லாம் இயற்க்கைக்கு எதிரானதுதான். இப்படியே போனால் நெல்லை மாவட்ட மக்களை பிற தமிழக மக்கள் புறக்கனிக்கும் போராட்டத்தை தொடங்கலாம்.

பெயரில்லா சொன்னது…

என்ன கூடல் பாலா நேரம் இருந்தால் போய் உன் மேல் விழுந்த புகார்களுக்கு பதில் சொல். எவ்வளவு ரூபா வாங்கின?

பெயரில்லா சொன்னது…

இந்த வலைபூ கூட மத்திய புலனாய்வு நிறுவனத்தால் கண்காணிக்கபடலாம். யாருக்கு தெரியும் இங்கு பின்னோட்டம் போடுப்வர்கள் எத்தனை பேர் கைகூலி ஆட்கள் என்று

ரசிகன் சொன்னது…

ஒரு வாரம் ஊர் சுற்றப் போகிறேன். இணையத்தின் பக்கம் வர முடியாது. அதனால் இப்போதே சொல்லி விடுகிறேன்... வரும் ஆண்டு உங்களுக்கும், உங்களை சார்ந்தவர்களுக்கும், உலகத்துக்கும் இனிமையான ஆண்டாக அமையட்டும்.

நாய் நக்ஸ் சொன்னது…

தாங்கள் உடல் நலம் தெறி வந்ததற்கு
வாழ்த்துக்கள் ...

நலமாக...தாங்கள் பணி சிறக்க
அன்புடன் விழைகிறேன்....