04 நவம்பர் 2011

கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவாக பிரபல விஞ்ஞானிகள் !

கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி தொடர் போராட்டங்கள் நடை பெற்று வருகின்றன .இந்நிலையில் சில நாட்களுக்கு முன் மத்திய அரசு போராட்டக் குழு மற்றும் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்த 15  பேர் கொண்ட குழுவை அமைத்தது .

அதைத்தொடர்ந்து தமிழக அரசு சார்பில் நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 6  பேர் கொண்ட குழு அமைக்கப் பட்டது .

இந்நிலையில் தற்போது அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழு சார்பாக 21 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப் பட்டுள்ளது .இக்குழுவில் பிரபல விஞ்ஞானிகளும் இடம் பெற்றுள்ளனர் .போராட்டக் குழு சார்பில் அமைக்கப் பட்டுள்ள நிபுணர் குழு விபரம்.


1)திரு புத்தி கோட்டா சுப்பாராவ் (அணு சக்தி பொறியாளர்  மற்றும் இந்திய கப்பல் படை முன்னாள் கேப்டன் )

2)திரு பரமேஸ்வரன்(இந்தியாவின் முதல் அணுசக்தி விஞ்ஞானி )

3)திரு சிவாஜி ராவ் (விசாகப்பட்டினம் பல்கலைக் கழக சுற்றுசூழல் மைய  இயக்குனர் )

4)திரு பத்மநாபன் (கதிர் வீச்சு ஆபத்து குறித்த ஐரோப்பிய கமிட்டி உறுப்பினர் )

5)திரு அருணாச்சலம் (நெல்லை பல்கலை கழக பரமகல்யாணி சுற்றுசூழல் அறிவியல் ஆய்வு மைய  தலைவர் )

6)திருமதி சவும்யா  தத்தா (இந்திராகாந்தி சுற்றுசூழல் ஆய்வு மைய முன்னாள் தலைவர்)

7)திரு மெகர் எஞ்சினியர் (அறிவியல் ஆராய்ச்சியாளர் மற்றும் இயற்பியல் வல்லுநர் )

8)திரு சுரேந்திரா கடேகர் (அணு சம்மந்தமான எழுத்தாளர்)

9)திரு அஜ்மல்கான் (அண்ணாமலை பல்கலை கழக கடல்சார் உயிரியல் துறை பேராசிரியர் )

10)திரு லால் மோகன் (இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய  முதுநிலை விஞ்ஞானி)

11)டாக்டர் புகழேந்தி (கல்பாக்கம் சுற்றுசூழல் ஆராய்ச்சி மேற்கொண்டவர்)

12)டாக்டர் ரமேஷ்(கூடங்குளம் புவி அமைப்பு ஆராச்சியாளர்)

13)திரு அனுமந்த  ராவ் (தமிழ்நாடு  மின்சார வாரிய  ஒழுங்குமுறை ஆணைய முன்னாள் உறுப்பினர்)

14)திரு லஜபதி  ராய் (மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் )

15)திரு சுக்லாசென்  (கொல்கத்தா பிரபல பொறியாளர்)

16)திரு சிவக்குமார்(சென்னை பிரேசிடன்சி கல்லூரி முன்னாள் இயற்பியல் துறை தலைவர் )

17)திரு ஜேக்கப் ஜான் (பொருளியல் வல்லுநர்)


18)திரு சர்மா (முன்னாள் இந்திய நிதித்துறை செயலாளர் )

மற்றும்  மூன்று பேர்

இவர்கள் அனைவரும் இணைந்து கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினையை முழுமையாக ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை தரவுள்ளனர் .

34 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இவர்கள் சரியான முடிவை தருவார்கள் என்று நம்புவோம்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நல்லதே நடக்கும், நடக்கணும்...

SURYAJEEVA சொன்னது…

இன்குலாப் ஜிந்தாபாத்... இந்த போராட்டம் தான் இனி வரும் கால கட்டங்களில் இந்தியாவில் எங்கும் அணு உலை அமைக்கப் படாமல் உயிர்களை காக்க போகிறது

பெயரில்லா சொன்னது…

இன்குலாப் ஜிந்தாபாத்...

உணவு உலகம் சொன்னது…

மிக விளக்கமான பகிர்வு.நன்றி சகோதரரே.

இருதயம் சொன்னது…

சகோ .. ஓன்று புரியவில்லை .

//திரு புத்தி கோட்டா சுப்பாராவ் (அணு சக்தி பொறியாளர்
திரு பரமேஸ்வரன்(இந்தியாவின் முதல் அணுசக்தி விஞ்ஞானி )
திரு பத்மநாபன் (கதிர் வீச்சு ஆபத்து குறித்த ஐரோப்பிய கமிட்டி உறுப்பினர் )
திரு லால் மோகன் (இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய முதுநிலை விஞ்ஞானி) //

இவர்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியை அனுசக்தியுடன் கழித்தவர்கள். ஆனால் உங்கள் பதிவுகளில் காணப்படுகிறபடி கான்சரோ , அல்லது கதிரியக்க பாதிப்போ மக்களுக்கு வரவேண்டுமெனில் முதலாவது அனுசக்தியுடன் வேலை செய்பவர்களுக்கு தானே வரவேண்டும் . ஆனால் தங்கள் வாழ்க்கை முழுவதும் அனுசக்தியுடன் கழித்துவிட்டு இன்றும் நலமுடன் வாழும் இவர்களே சாட்சி , " அணுசக்தி தீங்கு செய்யாது " என்பதற்கு ...

மக்கள் யோசிக்கமாட்டார்களா ..? என்ன ...?

shanmugavel சொன்னது…

சரியான விஷயம் .நல்ல முடிவுகளை எதிர்பார்ப்போம்.நல்லது நடக்கும்.

ராஜா MVS சொன்னது…

இந்த போராட்டத்திற்க்கு வெற்றி நிச்சயம்...

அக்கினிக் குஞ்சு சொன்னது…

நல்ல தகவல் நண்பரே. நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைவரும் சிறந்த வல்லுனர்கள் இதில் அநேகர் அணு சக்தி துறையில் பனி புரிந்தவர்கள்.அவர்களே போராட்டக் குழுவிற்கு ஆதரவாக இருக்கும் போது திரு. இருதயம் போன்றவர்கள் ஏன் இப்படி எழுதுகிறார் என்று புரியவில்லை.

கூடல் பாலா சொன்னது…

@இருதயம்உங்களிடம் வாதத் திறமை நன்றாக உள்ளது ...பாராட்டுக்கள் .அணு மின் நிலையத்தில் பணிபுரியும் அனைவருக்கும் நோய் வரும் என்று சொல்ல முடியாது .ஆனால் விகிதாச்சாரம் இயல்பு நிலையை விட அதிகம் .கல்பாக்கம் அணு மின் நிலைய ஊழியர்களுக்கு கதிர்வீச்சு பாதிப்பு இருப்பதை இந்திய அணுமின் கழகம் ஒப்புக்கொண்டுள்ளது .விளக்கமாக அறிய http://koodalbala.blogspot.com/2011/10/npcil.html

பெயரில்லா சொன்னது…

அணு உலை ஆபத்தானது..... மூடு
அணு உலை ஆபத்தானது..... மூடு
அணு உலை ஆபத்தானது..... மூடு
அணு உலை ஆபத்தானது..... மூடு
அணு உலை ஆபத்தானது..... மூடு
அணு உலை ஆபத்தானது..... மூடு அணு உலை ஆபத்தானது..... மூடு அணு உலை ஆபத்தானது..... மூடு
அணு உலை ஆபத்தானது..... மூடு அணு உலை ஆபத்தானது..... மூடு அணு உலை ஆபத்தானது..... மூடு
அணு உலை ஆபத்தானது..... மூடு அணு உலை ஆபத்தானது..... மூடு

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

போராட்டம் வெற்றி பெற அனைவரும் ஒன்று கூடட்டும்...

பெயரில்லா சொன்னது…

அணு உலைகளால் எந்த ஆபத்தும் இல்லை என்றும், அணு உலைக்கு அருகில் வசிப்போருக்கும், அவர்களது சந்ததிக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதையும், தன் மகளைக் காட்டி அணுசக்தி பொறியாளர் நிரூபித்தார். சென்னையில், பாதுகாக்கப்பட்ட கூடங்குளம் அணு உலை நாட்டுக்குத் தேவை என்ற தலைப்பில், விழிப்புணர்வு பிரசார கூட்டம் நடந்தது. இதில், பல்வேறு சமுதாயத் தலைவர்களும், அறிவியலாளர்களும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், சென்னை கல்பாக்கம் அணுமின் உலையில், பல ஆண்டுகள் பணிபுரிந்த மூத்த பொறியாளர் பெரியசாமி என்பவர், தானாக முன்வந்து பேசினார். அணு உலையால், அணு மின் நிலையத்தைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஆபத்து இல்லை என்பதை அவர் வலியுறுத்தினார்.

அவரது பேச்சு விவரம்: நான் ஐ.ஐ.டி.,யில் படித்து பட்டம் பெற்ற சீனியர் இஞ்சினியர். கல்பாக்கம் அணு உலையில், பல ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறேன். இந்த கூட்டம் நடப்பதைத் தெரிந்து கொண்டு, நானாகவே அழைப்பின்றி வந்தேன். அணு மின் நிலையங்களால், யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை. அதுபோன்ற மாயை பரப்பப்படுகிறது. என்னைப் பாருங்கள்; எந்த குறையுமின்றி வாழ்கிறேன். அணு உலைகள் அமைக்கத் துவங்கிய போது, 50 ஆண்டுகளுக்கு முன், அணு உலையில் சிறு, சிறு விபத்துகள் நடந்தன. அமெரிக்காவின், "த்ரீ மைல் ஐலேண்ட்' விபத்துக்கு மனிதத் தவறே காரணம். உலகம் முழுவதும் பேசப்படும் செர்னோபைல் விபத்தும், மனிதத் தவறால், அங்குள்ள ஊழியர்களின் அலட்சியத்தால் நடந்தது. அந்த விபத்தில் மக்களைக் காப்பாற்றவும், கதிரியக்கத்தைத் தடுக்கவும், ரஷ்ய அரசு, 2,500 ராணுவ வீரர்களைப் பயன்படுத்தியது. இதில், 28 வீரர்கள் தெரிந்தே, நாட்டுக்காக உயிர் நீத்தனர். பொதுமக்களில், 15 குழந்தைகளுக்கு அயோடின் மாத்திரையைக் கொடுக்க மாட்டோம் என, அறியாமையுடன் பெற்றோர்கள் அடம்பிடித்ததால், அந்த 15 குழந்தைகள் இறந்தன. இதுதவிர, வேறு பாதிப்பில்லை. இவ்வாறு, பெரியசாமி பேசினார்.

அப்போது, கூட்டத்தில் பங்கேற்ற மூவேந்தர் முன்னணி இயக்கத் தலைவர் டாக்டர் சேதுராமன், "அணு உலையில் பல ஆண்டு பணிபுரிந்த உங்களுக்கு, குழந்தை ஆரோக்கியமாகப் பிறந்ததா' என கேட்டார்.
அதற்கு, பொறியாளர் பெரியசாமி, கூட்டத்தில் அமர்ந்திருந்த தன் மகளைக் காட்டி, இதோ என் மகள் ஆரோக்கியத்துடன் என்னுடன் வந்துள்ளார் என்றார். அப்போது, அனைவரும் கரவொலி எழுப்பினர்.

தினமலருக்கு பாராட்டு : கூடங்குளம் போராட்டம் தொடர்பாகவும், அணு உலைகள் தொடர்பாகவும், "தினமலர்' இதழில் விரிவான செய்திகள் வந்ததை வைத்தே, பல உண்மைகளை அறிய முடிந்தது. பல முறை பெரிய கட்டுரைகளாக இடம் பெற்ற விரிவான செய்திகள், அணு உலைகள் குறித்தும், கூடங்குளம் போராட்டம் குறித்தும், முழுமையாகப் புரிந்து கொள்ள உதவியது என, பலரும் பாராட்டிப் பேசின

பெயரில்லா சொன்னது…

அக்க்கிநிக்குஞ்சு ஒரு பெரும் குஞ்சு ....இருதயம் பாவம் தெரியாமல் எழுதிப்புட்டார்

மகேந்திரன் சொன்னது…

நல்ல செய்தி சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே,
விஞ்ஞானிகள் சேர்ந்திருப்பது போராட்டத்துக்கு
வலு சேர்க்கும்...
வெல்லட்டும் மக்கள் குரல்..

ஹேமா சொன்னது…

நல்ல விஷயங்கள் நடக்க ஒன்றுகூடட்டும் !

பெயரில்லா சொன்னது…

அணுசக்தி அபாயம் குறித்து.

123-agreement.blogspot.com

http://poar-parai.blogspot.com/search/label/123

Unknown சொன்னது…

பாலா உடல்நிலை எப்படி உள்ளது!
கவனிக்க!

அறிவார் நிபுணர் குழு,
பட்டியல் பார்த்தேன்
மத்திய அரசு முடிவேடுத்து
விட்டே வீண் பேச்சு வார்த்தை என
வேடம் போடுகிறது
பார்ப்போம் காலம்
பதில் சொல்லும்

புலவர் சா இராமாநுசம்

Rathnavel Natarajan சொன்னது…

நல்ல பதிவு.
நல்லதே நடக்கட்டும்.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

வலிப்போக்கன் சொன்னது…

விஞ்ஞானியே சொல்லிட்டாருப்பா,அனுஉலையால ஆபத்து இல்லைன்னு.அதனால மாநில சட்டசபை,பாராளுமன்றத்தில அணுஉலயை வச்சுறாம்ல,என்ன நான் சொல்லுறது சரிதானே!

வலிப்போக்கன் சொன்னது…

விஞ்ஞானியே சொல்லிட்டாருப்பா,அனுஉலையால ஆபத்து இல்லைன்னு.அதனால மாநில சட்டசபை,பாராளுமன்றத்தில அணுஉலயை வச்சுறாம்ல,என்ன நான் சொல்லுறது சரிதானே!

பெயரில்லா சொன்னது…

அமெரிக்காவுடன் ஏற்பட்ட, 123 அணு உலை ஒப்பந்தம் அமலுக்கு வர, பல சிக்கல்கள் ஏற்பட்டுவிட்டன. இழப்பீடு சம்பந்தமான இந்திய சட்டத்தை, இங்கு உலைகள் கட்டவிருந்த, அமெரிக்க ஜெனரல் எலக்ட்ரிக் கம்பெனி போன்ற தனியார் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால், இந்திய மண்ணில் அமெரிக்கா கால் வைக்க முடியவில்லை.கூடங்குளம் அணு உலைகள், வெற்றிகரமாகச் செயல்படத் துவங்கினால், ரஷ்யாவே இந்தியாவில் கட்டப்படவுள்ள மற்ற உலைகளைக் கட்டத் துவங்கும். பெரிய இந்திய மார்க்கெட்டை, அமெரிக்கா இழக்கும்; அமெரிக்க ஆசை, நிராசையாகப் போய்விடும்.

அந்நிலையைத் தடுக்கவே, இத்தனை ஆண்டுகளுக்குப் பின், கூடங்குளம் அணு உலை உற்பத்தியைத் துவங்கும் சமயத்தில், இந்த திடீர் போராட்டம்; அதுவும் இத்தனை உக்கிரமாக.லோக்கல் காரணம்மற்றுமொரு முக்கியமான தூண்டுதல், மூன்று மாவட்டங்களின் முக்கிய பிரமுகர்களிடமிருந்து. திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய தென்மாவட்டங்களில், பூமிக்கடியில் அதிகளவு கனிமங்கள் உள்ளன.இவற்றை, சில தனியார் நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக எடுத்து பணத்தை அபரிமிதமாக அள்ளிக் கொண்டிருக்கின்றன. கனிம சாம்ராஜ்யம் நடத்துவோர், எதையும் சாதிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.தற்சமயம் கூடங்குளம் அணுமின் நிலையம் இயங்கத் துவங்கினால், மத்திய அரசு சட்டப்படி, 16 கி.மீ., சுற்றளவுக்கு கனிமங்களை வெட்டி எடுக்கவோ, தொழிற்சாலைகள் அமைக்கவோ, மீன் ஏற்றுமதி நிறுவனங்கள் அமைக்கவோ அனுமதியில்லை என்பது, பெரும் தொழிலதிபர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

அதனால், பல கொழுத்த தொழிலதிபர்களும், கூடங்குளம் போராட்டத்தை ஆதரித்து வருவதோடு, பல உதவிகளையும் செய்து வருகின்றனர்.நிபுணர் குழு ஒன்றை அமைத்து, உலையை ஆய்வு செய்து, மக்களின் அச்சத்தைப் போக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. போராட்டக்காரர்களின் அச்சத்தைப் போக்க முடியுமா?திறந்த மனதுடன் அவர்கள், எதையும் கேட்கத் தயாராயில்லை. அளவுக்கு மீறிய பொய்ப் பிரசாரங்களாலும், துர்போதனைகளாலும், அச்சமும், மனக் கிளர்ச்சியும், அம்மக்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளன.கிளர்ச்சியை முன்னிருந்து நடத்துபவர்கள், சில சமூகக் கட்டுப்பாட்டை தீவிரமாகவும், முழுமையாகவும் பயன்படுத்தி வருகின்றனர். உலகில் இயங்கி வரும், 529 உலைகளிலும், மிகவும் அதிநவீனமான பல பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டது, கூடங்குளம் அணு உலைகள் என, எத்தனை விஞ்ஞான ஆதாரங்களுடன் நிரூபித்தாலும், அவர்கள் காது கொடுத்து கேட்கத் தயாரில்லை.தமிழகத்திலேயே, கல்பாக்கத்தில், 25 ஆண்டுகளாக சிறப்பாகச் செயல்பட்டு வரும், தலைசிறந்த உதாரணத்தை நினைத்துப் பார்க்கவே அவர்கள் விரும்பவில்லை.கல்பாக்கம் உலையைச் சுற்றி, 40 ஆயிரம் மக்கள், எந்த பாதிப்புமின்றி கடந்த கால் நூற்றாண்டு காலமாக வசித்து வருவதையோ, உலையைச் சுற்றி எப்போதும் போல், மீனவர்கள் மீன் பிடித்து வாழ்ந்து வருவதையோ, ஒரு சாதாரண நிர்தட்சயமான உண்மை என்று, கண்டுகொள்ள மறுக்கின்றனர்.

பற்பல லெட்டர்பேடு இயக்கங்கள், இந்த சாக்கில் மக்களைத் தூண்டி விட்டு, தங்களை முன்னிறுத்தி குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றன.இங்குள்ள அரசியல் கட்சிகள் எல்லாவற்றுக்கும், இவையெல்லாம் நன்றாகத் தெரியும். ஆனால், ஓட்டு ஆதாயங்களுக்காக, கூடங்குளம் விவகாரங்களை அரசியலாக்கிக் கொண்டிருக்கின்றன. பாமரத்தனமான பயத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன.உண்மைகள் மறைக்கப்பட்டு, பொய்ப் பிரசாரங்கள் பேயாட்டம் ஆடுகின்றன. இதனால், மின் பற்றாக்குறையால் அல்லலுறும் அப்பாவித் தமிழக மக்கள் தான், ஐயோ பாவம்!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

விளக்கமான பகிர்வு.நன்றி

ம.தி.சுதா சொன்னது…

எல்லோரும் கல்வியில் கரை கண்டவர்கள் நிச்சயம்... நல்ல முடீவே தரவார்கள் என நம்புவோமாக..

உங்கள் சமூகப்பணி தொடரட்டும்... என் உளப்பூர்வ வாழ்த்துக்கள் சகோ...

அருள் சொன்னது…

அணுமின்சாரக் கட்டுக்கதைகளும் கூடங்குளமும்

http://arulgreen.blogspot.com/2011/11/blog-post.html

M.R சொன்னது…

அவர்களின் முடிவு என்னவென்று பார்ப்போம்

வீணாப்போனவன் சொன்னது…

@பெயரில்லாஎப்படி? இப்படியெல்லாம் உங்களால யோசிக்க முடியுது!!!!!!!!!!

வீணாப்போனவன் சொன்னது…

@பெயரில்லாஎப்படி?உங்களால மட்டும் இப்படியெல்லாம் யோசிக்க முடியுது!!!!!

அம்பாளடியாள் சொன்னது…

நல்ல செய்தி நல்லபடி தொடரவேண்டும் .வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு ......

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

நல்லதொரு பகிர்வு

சக்தி கல்வி மையம் சொன்னது…

உங்கள் உடல்நலம் எப்படி இருக்கிறது ஐயா..

சக்தி கல்வி மையம் சொன்னது…

இன்குலாப் ஜிந்தாபாத்...

ரசிகன் சொன்னது…

என்னடா, அந்த பக்கம் கொஞ்சம் பலமா இருக்கேன்னு நெனச்சேன். சபாஷ். தகவலுக்கு நன்றி.

மானுடம் வெல்லும்.

பெயரில்லா சொன்னது…

@பெயரில்லாகல்பாக்கம் மற்றும் 20 இடங்களில் கடந்த 30 ஆண்டுகளாகத் திறமையாக இந்திய அணுசக்திக் கழகம் எந்த ஆபத்துமின்றி அணுசக்தி தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது - இது தான் பல படித்த முட்டாள்களின் வாதமாக இருக்கிறது. தங்களைத் தவிர இந்த நாட்டில் எல்லாரும் மடையர்கள் எனக் கருதும் ஒரு கூட்டமும் இதையே தான் கிளிப்பேச்சு போலத் திரும்பத் திரும்பச் சொல்கிறது. வள்ளுவர் கூறுவது போல் அவர்கள் கூற்றைக் கொஞ்சம் கூர ஆராய்ந்தால் உண்மை புலப்படும். இந்த 20 இடங்களில் தயாரிக்கப்படும் மொத்த மின்சாரம் எவ்வளவு? ...சுமார் 4300 மெகாவாட்...அதாவது சராசரியாக ஒவ்வொரு இடத்திலும் 200 மெகாவாட். ஒவ்வொரு இடத்திலும் கிட்டத்தட்ட 4, 5 யூனிட்டுகளை வைத்து 200 மெகாவாட் உற்பத்தி செய்கிறார்கள். எனக்குத் தெரிந்த கணக்கு ஞானப்படி....ஒரு யூனிட்டின் திறன் 40-50 மெகாவாட் தான். கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ளவை ஒவ்வொரு யூனிட்டும் 1000 மெகாவாட் திறன் கொண்டவை. மொத்தம் 8000 மெகாவாட் வரை நிறுவுவது தான் திட்டம். The fact is that it is a different ballgame altogether. This is kind of first for Indian atomic industry. Moreover, all existing plants in India are more or less experimental in nature...all using Heavy Water. Koodankulam reactors are based on the disastrous Chernobyl model. The claim of cheap power using atomic plant is simply a smokescreen. The only convincing explanation for this plant could be for military-industrial purpose. But after losing the faith of Tamils, expecting Tamil people to accept such a risk for the larger good of North Indian+Tam Brahmin ruling class is just not acceptable. Anyway, they are hoping to break the opposition by making use of gullible sections of Tamil society by advancing arguments like 'to put an end to power crisis of Tamil Nadu', 'for the development of TN' etc. The fact is, TN's power deficit is only 22 crore units a day. But the power given to Karnataka, AP and Kerala in a day from Neyveli plant is 26 crore units.