24 ஜனவரி 2012

அம்மாவுக்கு நன்றிகள் !


வணக்கம் நண்பர்களே .

கடந்த சில மாதங்களாக உடல் நலமில்லாமையால் பிளாக் பக்கம் வர முடியவில்லை .

பல மருத்துவர்களால் எனக்குண்டான உடல் பிரச்சினையை கண்டறிய முடியாமல் இருந்தது .அந்நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நான் கடவுளை மட்டும் நம்பி வீடு திரும்பினேன் .அதன் பின்னர் எல்லாமே நல்லவையாக அமைந்தன .சரியான மருத்துவம் மற்றும் எனது உடல்நிலையை மேம்படுத்த உதவும் உடற்பயிற்சி ஆலோசனைகள் எனக்கு கிடைத்தன .இப்போது எனக்கு உடல்நிலை சரியாகிவிட்டது .

எனக்கு மறுவாழ்வு அளித்த மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அன்னைக்கு இப்பதிவை அர்ப்பணிக்கிறேன் .

32 கருத்துகள்:

Prabu Krishna சொன்னது…

வாருங்கள் சகோ.

மீண்டும் பழைய கூடல் பாலாவாக தொடருங்கள்.

நல்லதே நடக்கும். !!!

இருதயம் சொன்னது…

சகோ , வணக்கம் ,

தங்கள் வரவு எனக்கு மிக்க மகிழ்வை தருகிறது . நல்ல உடல் நலனுடன் இன்னும் பல நூறு ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறேன் .

கூடல் பாலா சொன்னது…

@Prabu Krishna வணக்கம் பிரபு .கடவுள் நினைத்தபடி தொடர்வோம் ....

கூடல் பாலா சொன்னது…

@இருதயம் வணக்கம் நண்பர் இருதயம் .நாம் இருவரும் வெவ்வேறு கருத்துடையவர்களாயினும் தங்கள் நட்பை விரும்புகிறேன் .நல்லதே நடக்க இறைவனை வேண்டுவோம் .நன்றி!

ad சொன்னது…

வாங்க.
அனைத்துக்கோளாறும் நீங்கி வாழ பிரார்த்திக்கிறோம்.

பெயரில்லா சொன்னது…

Welcome back Bala...Missed you during my visit...

உங்கள் உடல் நிலை தேறியது கேட்டு மிக்க மகிழ்ச்சி...அதே வீரியத்தோடு தொடர வாழ்த்துக்கள்...

rajamelaiyur சொன்னது…

நலமாக திரும்பி வந்தமைக்கு சந்தோசம் ..

rajamelaiyur சொன்னது…

உடம்பை பாத்துகொள்ளுங்கள் தலைவா

ஜோசப் இஸ்ரேல் சொன்னது…

அண்ணாச்சி ... அநேக நாட்களுக்கு பிறகு உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி . உங்கள் அலைபேசி எண்ணை மாற்றி விட்டீர்களா ...? உங்களுக்காக நாங்கள் எங்கள் ஜெபங்களில் பிரார்த்தித்தோம் . தேவனுக்கு நன்றி . உடல் நலன் முக்கியம் . Take Care .

Unknown சொன்னது…

அன்பரே!
தாங்கள் உடல்நலம்
பெற்று வந்தமைக்கு மிகவும் மகிழ்ச்சி!
மேலும் உடல் நலம் காக்க
ஆவன செய்யுங்கள்! நல்ல ஓய்வு
தேவை!

சா இராமாநுசம்

Unknown சொன்னது…

அன்பரே!
தாங்கள் உடல்நலம்
பெற்று வந்தமைக்கு மிகவும் மகிழ்ச்சி!
மேலும் உடல் நலம் காக்க
ஆவன செய்யுங்கள்! நல்ல ஓய்வு
தேவை!

சா இராமாநுசம்

நாய் நக்ஸ் சொன்னது…

தாங்கள் மீண்டும் ..பதிவு உலகத்துக்கு வந்தது...எங்களுக்கு எல்லாம் மிக்க மகிழ்ச்சி...
வாருங்கள் பாலா....

ஹேமா சொன்னது…

பாலா...மீண்டும் சுகமாகி வந்தது சந்தோஷம்.நாங்களும் வேண்டிக்கொள்கிறோம்.நல்லதே நடக்கும்.தொடர்ந்துகொள்வோம் !

Mahan.Thamesh சொன்னது…

பாலா அண்ணே நலமா ? தொடர்தும் உங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள் . உங்களுக்காக இறைவனை பிரார்த்திக்கிறேன்.

Unknown சொன்னது…

மாப்ள பாலா welcome back to our உலகம்!

மகேந்திரன் சொன்னது…

வணக்கம் நண்பர் பாலா,
தங்களின் உடல் நலம் நன்று என்று
தெரிவித்தமை எனக்கு
மகிழ்ச்சி அளிக்கிறது...
தங்களின் நல்ல மனதிற்கு எல்லாம்
நல்லா நடக்கும்.
எல்லாம் வல்ல அன்னையின் ஆசி தங்களுக்கு
எப்போதும் உண்டு.. எங்களின் அன்புடன் சேர்த்து...

கூடல் பாலா சொன்னது…

@சுவடுகள் மிக்க நன்றி!

கூடல் பாலா சொன்னது…

@ரெவெரி கடவுள் அருளால் எல்லாம் சிறப்பாக நடக்கும்.நன்றி சகோ !

கூடல் பாலா சொன்னது…

@"என் ராஜபாட்டை"- ராஜா நன்றி சகோ !

கூடல் பாலா சொன்னது…

@கூடல் நண்பன் எனக்காக ஜெபித்ததற்கு நன்றி தம்பி ! கூடங்குளம் பிரச்சினைகள் சுமூகமாக தீர பிரார்த்திப்போம் .

கூடல் பாலா சொன்னது…

@புலவர் சா இராமாநுசம் மிக்க நன்றி ஐயா !

கூடல் பாலா சொன்னது…

@NAAI-NAKKS எனக்கும் மகிழ்ச்சி .நன்றி சகோ !

கூடல் பாலா சொன்னது…

@ஹேமா நன்றி சகோதரி !

கூடல் பாலா சொன்னது…

@Mahan.Thamesh நலமா தமேஷ் .மீண்டும் சந்தித்ததில் மகிழ்ச்சி !

கூடல் பாலா சொன்னது…

@விக்கியுலகம் வணக்கம் மாம்ஸ் .தொடர்வோம் ....

கூடல் பாலா சொன்னது…

@மகேந்திரன் மிக்க நன்றி அண்ணா !

சென்னை பித்தன் சொன்னது…

வாருங்கள் பாலா!தொடர்பவை எல்லாம் நல்லதாகவே இருக்க தென்னாடுடைய சிவனைப் பிரார்த்திக்கிறேன்

ராஜா MVS சொன்னது…

வணக்கம் நண்பா,
தாங்கள் நலமுடன் திரும்பியது மிக்க மகிழ்ச்சி... நண்பா

உடற்பயிற்சியும், உணவு முறைகளையும் மறக்காமல் கடைபிடியுங்கள்... நண்பா...

அன்னையின் ஆசி பரிபூர்ணமாக தங்கள் மேல் பரவ அன்னையை வேண்டுகிறேன்...

எல்லாம் நல்லதே...

A.R.ராஜகோபாலன் சொன்னது…

வணக்கம் ஸார்
நீங்கள் நலமடைந்ததில் மிக்க மகிழ்ச்சி
உங்களின் பதிவுகளை காண ஆவலாக இருக்கிறேன்.

அன்னை உங்களுக்கு துணை இருப்பார்.

Rathnavel Natarajan சொன்னது…

மகிழ்ச்சி. உடம்பை கவனித்துக் கொள்ளுங்கள்.
வாழ்த்துகள்.

Yaathoramani.blogspot.com சொன்னது…

நலம் பெற்றமைக்கு மிக்க மகிழ்ச்சி
தொடர்ந்து நலமாக வாழ மனமார்ந்த வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com சொன்னது…

Tha.ma 9