தற்போது நாட்டில் நிலவும் பிரச்சினைகளில் முக்கியப் பிரச்சினையாக தண்ணீர்
பிரச்சினை உள்ளது .
முல்லைப் பெரியாறு ,காவிரி நீர் பிரச்சினை இன்னும்
வெளியுலகுக்கு தெரியாமல் எத்தனையோ பிரச்சினைகள் உள்ளன .
மனித வாழ்க்கைக்கு
மிகவும் இன்றியமையாதது தண்ணீர் என்பதை திருவள்ளுவரே கூறியுள்ளார் .மனித
நாகரீகம் தோன்றியதே நதிக்கரைகளில்தான் என்பதை நாம் வரலாற்றுக் குறிப்புகள்
வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது .
இந்நிலையில் நம் மக்கள் தண்ணீர்
பிரச்சினைகள் மீது காட்டும் அலட்சியம் எதிர் காலத்தில் உள் நாட்டு
போர்களுக்கும் உலகப் போருக்கும் வழி வகுக்கக் கூடிய வகையில்
அமைந்துள்ளது .
2025 ம் ஆண்டில் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் கடும் குடி நீர்
பஞ்சம் ஏற்பட்டு அதன் காரணமாக போர் நிகழ வாய்ப்புள்ளதாக உலக சுகாதார
நிறுவனம் எச்சரிக்கிறது .
இத்தருணத்தில் ஒரு வரலாற்று நிகழ்வை நினைவு கூற
கடமைப் பட்டுள்ளோம் .
நமது தேசப் பிதாவான காந்தியடிகள் தண்ணீர் சிக்கனத்தை
கடை பிடிப்பதில் மிகுந்த பற்று கொண்டிருந்தார் .அவர் தினமும் அதிகாலையில் பல்
தேய்த்து முகம் கழுவ ஒரு ஜக் நீரை மட்டுமே பயன்படுத்துவார் .ஒரு முறை
காந்தியடிகள் பண்டித நேருவுடன் அலகாபாத்தில் தங்கியிருந்தார் .
ஒரு நாள்
காந்தியடிகள் முகம் கழுவும் நேரத்தில் ஒரு முக்கியமான பிரச்சினை பற்றி
நேருவுடன் பேசிக்கொண்டிருந்ததால் நீரின் மீது கவனம் செலுத்தாமல் முகத்தை
கழுவாமலே நீரை சிந்திவிட்டார் .
அப்போது அதைக் கவனித்த நேரு காந்தியடிகளிடம்
ஜக்கை வாங்கி இன்னொரு ஜக் நீரை எடுத்து வர முற்பட்டார்.ஆனால் காந்தியோ
நேருவைத் தடுத்தார் .எனக்குப் பாத்தியப் பட்டது இந்த ஒரு ஜக் நீர்தான் ,அதை
வீணாக்கியது என் தவறு .அதனால் இன்று முகம் கழுவ வேண்டாம் என்று
கூறிவிட்டார் .
நம் சந்ததியினர் மீதும் நாட்டு மக்களின் மீது எத்தனை அக்கறை
இருந்திருந்தால் காந்தி அவ்வாறு செய்திருப்பார் .
எனவே இன்றைய கால
கட்டத்தில் ஒரு பகுதியில் தண்ணீர் தேவைக்கு அதிகமாகக்கிடைத்தாலும் தேவைக்குமட்டுமே பயன்படுத்தவேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் அது தண்ணீர்
பஞ்சமுள்ளவர்களுக்கோ அல்லது வருங்கால சந்ததியினருக்கோ பயன்படும் .
அதன்
மூலம் இன்று நடப்பது போன்ற தண்ணீர் போர்கள் படிப் படியாகக் குறைந்து நாடு
வளமும் நலமும் அடையும் .காந்தி வழியை நாமும் பின்பற்றுவோமா ....
9 கருத்துகள்:
காந்தியத்தின் கொள்கையை பின்பற்றினால்தான் நாடு அமைதியாக இருக்குமே அப்படி இருந்தால் எப்படி அரசியல் நடத்துவர்கள் நம் அரசியல்வாதிகள்...
மக்கள் பிரச்சனையை கூற உணர தீர்க்க நல்ல தலைவர் யாரும் இல்லை இங்கு...
மிக நல்ல பதிவு ..... நீர் ஆதாரங்கள் வேகமாக குறுகி வரும் சூழலில் தண்ணீர் என்பது மிகவும் விலை மதிப்புள்ளது என்பதை சுட்டி காட்டும் பதிவு . பகிர்வுக்கு நன்றி
காந்தி சொன்னதையெல்லாம் யார் கேட்கிறார்கள் இன்று?
நல்லதோர் பதிவுதான்.ஆனால்,இதை ஏற்று நடப்பவர்கள் எத்தனைபேர் என்றுதான் தெரியவில்லை.
இயற்கையாக கிடைக்கும் வளங்கள் அத்தனையும் எம் எதிர்கால சந்ததியை சென்றடைய நாம் அவ் வளங்களை சிக்கனமாக பயன்படுத்துவதிலே தங்கியுள்ளது . நம்மில் எத்தனை பேர் உணர்த்து செயல்படுகிறோம் . பகிர்வுக்கு நன்றி சகோ .
@கவிதை வீதி... // சௌந்தர் // கருத்துக்கு நன்றி அண்ணா!
@இருதயம் கருத்துக்கு நன்றி சகோதரர் இருதயம்...
@சுவடுகள் கருத்துக்கு நன்றி சகோ!
@Mahan.Thamesh நல்ல கருத்து தமேஷ் !நன்றி!
" Ghandi’s clothing was simple because he believed that if it were more than simple he would be guilty of taking someone else’s share."
காந்தியின் எழிமையை அனைவரும் உணர்ந்தால் உலகம் என்றுமே சுவர்க்கம்; மின் ஆற்றல் பகிர்விலும் கூட! இதனை உணர்ந்தால் ஒரு சிறு தொகுதி மக்களை/அவர்தம் சந்ததியினரை ஆபத்திற்குள்ளாக்குவது எந்தவகையில் நியாயம்?! நிலையான வாழ்க்கை முறைக்கு கீழ்வரும் சுட்டியை சொடுக்குக.
http://www.indiegogo.com/OpenPermaculture
கருத்துரையிடுக