13 பிப்ரவரி 2012

அணுமின் நிலையமா?பவர் கட்டா ? குழப்பத்தில் அரசியல் கட்சிகள் !

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கூடங்குளம் அணு உலைக்கெதிரான போராட்டங்கள் தீவிரமடையத் தொடங்கின .

மக்கள் கூட்டத்தைக் கண்டதும் அரசியல் கட்சியினர் சும்மா இருப்பார்களா என்ன ..ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்கள்.

பல தலைவர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.ஏன் ...இன்று அணு உலைக்கு ஆதரவாகப்  பிரச்சாரம் செய்துவரும் முக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் கூட கலந்து கொண்டனர் .

போராட்டத்தை கலைக்க அரசு எத்தனை முயற்சி செய்தும் பலனளிக்கவில்லை.

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக வரலாறு காணாத வகையில் தமிழகத்தில் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது .இது தானாக நிகழ்கிறதா ..இல்லை திட்டமிட்டே மின்வெட்டு ஏற்படுத்தப் படுகிறதா என்பது மர்மமாகவே உள்ளது .

தற்போது மின்வெட்டைக் கண்டித்து தமிழகமெங்கும் போராட்டங்கள் தொடங்கியுள்ளது .போராட்டம் நடக்கும் சில இடங்களில் கூடங்குளம் அணு உலையை உடனடியாகத் திறக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுப்பப் படுகிறது .

இச்சூழ்நிலை அணு உலையை எதிர்த்து வந்த கட்சிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதுபோல் தோன்றுகிறது.சில கட்சிகள் அணு உலைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன ...சில கட்சிகள் அணு உலை குறித்து வாயே திறப்பதில்லை..சில கட்சிகள் அணு உலைக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கின்றன ..மேலும்  சில கட்சிகள் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கக் காத்திருக்கின்றன .

உண்மையிலேயே மக்களுக்கு தொண்டு செய்வதற்காக இக்கட்சிகள் உருவாக்கப் பட்டிருந்தால் இது போன்ற பிரச்சினைகளில்  தங்கள் நிலையை தெளிவு படுத்தி பிரச்சினைகள் உடனடியாகத் தீர முயற்சி செய்யவேண்டும்.

15 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

மக்களை கூடங்குள அணுமின் நிலையத்திற்கு ஆதரவாக திருப்பவே இந்த அதிக நேரம் மின்வெட்டு என்று நானும் நினைக்கிறேன்...


தீடிரென 8 மணிநேரம் 10 மணிநேர மின்தடை எதனால் உறுவானது என்று எனக்கு தெரியவில்லை.

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

தமிழக அரசு கூடங்குள மக்களின் அச்சத்தை தெளிய வைக்காமல் அல்லது அவர்களின் போராட்டத்திற்கு மதிப்பு அளிக்காமல் அதை துவக்கவே துரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிகிறது...

koodal kanna சொன்னது…

தமிழக அரசு அணு உலைக்கு ஆதரவாகவே செயல் படுவதாக தோன்றுகிறது !

koodal kanna சொன்னது…

தமிழக அரசு அணு உலைக்கு ஆதரவாகவே செயல் படுவதாக தோன்றுகிறது !

மகேந்திரன் சொன்னது…

மின்வெட்டு என்ற ஒரு மாயத்திரையை
கண்முன்னே பரப்பி சரியான நாடகம்
ஒன்றை அரங்கேற்றுகிறார்கள்..

முத்தரசு சொன்னது…

அரசியல் சித்து விளையாட்டு..

நாய் நக்ஸ் சொன்னது…

Ellam...araciyal mayam....

குடந்தை அன்புமணி சொன்னது…

புரிந்து கொண்டவர்களுக்குத்தான் தெரியும்... இந்த மின்தடை எதனால் என்று... புரியாதவர்கள் எதிர்ப்பு போராட்டக்காரர்கள்மேல் ஆத்திரம் கொள்வது இயற்கைதான்... நம் மக்களுக்கு அடுத்தவன் எக்கேடுகெட்டால் என்ன என்ற சுயநலம் அதிகம்...

குடந்தை அன்புமணி சொன்னது…

கூடங்குளம் அணுமின்நிலையத்து ஆதரவு தருபவர்கள் இடிந்தகரைக்கு குடியேற விரும்புவார்களா?

Sankar Gurusamy சொன்னது…

இதுல என்ன சந்தேகம். அரசு திட்டமிட்டுதான் மின் வெட்டு கொடுக்கிறார்கள். இனி தினமும் இவ்வளவுதா மின்சாரம் தரமுடியும் என சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதுதான் நம் அரசாங்கங்கள் மக்களுக்கு சேவை செய்யும் லட்சணம்..

http://anubhudhi.blogspot.in/

rojagreen சொன்னது…

puratchi thalavi in powercut puratchi it is not only affect development of the nation and also affected the study of the school children what can they do

Learn சொன்னது…

என்ன சொல்வது என்றே தெரியல

பெயரில்லா சொன்னது…

மக்களை அணுமின் நிலையத்திற்கு ஆதரவாக திருப்பவே இந்த மின்வெட்டு என்று நானும் நினைக்கிறேன்...

இருதயம் சொன்னது…

திட்டமிட்ட மின்வெட்டு என்று சொல்லும் நண்பர்களே , இரண்டு வருடத்திற்கு முன்பு நீங்கள் உங்கள் வீட்டின் மின் பயன்பாட்டையும் , இப்பொழுது உங்கள் வீட்டின் மின் பயன்பாட்டையும் ஒப்பிட்டு பாருங்கள் . நீங்கள் எவ்வளவு அதிகம் மின்சாரம் பயன்படுத்துகிறீர்கள் என்று உங்களுக்கு தெரியும் . எனவே உயர்ந்து வரும் மின்தேவையை சமாளிக்க மின்சாரம் கொடுக்கும் மின் நிலையங்கள் வரவேண்டாமா ...?

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் ஐயா..... கொஞ்சம் உண்மையுடன் யோசித்து பாருங்கள் .. நன்றி

பெயரில்லா சொன்னது…

Hi,

Same power cut can be utilised in favour of kudankulam struggle also. We have to fight saying stop giving current to kerela, karnataka from Neyveli and make people aware of the current distribution from tamilnadu.