இந்திய வரலாற்றில் முதல்முறையாக 25 ,000 பேர் தங்கள் வாக்காளர் அடையாள அட்டைகளை ஒரே நேரத்தில் திரும்ப ஒப்படைத்துள்ளனர் .
கடந்த 4-05-2012 முதல் நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் 302 பெண்கள் உட்பட 375 பேர் கூடங்குளம் அணு உலையை எதிர்த்து காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர் .உண்ணாவிரதம் ஐந்தாவது நாளை கடந்ததால் பலரது நிலைமை மோசமாகியுள்ளது .ஆனால் அரசு இதை சிறிதும் பொருட் படுத்தவில்லை .
இதன் காரணமாக கூடங்குளத்தைச் சுற்றியுள்ள 7 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் சுமார் 25 ஆயிரம் பேர், தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை தமிழக அரசிடம் திரும்ப கொடுத்துவிடுமாறு, அணுஉலைக்கு எதிரான போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்திய வரலாற்றில் முதல்முறையாக 25 ,000 பேர் தங்கள் வாக்காளர் அடையாள அட்டைகளை ஒரே நேரத்தில் திரும்ப ஒப்படைத்துள்ளனர் .
இந்தியாவில் இதுவரை இப்படி ஒரு நிகழ்வு நடந்தது இல்லை. இவ்வளவு தொகையான மக்கள் ஒரு கோரிக்கைகாக இப்படி ஒரு செய்கையை செய்ததுமில்லை.இது இந்திய ஜனநாயகத்திற்கு பெரும் பின்னைடைவை தேடித் தந்துள்ளது.
அணுஉலையை மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும், இவ்வளவு பேர் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்ட போதும் அரசு அந்த போராட்டத்தை கண்டு கொள்ளாததாலும், தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டையை அரசிடம் திரும்ப ஒப்படைக்கிறோம் என்று இடிந்தகரை, பெருமணல், கூட்டப்புளி, கூடுதாலை, வைராதிகிணறு, தோமையார்புரம், கூட்டுப்பணை ஆகிய 7 கிராமங்களைச் சேர்ந்த 25 ஆயிரம் பொதுமக்கள் கூறியுள்ளனர்.
புதன்கிழமை அன்று மீதிமுள்ள கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டையை உதயகுமாரிடம் ஒப்படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வாக்காளர் அடையாள அட்டைகள் அனைத்தையும் இராதாபுரம் தாசில்தாரிடம் இன்று ஒப்படைக்கவிருப்பதாக போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்திய அரசும் தமிழக அரசும் பொது மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காததால் , இனி வாக்களிக்கும் உரிமை தங்களுக்கு வேண்டாம் எனவும், யாருக்கும் இனி வாக்களிக்க மாட்டோம் எனவும் கூறி அணு உலைக்கு எதிரான மக்கள் இப்படி செய்துள்ளனர். மேலும் இந்தியா போன்ற பெயரளவில் குடியரசாக விளங்கும் நாட்டில் வாக்காளர் அட்டையை அரசுக்கே திரும்ப ஒப்படைத்து அரசின் மீதான அவ நம்பிக்கையை வெளிப்படுத்தி உள்ளனர்.
நேற்றைய உண்ணாவிரத்ததின் முக்கிய நிகழ்வுகளின் காணொளி கீழே ...
5 கருத்துகள்:
வாக்காளர் அடையாள அட்டையை காட்டிலும் ரேசன் கார்டுகள் வலிமையான ஆயுதம் ..!
கூடல் பாலா,
நல்ல அருமையான பதிவு வாழ்த்துக்கள்
போராட்டத்தின் தீவிரம் போதாது...மயிலே மயிலே இறகு போடு என்றால் போடாது ...போடு போடு என்று போட்டால்தான் இறகு போடும்....
சனநாயக நாட்டில் இதனால் பலனிருக்கலாம்! இதுதான் பணநாயக
நாடாயிற்றே!
புலவர் சா இராமாநுசம்
ண்பர் சுரியஜீவா என்கிருதாலும் மேடைக்கு வரவும்
நண்பர் கொலைவெறி ரேவெறி என்கிருதாலும் மேடைக்கு வரவும்
கருத்துரையிடுக