04 மே 2012

கூடங்குளம் : மிகப்பெரும் போராட்டம் மீண்டும் !

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் முதல்  கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூட வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

கூடங்குளம் போராட்டத்தில் நானும் ஒருத்தியாக இருப்பேன் என்று உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா சங்கரன்கோவில் தேர்தல் முடிவடைந்ததும் அணு உலையைத் திறக்க ஆதரவு தெரிவித்தார் .அதனைத் தொடர்ந்து போராட்டக் காரர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது .அதன் காரணமாக போராட்டத்தில் சிறு தொய்வு ஏற்பட்டது.


இந்நிலையில் இன்று (04-05-2012) முதல் சுமார் 300  பெண்கள் அணு உலைக்கெதிராக காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கியுள்ளனர் .


இன்று காலை 11  மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார் .

உண்ணாவிரதம் நடைபெறும் இடிந்தகரைக்கு செல்லும் முக்கிய பாதைகளில் காவல் துறையினர் முற்றுகையிட்டு போராட்டத்திற்கு செல்பவர்களை திருப்பி அனுப்பி வருகின்றனர்.

காவல் துறையினர் எதிர்பையும் மீறி சுமார் 9000  பேர் இன்று உண்ணாவிரதப் பந்தலில் திரண்டிருந்தார்கள் .


இதனிடையே கடந்த 1  ம் தேதிமுதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வரும் 25  பேரில் பலர்   உடல் நிலை பாதிப்படைந்துள்ளது .மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ மனைக்கு எடுத்துச் செல்லப் பட்டார்கள் .

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

வெற்றி வெகு தொலைவில் இல்லை...இன்குலாப் ஜிந்தாபாத்...

பெயரில்லா சொன்னது…

//சூரிய ஒளி, சூரியக் கதிர், சூரிய காந்தம், சூரியப் புயல்,சூரிய வடுக்கள் இவை ஒன்றை ஒன்று சார்ந்தவை ஆனால் வேறானவை. 2012-2013 ஆண்டுகளில் சூரிய வடுக்கள் உச்சமாகிப் பரிதியில் துருவ மாறுபாடு நேரும். அதனால் பூமியில் தீங்குகள் நேரும். நியூஸிலாந்து நிலநடுக்கம், ஜப்பான் புகுஷிமா 9.0 ரிக்டர் பூகம்பம் அசுரச் சுனாமி, தற்போது நேர்ந்த இந்தோனேசியா 8 ரிக்டர் நிலநடுக்கம் ஆகியவை அதன் கோர விளைவுகளே.// என்னும் அறிவியலாளர்கள் எப்படி அணுமின்னுலைகளை ஆதரிக்கிறார்களோ?

பெயரில்லா சொன்னது…

http://jayabarathan.wordpress.com/2007/10/27/nuclear-waste-burial/
//தமிழகத்தில் கூடங்குளம் இரட்டை அணுமின்சக்தி நிலையங்கள் 8000 மெகாவாட் மின்சாரம் பரிமாறும். கனடா டிரென்ட் பல்கலைக் கழகத்தின் பொருளாதரப் பேராசிரியர் டாக்டர் ஹாரி கிட்சென் 2007 ஆம் ஆண்டில் அமைக்கப் போகும் 4000 மெகாவாட் அணுமின் நிலையத்தின் பலன்களை எடுத்துக் காட்டுகிறார்:

1. 19,000 மானிட ஆண்டுகள் (person years) அணுமின் நிலையக் கட்டுமான வேலைகள். அதாவது 2000 நபர்கள் எட்டரை ஆண்டுகள் கட்டுமான வேலையில் ஈடுபடுவார்.

2. 116,000 மானிட ஆண்டுகள் அணுமின் நிலைய இயக்க வேலைகள். அதாவது சுமார் 3000 நபருக்கு 40 ஆண்டுகள் இயக்க வேலைகள் அமையும்.

3. நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆண்டுக்கு 200 மில்லியன் டாலர் பிராந்திய நிதிவள விருத்தி உண்டாகும். அணுமின் நிலையத்தின் ஆயுள் நீடிக்கப்பட்டு 60 ஆண்டுகள் வரை இயங்கலாம்.

4. சொத்துக்கள் மூலம் முனிசிபல் வருமானம் ஆண்டுக்கு 3 மில்லியன் டாலர்.

5. அணுமின் நிலையச் சாதனங்கள் உற்பத்தி, உபரிகள் தயாரிப்புத் தொழிற்துறைகள் விருத்தி, வேலை வாய்ப்புகள்.//
//இந்தியா கனடாவின் காண்டு கனநீர் அணுமின் உலை டிசைன்களை வாங்கிப் பன்மடங்கு அணுமின்சக்தி உற்பத்தியைப் பெருக்கினாலும், கனடாவின் கதிரியக்கக் கழிவுப் புதைப்பு விதி முறைகளை ஏனோ பின்பற்ற வில்லை ! 2003 நவம்பரில் கனடாவின் அணுவியல் கழிவுப் புதைப்புக் குழுவினர், அனைத்து அணு உலைகளின் தீய்ந்த எருக்கட்டுகளின் மொத்த எண்ணிக்கையை வெளிப்படையாக அறிவித்து எப்போது, எங்கே, எவ்விதம், யார் பொறுப்பில் நிறைவேறப் போகிறது என்று அச்சிட்டு, பதிப்புகளை இலவசமாக அளித்து, ஊர் மக்களிடம் விவாத மன்றங்களில் வாதித்து உடன்பாடைப் பெற்றுக் கொண்டது. ஆனால் உலகப் பெரும் குடியரசான பாரத தேசம், அணுவியல் கழிவுப் புதைப்பு விதி முறைகளில் அவ்விதம் இதுவரை நடந்து கொள்ளவில்லை என்பது வருந்தத் தக்க வரலாறு !//

பலசரக்கு சொன்னது…

வெற்றி நிச்சயம்!!