சிரவணனின் கதையை நாம் பலரும் அறிந்திருப்போம்.தாய், தந்தை பாசத்திற்கு
இலக்கணமாக வாழ்ந்தவன் சிரவணன்.வயதான பார்வையற்ற தனது தாய் தந்தையரை
தொட்டிலில் வைத்து தோளில் சுமந்தான் சிரவணன்.
ஆனால் இப்போது அதற்கு நேர்
மாறாகத்தான் அனேக இடங்களில் நடக்கிறது.வயதான பெற்றோர்களை பலர் முதியோர்
இல்லங்களில் சேர்த்துவிடுகின்றனர்.பல பெற்றோர்கள் பிள்ளைகளை வசதியாக வாழ
வைத்துவிட்டு தங்கள் வாழ்கையை நரகமாக கழித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால்
இன்றும் தனது தாயை தோளில் சுமக்கும் ஒரு மகன் இருக்கிறான் என்றால் நம்ப
முடிகிறதா.இவர் பெயர் பல்வீந்தர்சிங் . இவரது தாய்க்கு பார்வை
போய்விட்டது.கடந்த இரண்டரை வருடங்களாக இவர் தனது தாயை தோளில் சுமந்து
பல்வேறு புனிதத் தலங்களுக்கு அழைத்து சென்று வருகிறார்.21 ஆம்
நூற்றாண்டிலும் இப்படி ஒரு மனிதன் வாழ்வது அதிசயமாகத்தானே
உள்ளது.
பெற்றோர்களை சுமக்காவிட்டாலும் பரவாயில்லை அவர்களுக்கு சுமை
ஏற்படுத்தாமலாவது நாம் வாழலாமே.
2 கருத்துகள்:
ஆச்சரியம் தான்...
(த.ம. 1)
இந்த செய்தியை படித்திருக்கிறேன்! கண்டிப்பாய் அவரை போற்ற வேண்டும்! நன்றி!
இன்று என் தளத்தில் இப்படித்தான் சாவேன்! பாப்பாமலர்!http://thalirssb.blogspot.in
கருத்துரையிடுக