09 செப்டம்பர் 2012

கூடங்குளம் அணு உலை அதிரடி முற்றுகை!

கூடங்குளம் அணு உலையை இன்று (09 -09 -2012 )முற்றுகையிடப் போவதாக கூடங்குளம் போராட்டக் குழு அறிவித்திருந்தது. 

எப்படியேனும் இதை தடுக்கவேண்டும் என்ற நோக்கில் சுமார் 5000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  

போராட்டக் குழுவினர் கூடியிருந்த இடிந்தகரையிலிருந்து கூடங்குளத்திற்கு வரும் அதனை சாலைகளையும் போலீசார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர். கூடங்குளம் மார்க்கத்தில் செல்லும் அத்தனை அரசுப் பேருந்துகளும் நிறுத்தப் பட்டன. 


ஆனால் காவல் துறையினர் சற்றும் எதிர் பாரத வகையில் போராட்டக் காரர்கள் சுமார் 10000  பேர்   கடற்கரை வழியாக சென்று பகல் 12  மணியளவில் அணுமின் நிலையத்தை முற்றுகையிட்டனர். 

இதை சற்றும் எதிர்பார்க்காத காவல் துறையினரும் , கலெக்டர் உள்ளிட்டோரும் கால் நடையாக சென்று போராட்டக் குழுவினர் முற்றுகையிட்டுள்ள பகுதிக்கு சென்றனர் ( முற்றுகை பகுதிக்குள் எந்த வாகனமும் நுழைய முடியாது).  


போராட்டக் குழுவினருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியடைந்தது. முற்றுகை நீடிக்கிறது.

7 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

entrum vetri namakke.....!!!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

entrum vetri namakke.....!!!

பெயரில்லா சொன்னது…

டெல்லியிலும் சென்னையிலும் உட்கார்ந்து கொண்டு ஊர் சொத்தை கொள்ளை அடித்து ஊளைச்சதை சேர்க்கும் பட்டாளங்களுக்கு அழிவு காலம் நெருங்கிவிட்டது...

இந்த போராட்டம் இம்மாமக்களின் மறுபக்கத்தை இவர்களுக்கு காட்டும்...

ஒட்டு வாங்கிய பின் முதுகில் குத்தும் ஊழல் பெருச்சாளியும்... முந்தானையில் மறைந்து முதுகெலும்பு தொலைத்த கோழை சிங் கமும் இன்னும் எத்தனை பேரை கொல்லப்போகின்றன...

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்??

பலசரக்கு சொன்னது…

ஒரு குடியரசு நாட்டில் அற வழியில் போராடினால் இப்படியா செய்வது. ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கிலிருந்து விடுபட மத்திய அரசிடம் தமிழ் மக்களை பணயமாக வைத்து விட்டார். இவ்வளவு பெரிய வெற்றியை கொடுத்த மக்களை நம்ப வைத்து கழுத்தறுப்பது நியாயமா?

பலசரக்கு சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பலசரக்கு சொன்னது…

மனித உரிமைக்கு அர்த்தம் தெரியுமா இந்த ஆளும் "மா"க்களுக்கு?

Ki.Ilampirai சொன்னது…

நம்பிக்கை அடிப்படையில் நம் கழுத்தை அறுக்கும் இரண்டு அரசுக்கும் நாம் முடிவு கட்டுவோம் விரைவில். உலை வைத்து உண்டு வாழும் நமக்கு அணு உலையும் வேண்டாம். இப்படிப்பட்ட அநீதி அரசும் வேண்டாம்.