11 மே 2011

உட்கார்ந்த இடத்திலிருந்தே உலகை ரசிக்கலாம் !

     இணைய தளத்தை பயன்படுத்துபவர்கள் பெரும்பாலோனோருக்கு GOOGLE EARTH பற்றி தெரிந்திருக்கும் .GOOGLE EARTH மென்பொருள் பற்றி விளக்கமாக அறிய விரும்புபவர்களுக்கான பதிவு இது .
   
   GOOGLE EARTH மென்பொருள் மூலம் நமது கணினி முன் அமர்ந்தவாறே உலகின் எந்த ஒரு இடத்திற்கும் வினாடிகளில் பயணிக்கலாம் .அதன் மூலம் ஒவ்வொரு நாடுகளின் அமைப்பை நாம் கணினியில் இருந்தவாறே பார்த்து ரசிக்கலாம் .முன் பின் தெரியாத ஊர்களுக்கு செல்லுமுன் இதன் மூலம் அங்கு பயணித்து விட்டு அதன் பின்னர் செல்வோமானால் பயணம் எளிதாக அமையும் . 
     
     இனி இதை எப்படி பயன் படுத்துவது என்பதை பற்றி பார்க்கலாம் .முதலில் இங்கே கிளிக் செய்து GOOGLE EARTH மென்பொருளை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவிக்கொள்ளுங்கள் .

           இது இலவச மென்பொருள்தான் .நிறுவியபின் மென்பொருளை திறக்கவும் .இப்போது கீழே இருப்பது போன்ற ஒரு ஜன்னல் திறக்கும் .பெரிதாக பார்க்க விரும்புபவர்கள் படத்தின் மீது சுட்டவும் .
  1. நீங்கள் எந்த இடத்தை பார்க்க விரும்புகிறீர்களோ அதன் பெயரை இங்கே தட்டச்சு செய்து ENTER அழுத்துங்கள் .இப்போது அந்த இடத்திற்கு  நீங்கள் அழைத்து செல்ல படுவீர்கள் .MOUSE ஐ முன்னும் பின்னும் SCROLL செய்து அருகிலோ அல்லது தூரத்திலோ இருந்து  பார்க்கலாம் .

  2 . நீங்கள் எதாவது இடத்திற்கு பெயர் சூட்ட விரும்பினால் இதை தேர்வு செய்து நீங்கள் விரும்பும் இடத்தில் சுட்டி பெயர்சூட்டலாம் .
 
  3.இதை தேர்வு செய்து சுட்டுவதன் மூலம் இரு ஊர்களுக்கு இடையேயான தூரத்தை அளக்கலாம் .

     4.GOOGLE EARTH  ன் சிறப்பம்சமே இதில்தான் அடங்கியிருக்கிறது .இதை DRAG செய்து ஒரு தெருவில் நிறுத்தினால் அந்த தெரு இயற்கையாக உள்ளபடியே தோற்றமளிக்கும் .அனைத்து இடங்களையும் இது போல பார்வையிட தற்போது வசதி இல்லை என்றாலும் அனேக முக்கிய நகரங்களை பார்வையிட முடிகிறது ,
  
         GOOGLE EARTH ஐ பயன்படுத்தி இப்போதே உலகை வலம்  வரலாம் .

09 மே 2011

பிளாஸ்டிக் ஒழிப்பு -பலே கன்னியாகுமரி மாவட்டம் !

       இந்தியாவின் தெற்கு முனையான குமரி மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்தின் மளிகை கடையில் சென்று மளிகை பொருள் வாங்கினால் கூட  பிளாஸ்டிக் பையில் பொருள் கிடைக்காது .
     பொருள் வாங்க பை எடுத்து செல்லவில்லை என்றால் பை எடுத்து வர சொல்லி கடைகாரர் திருப்பி அனுப்பிவிடுவார் .சாதாரண பெட்டிக்கடை முதல் சூப்பர் மார்க்கெட் வரை எங்கு சென்று பொருள் வாங்கினாலும் இதே நிலைதான் .உண்மையிலேயே இது ஒரு பெரிய விஷயம்தான் .
   பிளாஸ்டிக் பை பயன்படுத்துவதற்கு அரசு தடை விதித்து பல மாதங்களாகியும் அதற்க்கான செயல் பாட்டை எங்குமே காண முடியவில்லை .ஆனால் விதிவிலக்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு மிகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது .
    இதற்கு முக்கிய காரணம் அங்குள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் திரு ராஜேந்திர ரத்னு அவர்களின் அதிரடி நடவடிக்கை .அது மட்டுமல்லாமல் அங்குள்ள மக்களும் முக்கிய காரணம் .குறிப்பாக கிராமங்களில் வசிக்கும் மக்களிடம்கூட பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு நன்றாக உள்ளது .எந்த ஒரு நல்ல திட்டமும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே செயல்படுத்த முடியும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம் .
    எனினும் பேருந்துகளில் பயணிக்கும்போது குமரி மாவட்டத்தில் ஆங்காங்கே பிளாஸ்டிக் பைகள் தென்படுகின்றன .இது குறித்து அங்குள்ளவர்களிடம் வினவியபோது ,கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு நன்றாக செயல்படுத்தப்பட்டு வருகிறது .ஆனால் அருகிலுள்ள நெல்லை மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்பாடு உள்ளதால் அங்கிருந்து வருபவர்கள் மூலமாக இங்கும் பிளாஸ்டிக் கழிவுகள் வந்துவிடுகின்றன என்று கூறினார்கள் .
     எனவே தமிழ் நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் பொது மக்கள் குமரி மாவட்டத்தை பின்பற்றி தமிழகத்தின் சுற்றுசூழலை வளப்படுத்தவேண்டும் .

                                  பலே கன்னியாகுமரி மாவட்டம்!

07 மே 2011

புதிய மின் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழக அரசு சாதனை !

      இதை பார்த்தவுடன் தமிழக அரசை கிண்டல் செய்வதற்காக எழுதப்பட்டதாக தோன்றும் .ஆனால் உண்மையிலேயே தமிழக அரசு செய்த அந்த சாதனயைத்தான் சொல்லப்போகிறேன் .
       ஆனால் இந்த சாதனை சமீபத்தில் நிகழ்ந்தது அல்ல 1954 ம் வருடத்திற்கும் 1963 ம் வருடத்துக்கும் இடையே நிகழ்த்தப்பட்ட சாதனை .இப்போது அநேகருக்கு புரிந்திருக்கும் .ஆம் தன்னலமில்லா தலைவர் பெருந்தலைவர் காமராஜ் ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனை .
        அந்த கால கட்டத்தில் தமிழக அரசின் ஆண்டு வருமானமே 50 கோடிக்கும் குறைவுதான் .ஊழலில்லாமல் ஆட்சி புரிந்தால் என்னென்ன சாதனை நிகழ்த்தலாம் என்பதற்கு இன்றும் உதாரணமாக திகழ்வது காமராஜ் நிறைவேற்றிய  திட்டங்கள்தான் .

இப்போது காமராஜ் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மின் திட்டங்கள் பற்றிய ஒரு பார்வை .

1 . குந்தா நீர் மின் திட்டம் (26 கோடி )
2 .பெரியாறு மின் திட்டம் (10  கோடி )
3 .கும்பார் -அமராவதி மின் திட்டம் (8  கோடி)
4 .மேட்டூர் கீழ்நிலை மின் திட்டம் (12 கோடி )
5 .மோயாறு நீர்மின் திட்டம்
6 .கூடலூர் நீர் மின் திட்டம்
7 .நெய்வேலி அனல் மின் திட்டம்
8 .சமயநல்லூர் அனல் மின் நிலையம்
9 .சென்னை அனல் மின் நிலையம்
10 .கல்பாக்கம் அணு மின் நிலையம் .



       இந்த பத்து மின் திட்டங்களும் காமராஜ் ஆட்சி காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டு அவரது ஆட்சியிலேயே முடிக்கப்பட்டது மேலும் சாண்டியனல்லூர் நீர் மின் திட்டம் ,குந்தா திட்டத்தின் மூன்றாவது பிரிவு,பெரியார் திட்டத்தின் இரண்டாவது பிரிவு ,பரம்பிக்குளம் .ஒக்கேனக்கல் ,பாண்டியாறு ,புன்னம்புழா ,சுருழியாறு ,பரளியாறு ஆகிய நீர் மின் திட்டங்கள் காமராஜ் ஆட்சி காலத்தில் தீட்டப்பட்டு பின்னர் நிறைவேற்றப்பட்டது .
            இதில் இனொன்று கவனிக்க தக்க விஷயம் அவர் செயல் படுத்திய பெரும்பாலான மின் திட்டங்கள் சுற்று சூழலுக்கு பாதிப்பில்லாதவை .
      காமராஜ் ஆட்சிக்கு வருவதற்கு முன் 160  மெகா வாட்டாக இருந்த மின் உற்பத்தி அவரது ஆட்சி முடிகையில் 600  மெகா வாட்டாக உயர்ந்திருந்தது .மிக குறைந்த வருவாயை கொண்டே காமராஜ் இத்தனை திட்டங்களை நிறைவேற்றியுள்ளார் என்றால் இப்போதுள்ள அரசியல் வாதிகளுக்கும் அவருக்கும் உள்ள வித்தியாசம் தெரியும் .

                                         ம்ம்ம்ம் ....அந்த நாள் மீண்டும் வருமா..?

05 மே 2011

சமச்சீர் கல்வி 8 ம் ,9 ம் வகுப்பு பாட புத்தகங்கள் இலவச டவுன்லோடு !

     தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில்  10 ம் வகுப்பிற்கான பாட புத்தகங்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது .தற்போது  9 ம் வகுப்பு மற்றும் 8 ம் வகுப்பிற்கான பாட புத்தகங்கள் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது .இதை அனைவரும் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் .பாட புத்தகங்களை டவுன்லோடு செய்யஇங்கே click செய்யவும் .
       

02 மே 2011

அட்டகாசமான ஐந்து தமிழ் வலை தளங்கள்!

இந்த பதிவில் அனைவரையும் கவரும் வகையில் விளங்கும் ஐந்து தமிழ் வலை தளங்களை  பகிர்கின்றேன் .
         

1.முதலில்சாப்பாடு. நீங்கள் காணப்போகும் இத்தளத்தில் எண்ணற்ற சமையல் குறிப்புகளை சிறந்த சமையல் நிபுணர்களை கொண்டு வழங்கியிருக்கிறார்கள் .சைவம் ,அசைவம் ,டயட் என அனைத்து பிரிவுகளும் உள்ளன .இவை அனைத்தையும் ருசித்து மகிழ இங்கே சுட்டுங்கள்
        
  
2 .அடுத்தபடியாக அனைத்து துறை சார்ந்த கட்டுரைகளை உள்ளடக்கிய தளம் .மேலும் பல்வேறு விஷயங்கள் இங்குள்ளன .திரை நாயகர்கள் ,நாயகிகள் படங்கள் நல்ல தரத்தில் பார்த்து மகிழ இங்கே சுட்டவும் .
       
3.அடுத்தபடியாக ஒரு மிகச்சிறந்த செய்தி பகிர்வுத்தளம் .இந்த தளத்திற்கு சென்றால் செய்தி தாள்களுக்கான இணைய தளங்களை தேடி அலையவேண்டியது இல்லை .அனைத்து பத்திரிகைகளுக்குமான இணையதள இணைப்பு இத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது .இதற்கு  இங்கே சுட்டவும் .
     
4.அடுத்து தமிழ் நாவல் பிரியர்களுக்கு ஓர் பயனுள்ள வலைப்பூ .தமிழில் பிரபலமான அத்தனை நாவல்களையும் இங்கே பதிவிறக்கம் செய்ய முடியும் .மேலும் பல்வேறு பயனுள்ள தகவல்கள் உள்ளன .வலைபூவிற்கு செல்ல இங்கே  சுட்டவும் .
  
5.அடுத்து  செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஒரு சிறந்த தளம் இங்கே.