12 ஆகஸ்ட் 2011

திருநெல்வேலி :அணு உலைகளை மூடக்கோரி 3000 குடும்ப அட்டைகள் அரசிடம் ஒப்படைப்பு ?

தமிழ் நாட்டில் நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் 1000  மெகாவாட் திறன் கொண்ட இரு அணு உலைகள் கடந்த 11  ஆண்டுகளாக கட்டப்பட்டு வருகின்றன .இதில் முதல் அணு உலை கட்டி முடிக்கப் பட்டு டிசம்பரில் செயல் படத் துவங்கும் என அறிவிக்கப் பட்டுள்ளது .


அணு உலை செயல் படத் தயாராகிவிட்ட பின்பும் அணு உலையில் இருந்து கதிர் வீச்சு வெளிப் பட்டால் அருகில் வசிக்கும் மக்களை அதிலிருந்து பாதுகாப்பதற்கு எந்த ஒரு முன்னேற்பாடும் இது வரை செய்யப் படவில்லை .


அணு உலையிலிருந்து மக்களைப் பாதிக்கும் வகையில் கதிர் வீச்சு ஏற்பட்டால் 16  கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் வசிக்கும் மக்கள் 24  மணி நேரத்திற்குள்ளாக அங்கிருந்து வெளியேற்றப் பட வேண்டும் .

கூடங்குளம் அணு உலையிலிருந்து 16  கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் கிட்டத்தட்ட 4  லட்சம் பேர் வசிக்கிறார்கள் .அணு உலையில் விபத்து நேரும் பட்சத்தில் இந்த 4  லட்சம் பேரும் 24  மணி நேரத்திற்குள் அப்புறப் படுத்தப் படவேண்டும் .

அவ்வாறு செய்ய தேவையான வாகன வசதி ,வாகனங்கள் எளிதில் செல்ல தகுந்த சாலை வசதி ,அத்தனை பேரும் பாது காப்பாக தங்க இருப்பிட வசதி மற்றும் அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் தயாராக இருத்தல் அவசியம் .ஆனால் இதில் எதுவும் இதுவரை செய்யப் படாமல் அணு உலையை இயக்க இருக்கிறார்கள் .

இதன் காரணமாக இப்பகுதியில் வசிக்கும் மக்கள் தங்கள் பாதுகாப்பு கருதி அணு உலையை மூட வலியுறுத்தி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் .

இதன் ஒரு பகுதியாக நேற்று (11-8-2011) சுமார் 5000  பேர் திரண்டு வந்து அணு மின் நிலையத்தை முற்றுகை இட தயாராகினர் .ஆனால் முன்னேற்பாடாக காவல் துறையினர் கண்ணீர் புகை குண்டு ,தண்ணீரை பீய்ச்சி அடிக்கும் வாகனங்களை தயார் செய்து விட்ட படியால் மக்கள் முற்றுகைப் போராட்டத்தைக் கை விட்டு விட்டு ஆலோசனையில் இறங்கினர் .

இதன் படி வருகிற 15-8-2011 அன்று அணு உலையிலிருந்து 2  கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் வசிக்கும் சுமார் 3000  குடும்பத்தினர் தங்கள் குடும்ப அட்டைகளை அரசிடம் திரும்ப ஒப்படைக்க முடிவெடுத்துள்ளார்கள் .

மக்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்குமா என்பது இனிதான் தெரிய வரும் .

டிஸ்கி : போராட்டத்தில் கலந்து கொள்ள நானும் சென்ற படியால் நேற்று பதிவும் கருத்துக்களும் இட இயலவில்லை .

17 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

போராட்டத்தில் கலந்து கொள்ள நானும் சென்ற படியால் நேற்று பதிவும் கருத்துக்களும் இட இயலவில்லை .

போராட்டம் பயனுள்ளதாக பலன்ளிக்கப் பிரார்த்திக்கிறேன்.

Prabu Krishna சொன்னது…

இந்தியாவில் எந்த அணு உலையும் முழுப் பாதுகாப்போடு இயங்கவில்லை என்று சொல்லப்படுகிறது. இந்த லட்சணத்தில் புதிது புதிதாக வேறு. இவர்களுக்கு மக்கள் மீது நலன் என்பதே கிடையாதா?

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

விழிப்புணர்வு இன்னும் வளர வேண்டும் .

Unknown சொன்னது…

அரசு எதில் வேகம் காட்டனுமோ அதிலெல்லாம் வேகம் காட்டுவதில்லை ,தேவை இல்லாத வற்றில் நேரம் செலவழித்து கொண்டு இருக்கும் .உங்கள் பங்களிப்பு பாராட்டுக்குரியது

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இந்த கோரிக்கையை அரசு கண்ணுர வேண்டும்....

விழிப்புணர்வு பரவட்டும்...

சக்தி கல்வி மையம் சொன்னது…

சபாஷ் .. சரியான போராட்டம்..

Mathuran சொன்னது…

மக்களிடையே நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது...

koodal kanna சொன்னது…

அரசு எதில் வேகம் காட்டனுமோ அதிலெல்லாம் வேகம் காட்டுவதில்லை ,தேவை இல்லாத வற்றில் நேரம் செலவழித்து கொண்டு இருக்கும் .உங்கள் பங்களிப்பு பாராட்டுக்குரியது

koodal kanna சொன்னது…

அரசு எதில் வேகம் காட்டனுமோ அதிலெல்லாம் வேகம் காட்டுவதில்லை ,தேவை இல்லாத வற்றில் நேரம் செலவழித்து கொண்டு இருக்கும் .உங்கள் பங்களிப்பு பாராட்டுக்குரியது @koodal kanna

M.R சொன்னது…

நல்ல விழிப்புணர்வு பகிர்வு ,

தங்களது போராட்ட உணர்வு பாராட்டத்தகுந்தது .

இதை புகழ்ச்சிக்காக சொல்ல வில்லை .

உண்மையாகவே உங்கள் எண்ணத்தை பாராட்டுகிறேன் .

பார்ப்போம் அரசு என்ன முடிவு எடுக்கிறது என்று ?

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

யோவ் மக்கா என் வீடும் அங்கே பக்கத்துலதாம்ய்யா இருக்கு....!!!

மாய உலகம் சொன்னது…

மக்களுக்கு பாதுக்காப்பு இல்லாத எந்த விசயமானாலும் அதை நிராகரிக்க வேண்டும்...போராட்டம் ஞாயமானதே..உங்கள் போராட்டத்திற்கு விரைவில் பலன் கிட்டட்டும்... வாழ்த்துக்கள் நண்பரே

ம.தி.சுதா சொன்னது…

///மக்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்குமா என்பது இனிதான் தெரிய வரும் .////

எப்பவும் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு சகோதரா

கோகுல் சொன்னது…

அரசு கண்டு கொள்ளுமா?

மகேந்திரன் சொன்னது…

விழிப்புணர்வு இன்னும் வளரவேண்டும்...
இந்த போராட்டம் ஒரு ஆரம்பமே

ராஜா MVS சொன்னது…

நிச்சயம் நல்லதே நடக்கும் நண்பா..,
உங்களின் பங்களிப்புக்கு என் வணக்கங்கள்.

பகிர்வுக்கு நன்றி.., பாலா.

koodal kanna சொன்னது…

மக்களை பற்றி யாருக்குமே கவலை கிடையாது !மக்களுக்கு பாதுக்காப்பு இல்லாத எந்த விசயமானாலும் அதை நிராகரிக்க வேண்டும்...போராட்டம் ஞாயமானதே..உங்கள் போராட்டத்திற்கு விரைவில் பலன் கிட்டட்டும்... வாழ்த்துக்கள் நண்பரே