இந்தியாவிலுள்ள அனைத்து அணு உலைகளையும் மூடக் கோரி விரைவில் நாடு தழுவிய போராட்டங்களை நடத்தவிருப்பதாக பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் விஞ்ஞானி டாக்டர் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார் .
இப்போராட்டங்களில் கலந்துகொள்ள மேலும் பல விஞ்ஞானிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
அணு பொறியியலில் இந்தியாவிலேயே முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்றவர் இவர்தான் .
பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்த அவர் மின் தேவைக்கு அணுசக்தி சிறந்த வழி கிடையாது என 1975 ல் அங்கிருந்து விலகினார் .அணு மின் நிலையங்கள் ஆபத்தானவை எனவும் அவை அனைத்தும் மூடப்படவேண்டியவை என்றும் கூறும் அவர் இந்திய அணுமின் நிலையங்கள் குறித்த பல உண்மைகள் மறைக்கப் படுகின்றன என்றும் கூறுகிறார் .
1974 முதல் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அமெரிக்காவிலுள்ள அணு விஞ்ஞானிகள் அணு உலைகளுக்கு எதிராக போராட்டம் நடத்தியதையும் அதனை ஏற்று 1977 க்கு பிறகு அங்கு அணு உலைகள் புதிதாக கட்டப் படாததையும் நினைவுகூரும் அவர் அமெரிக்காவிலுள்ள பழைய அணுமின் நிலையங்கள் பல ஆபத்து கருதி அனல்மின் நிலையங்களாக மாற்றப்பட்டதாகவும் கூறுகிறார் .
எந்த அணு உலையுமே பாதுகாப்பானவை என்பதற்கு உத்தரவாதம் வழங்க முடியாது என்றும் .அணுமின் நிலையங்கள் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் மலிவானது என்று சாதாரண மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள் என்றும் அணு உலைகளில் கழிவுகளை பராமரிக்க எவ்வளவு செலவாகிறது போன்ற தகவல்கள் ரகசியமாகவே உள்ளன என்கிறார் டாக்டர் பரமேஸ்வரன் .
எந்த அணு உலையுமே பாதுகாப்பானவை என்பதற்கு உத்தரவாதம் வழங்க முடியாது என்றும் .அணுமின் நிலையங்கள் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரம் மலிவானது என்று சாதாரண மக்கள் ஏமாற்றப் படுகிறார்கள் என்றும் அணு உலைகளில் கழிவுகளை பராமரிக்க எவ்வளவு செலவாகிறது போன்ற தகவல்கள் ரகசியமாகவே உள்ளன என்கிறார் டாக்டர் பரமேஸ்வரன் .
இந்திய அணு உலைகளில் பாதுகாப்பு விதிமுறைகள் முற்றிலும் மீறப்படுவதாகவும் அணு உலைகளில் விபத்து நிகழ்ந்தால் 30 கிலோமீட்டருக்குள் வசிக்கும் மக்களை வெளியேற்ற எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை என்றும் அணு உலையைக் குளிர்வித்து கடலில் கலக்கும் நீரிலுள்ள மாசுகளைப் பற்றி யாரும் கவலைப் படுவதில்லை என்றும் அவர் கூறுகிறார் .
இந்திய அணுமின் கழகம் NPCIL 2030 க்குள் நாட்டில் மொத்த மின்தேவையில் 8 சதவீதத்தை பூர்த்தி போவதாகக் கூறுகிறது .இந்திய அணு சக்தியின் தந்தை டாக்டர் ஹோமி பாபா 2000 ஆவது ஆண்டுக்குள் இந்தியாவில் அணுசக்தி மூலம் 140000 மெகாவாட் மின்சாரம் தயாராகும் என்று கூறினார் .ஆனால் இன்று வரை வெறும் 4500 மெகாவாட்டைதான் கடக்க முடிந்துள்ளது என்கிறார் டாக்டர் பரமேஸ்வரன் .
அணு உலையைக் கட்ட பத்து வருடங்கள் ஆகிறது என்றும் அணு உலையின் செயல்பாட்டை நிறுத்த அணு உலையை கட்ட ஆகும் அதே அளவு செலவு ஆகும் .மேலும் இதற்கான தொழில் நுட்பமும் இந்தியாவிடம் கிடையாது என்பதால் வேறு வழியின்றி அணு உலைகளின் ஆயுட்காலத்தை சில ஆண்டுகள் நீட்டிக்க வேண்டியுள்ளது என்கிறார் அவர் .
சமீபத்தில் விபத்து நிகழ்ந்த புகுஷிமா அணு மின் நிலையத்தில் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றிய திருவனந்தபுரத்தை சார்ந்த டாக்டர் யமுனா அணு உலையைக் குளிர்விக்க பயன்படுத்தப் பட்ட கடல் நீர் அப்பகுதியிலுள்ள மொத்த கடல் வளத்தையும் அழிக்கக்கூடியது என்கிறார்.அண்ணாமலை பல்கலை கழகத்தில் கடல் உயிரியல் பேராசிரியராக விளங்கும் டாக்டர் அஜித் குமாரும் இதே கருத்தை கூறுகிறார் .
நன்றி : டி என் எ இந்தியா
23 கருத்துகள்:
இப்போராட்டங்களில் கலந்துகொள்ள மேலும் பல விஞ்ஞானிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .//
வரவேற்க தக்க விசயம் நண்பரே
அன்பு பாலா ,
தங்கள் உடல் நிலை பற்றிய தகவல் அறிந்தேன் ,மன வருத்தமாக உள்ளது .
வயிற்றுப் புண் ஆறும் வரை காரம் சேர்க்காதீர்கள் ,புளிப்பும் சேர்க்காதீர்கள் ,
அரைக்கீரை,வெந்தயக்கீரை ,சிருகீரை ஆகியவற்றைத் தவிர்க்கவும்.
இளநீர் ,புளிப்பில்லாத மோர் எடுத்துக் கொள்ளுங்கள்
வெரும் வயிற்றில் காப்பி ,டீ அருந்தாதீர்கள்.
உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் நண்பரே
அன்புடன்
ரமேஷ்
@M.R என் மீது மிகுந்த அக்கறையோடு நலம் விசாரித்தமைக்கு நன்றி ...ஆலோசனைகளுக்கும் நன்றி ...
உடலை கவனித்துக் கொள்ளுங்கள் நண்பரே! நல்லது நடக்கும்.
விஞ்ஞானிகளும் போராட்டத்தில் சேர்வது கூடுதல் பலம்...
தகவலுக்கு நன்றி... பாலா...
உடலை கவனித்துக் கொள்ளுங்கள்.. நண்பா..
அணு விஞ்ஞானிகள் பேசுவது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விடயம். இன்னும் பல அறிவியாளர்கள் உண்மையை எடுத்துரைத்தாலே மீடியாக்கள் மற்றும் மக்கள் உண்மை நிலையை அறிந்து கொள்வார்கள்...
இன்குலாப் ஜிந்தாபாத்.
அவரது குரல் வளை நெரிக்கப் படலாம். நமது ஒற்றுமை மட்டுமே நம்மை கரை சேர்க்கும்.
அணு பொறியியலில் இந்தியாவிலேயே முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்றவர் இவர்தான் //
இவரை விட நமக்கு இவ்விசயத்தில்
ஞானம் இல்லை தான்.அவரே
இவ்வியசத்தை எதிர்க்கிறார் என்றால்
என்ன சொல்வது நம் அரசாங்கத்தின் நிலைப்பாட்டைப்பற்றி!
நிச்சயம் அவரது கருத்து பாராட்டத்தக்கது.
எத்தனை நிபுணர்கள் எதிர்த்தாலும் மாற மாட்டோம் என அடம்பிடிக்கும் ஒரு அரசை என்ன செய்ய?
ரமேஷின் ஆலோசனைகளைக் கருத்தில் கொள்ளுங்கள் பாலா! ஆரோக்கியம் மிக முக்கியம்!
உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள் பாலா, சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்....
சுவர் இருந்தால் தான் சித்திரம் பாலா...உடலை கவனித்துக் கொள்ளுங்கள்.
இந்தியா முழுவதும் எதிர்ப்பு வலுக்கிறது எல்லாம் நன்மைக்கே...
//இப்போராட்டங்களில் கலந்துகொள்ள மேலும் பல விஞ்ஞானிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .//
ஆதரவுக்கரம் நீண்டு கொண்டே செல்வது நம்பிக்கையளிக்கிறது நண்பரே..
இன்குலாப் ஜிந்தாபாத்..
உடலை பார்த்துக்கொள்ளுங்கள் நண்பரே!
அணு ஆராய்ச்சி விஞ்ஞானைகளே எதிர்ப்பு தெரிவிக்கும்போது... இந்த அரசு யோசிக்க வேண்டாமா... பகிர்வுக்கு நன்றி நண்பரே!
மாப்ள சுவர் இருந்தாதான் சித்திரம் எழுத முடியும்..உடலை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள் பகிர்வுக்கு நன்றி!
அணு உலையில் உற்பத்தியும் கம்மி, ஆபத்தும் அதிகம், சுற்றுப் புறச் சூழல் பாதிப்பு, மக்களின் உயிர் ஆகியவற்றுக்கு ஆபத்து, இத்தனையும் இருந்தும் இந்த மாதிரியான உண்மைகளை தினமலர் போன்ற பத்திரிகைகள் மூடி மறைத்து, அணு உலை இல்லாவிட்டால் நாட்டில் மின்சாரமே இல்லை என்பது போல செய்திகளை வெளியிடுகின்றன. அணு உலை பாதுகாப்பானது என்றால் தில்லியிலேயே அதை வைக்கலாமே? யாரோ வெளிநாட்டுக்காரன் கிட்ட கமிஷன் வாங்கிவிட்டு அதற்க்கு நரியுள்ள நாயாக நமது அரசியல் வாதிகள் செயல்படுகின்றனர். நம்மை ஆட்சி செய்து வந்த இரண்டு 'கலக'ங்களுக்கும் பணம் சேர்ப்பது பிள்ளைகுட்டிகள் சவுகரியம் என்றுதான் பார்த்தார்களே தவிர மக்கள் நலனை பார்க்கவே இல்லை, அது அவர்களது கவலையும் இல்லை. இதை ஆரம்பத்திலேயே எதிர்த்து நிறுத்தி இருக்க வேண்டும், இப்போது காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது என்ற கதையாகி விட்டது.
Thank you Koodal Bala for your one more article supporting our protest.
அன்பு நண்பரே,
கூறிய அத்தனையும் உண்மைகள்.
தகவல்களுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.
உடல் நலம் எப்படி இருக்கிறது?
கவனமாக இருங்கள்.
பாலா!
தொடக்கமுதலே
நான் தொலைபேசி வழியாகவும்
கருத்துரை மூலமாகவும் சொன்ன
தெல்லாம் உடல் நலம் காக்க என்பதை
தங்களுக்கு மீண்டும் நினைவு படுத்துகிறேன்
அன்புள்ள
புலவர் சா இராமாநுசம்
சகோ எல்ல அணு ஆலைகளையும் மத்திய அரசின் வீட்டுக்கு பக்கத்தில வச்சா என்ன?
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாவி உயிர்களுக்காய் ஏங்கும் பச்சோந்தி ப.சிதம்பரத்தின் கோரப் பற்கள்
இவை எதை பற்றியும் நமது 23 புலிகேசி பிரதமருக்கு அக்கறை இல்லை. செத்தால் அது தமிழன் உயிர் அதற்கு அவர் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும். வெள்ளை தோலுக்கும் அவர்கள் கட்டளைக்கும் இவர் எத்தனை கோடி தமிழர்களை வேண்டுமானாலும்கூட பழி இடுவார்... நம் தேசத்தின் நல்ல நேரத்தில் ஒரு கெட்ட தலைமை அதன் காதில் இயம் காய்ச்சி ஊத்தபட்டு இருக்கிறது.
கருத்துரையிடுக