28 அக்டோபர் 2011

உலக மக்களே ....இக்குழந்தைகளுக்கு ஒரு உதவி...

கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி நெல்லை ,குமரி,தூத்துக்குடி மாவட்ட மக்கள் இரு மாதமாக மிகத் தீவிரமாக போராடி வருகின்றனர் .அதிலும் இப்பகுதி பள்ளிக் குழந்தைகளிடையே போராட்ட ஆர்வம் மிகுதியாக உள்ளது .தற்போது இடிந்தகரையில் தொடர் உண்ணாவிரதம் நடை பெற்று வருகிறது .

இந்நிலையில் இடிந்தகரை குழந்தைகள் உலக மக்களுக்கு அதிலும் குறிப்பாக இந்தியாவுடன் அணு சக்தி ஒப்பந்தம் மேற்கொண்டு வரும் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாட்டு மக்களுக்கு கடல் வழியாக கடிதங்கள் அனுப்பியுள்ளனர் .அக்கடிதத்தில் அணு உலைகளால் ஏற்படும் ஆபத்துக்களை உணர்ந்து உலகிலுள்ள பல்வேறு நாடுகளும் அணுமின் நிலையங்களை மூடிவருகின்றன ஆனால் வியாபார நிமித்தமாக உங்கள் அரசு இந்தியாவிடம் அணு சக்தி ஒப்பந்தம் செய்து எங்களை அழிக்கப் பார்க்கிறது .எனவே நீங்கள் இதுபோன்ற ஒப்பந்தங்கள் வேண்டாம் என்று உங்கள் நாட்டு அரசாங்கத்தை வலியுறுத்துங்கள் என்பது போன்ற கருத்துக்களை எழுதியுள்ளனர் .

கடிதங்கள் பாதுகாப்பாக மரப் பெட்டியில் வைத்து அடைக்கப் பட்டு கரையிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை விசைப் படகின் வாயிலாக கடலினுள் சென்று குழந்தைகள் மூலமாக மிதக்க விடப் பட்டன .

கடிதங்கள் தாங்கிய பெட்டிகள் நீங்கள் வசிக்கும் பகுதியை வந்தடைந்தாலும் அது சேரவேண்டிய இடத்திற்கு கடல்வழியாக அனுப்புங்கள் .இதுதான் நீங்கள் இக்குழந்தைகளுக்கு செய்யவேண்டிய உதவி .

12 கருத்துகள்:

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

வித்தியாசமான முயற்சி

Unknown சொன்னது…

ம்ம்...தேவையான விஷயம்!!

பெயரில்லா சொன்னது…

கண்டிப்பாக...

மகேந்திரன் சொன்னது…

நிச்சயம் செய்கிறோம் நண்பரே.....

சென்னை பித்தன் சொன்னது…

இந்த முயற்சி வெற்றி பெற அனைவரும் உதவ வேண்டும்!பிரார்த்திக்கிறேன்.

மாய உலகம் சொன்னது…

இந்த வித்தியாசமான முயற்சி பெரிய ஒரு மாற்றத்தை உருவாக்கலாம்... பகிர்வுக்கு நன்றி நண்பரே!

கோகுல் சொன்னது…

வித்தியாச முயற்சி.செய்வோம்

SURYAJEEVA சொன்னது…

தரை வழி கடிதம், வான் வழி கடிதம்...
புதுமையாக கடல் நீர் வழி கடிதமா?
நல்லா இருக்கு

M.R சொன்னது…

நிச்சயம் செய்ய வேண்டும் நண்பர்களே

பெயரில்லா சொன்னது…

சூர்யஜீவான்னு ஒருத்தர் வந்து ஆஹா ஓஹோம்பாரே....காணுமே...

ரசிகன் சொன்னது…

சின்ன புள்ளைங்களுக்கெல்லாம் தெரியுது...

நிரூபன் சொன்னது…

நல்ல சேதி அண்ணா,
நானும் கண்டால் செய்கிறேன்.